"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, December 30, 2010

பயணம் - கேதர்நாத்க்கு. நிறைவு

11.08.2010 அன்று நன்கு ஓய்வுக்குப் பின் எங்களுடன் வந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சமையல் குழுவினருக்கு எங்களுடைய பங்களிப்பாக இயன்ற நன்கொடைகளை கொடுத்தோம் அமைப்பாளர்கள் என்னதான் சேவைக்கட்டணம் பேசி இருந்தாலும், அவர்களின் உழைப்பு நம்ம ஊரைப்போல் காசுக்காக என இல்லாமல் ஒவ்வொரு கணமும் முகம் சுளிக்காமல் எங்கள் முழுமையான பாதுகாப்புக்கும், பயணத்திற்கும் உத்தரவாதம் தந்தார்கள். மகிழ்ச்சியுடன் எங்கள் அன்பை ஏற்றுக் கொண்டனர்.

Thursday, December 23, 2010

இனிய பயணம் - கேதர்நாத்க்கு..15

பிரகாரத்தைச் சுற்றி வந்த பின் கோவிலின் இடதுபுறம் வெளியே உள்ள சிவபிண்டா எனப்படும் ஜோதிர்லிங்கத்தைத் தரிசனம் செய்தோம். வெண்மைநிறத்திலான லிங்கம் அதன் வடிவம் என்ன எனத் தெரியவில்லை. அனேகமாக பிரபஞ்சவடிவமாக இருக்கலாம் (நீ போய் பாத்தியான்னு அங்க யாரு கேட்கிறது) கோவிலின் ஆராவாரமில்லாமல், மிக அமைதியான இடமாக இருந்தது. கண்ணை மூடி உட்கார நேரம் போனதே தெரியவில்லை. (யாரது அது நல்ல தூக்கமான்னு கேட்கிறது)

Monday, December 20, 2010

தமி்ழ் மணம் விருதுகள் 2010 - சில குறிப்புகள்

நண்பர்களே தமிழ் மணம் விருதுகள் நிகழ்ச்சிக்கு ஓட்டுப்போட நான் படிக்க வேண்டிய இடுகைகள் மொத்தம் 1511 இடுகைகள்,  இருபது தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளது.


1)பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)               291

2)பிரிவு: காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)   45

Monday, December 13, 2010

இனிய பயணம் கேதார்நாத்க்கு - 14

குதிரை பயணம் ஆரம்பத்தில் எனக்கு எளிதாகத் தெரிந்தது. போகப்போக அதன் சிரமங்கள் புரியத் துவங்கின:) குதிரைப் பயணத்தில் மிக முக்கியம் முன்னே பார்த்து ரசிப்பதை விட நாம் கால் வைத்திருக்கும் இடத்தில் கவனம் அதிகம் இருக்க வேண்டும்.

எதிரே வரும் குதிரைகள் உரசும். அல்லது நம் குதிரை செல்லும்போது நமது கால் பக்கவாட்டில் பாறைகள், இரும்பு பைப் தடுப்பில் மோத வாய்ப்பு உண்டு. அதனால் இரண்டு கால்களையும் சமயத்திற்கு ஏற்றாற்போல் உள்ளடக்கி, மேலே தூக்கி சமாளித்துக்கொள்ள வேண்டும். இன்னும் எதிரே மோத வரும் குதிரையை தள்ளிக்கூட விடவேண்டி வரும்:)

Thursday, December 9, 2010

இனிய பயணம் - கேதர்நாத்க்கு..13

08.08.2010 அன்று காலையில் கிளம்பி கேதார்நாத் செல்ல ஆயத்தம் ஆனோம். உத்தர்காசியிலிருந்து ஸ்ரீநகர், குப்த காசி வழியாகச் சென்று கேதார்நாத் அடிவாரமான கெளரிகுந்த்-ல் தங்குவதாகத் திட்டம். பயண நேரம் சுமார் 10 மணி நேரம் ஆகலாம் எனத்தெரிந்ததால் காலை உணவை ஏழரை மணி அளவில் முடித்துக்கொண்டு 8 மணிக்குக்கு பேருந்தில் ஏறி கிளம்பினோம்.

Tuesday, November 30, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12

பாறை விழுந்த பாதை துண்டிக்கப்பட்ட இடத்திற்கு மறுபுறம் நடந்து சென்றபோது அந்தப்பகுதியில் நிறைய வாகனங்கள் கீழிறங்க வழி இல்லாமல் காத்திருந்தன.

அதே சமயம் அங்கே உள்ள வாடகை வேன்கள், சிறு பேருந்துகள் காத்திருந்தன. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது இவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று!!. இரண்டு பேருந்துகள், இரண்டு ஜீப்புகள் வாடகைக்கு அமர்த்தினோம். இதற்கு 40000 ரூபாய் கூடுதல் செலவுதான்.

Wednesday, November 24, 2010

லிவிங் டு கெதர்..... (18+)

லிவிங் டு கெதர் என்பது என்ன.. இது சரியா தவறா என்பதைவிட இதன் விளைவுகள் என்ன? சாதக பாதகங்கள் என்ன? இது தேவையா எனப் பார்ப்போம்.

லிவிங் டு கெதர் என்றால் என்னுடைய புரிதல் வயது வந்த ஆணும் பெண்ணும் இருவராக சேர்ந்து வசித்துப் பார்ப்போம். எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் இணைந்து வாழலாம். இல்லையெனில் பிரிந்துவிடலாம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சி என வைத்துக்கொள்கிறேன்.

Tuesday, November 23, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..11

குளித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு மெதுவாக வெளியேறி புகைப்படங்கள் எடுத்துவிட்டு பேருந்துகளைப் பார்த்தேன். மூன்று பேருந்துகளே கண்ணில்பட்டன. பார்க்கிங் வசதியெல்லாம் கிடையாது. எனவே தள்ளி மற்ற இரு பேருந்துகளை நிறுத்தி இருப்பார்கள் என நினைத்தேன். அப்போதுதான் நான்காவது பேருந்து வந்து சேர்ந்தது. அதில் இருந்து 50 பேர் இறங்கினர். இருமடங்கு நண்பர்கள் அதில்வர பின்னே வந்த வண்டி வழியில்
பாறைச்சரிவுக்கு அப்பால் மாட்டிக்கொண்டதாகவும் நான்காவது வந்த பேருந்தின் பின்புறம் சுமார் 5 அல்லது 6 தூர வித்தியாசத்தில் பெரிய பாறை விழுந்தது எனச் சொல்ல அதிர்ச்சியாக இருநதது. அதன் உண்மைத்தன்மை மனதில் சுர்ர்ரென உரைத்தது.

Monday, November 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..10

காங்னானி என்ற இடத்தை சென்று சேர்ந்தோம். இங்கு என்ன விசேசம் என்றால் வெந்நீர் ஊற்றுதான்:) எனக்கு வெந்நீர் ஊற்றை முன்னபின்னே பார்த்தது இல்லையா! அதுனால அது எப்படி இருக்கும். தேங்கியிருக்கும் குட்டைபோல் இருக்குமா? நீர் ஆதாரம் கீழே இருந்து வருமா? என்கிற யோசனை எல்லாம் மனதில் ஓடியது. பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களுடன் வெந்நீர் ஊற்றைத் தேடிக்கொண்டே ரோடில் நடந்து போனோம். எங்குமே காணவில்லை. விசாரித்ததில் பஸ் நின்ற இடத்திலேயே கடைகள் நிறைய இருந்தன. அதற்கிடையில் மேலே படியில் ஏறிப்போகச் சொன்னார்கள்.

Wednesday, November 10, 2010

இதுதான் திருப்பூர். 10.11.2010

தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னர் புதன்கிழமை வங்கிக்கு பணம் எடுக்க சென்றேன். சரியான கூட்டம். காலை 11 மணிக்கு சென்றேன். செக்கைக் கொடுத்து டோக்கன் வாங்கினேன்.  "அப்புறம் வாங்க பணம் குறைவாக இருக்குது". என வங்கி அலுவலர் சொல்ல அடிக்கடி சென்று பழக்கமானதால் சரி என  வந்து விட்டேன்.

Thursday, November 4, 2010

வருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள் - (ஹாக்கிங்ஸ்)

பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார். நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ:

Monday, November 1, 2010

மனித உருவில்...மனதின் கோரம்

ரஞ்சித்குமார் ஜெயின்(40); துணிக்கடை வைத்துள்ள இவர் நூல் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது மகள் முஸ்கின்(11), மகன் ரித்திக்(8). இருவரும் தனியார் பள்ளியில் 5 மற்றும் 3ம் வகுப்பில் படித்து வந்தனர். கடந்த வெள்ளியன்று, குழந்தைகள் இருவரும் பள்ளி செல்வதற்காக வீட்டருகே, ஆம்னி வேனுக்காக காத்திருந்தனர். அப்போது வந்த ஆம்னி வேனில் ஏறிய இருவரும் கடத்தப்பட்டனர்......

Wednesday, October 27, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..9

இயற்கை வைத்தியம் குறித்து எங்களுடன் வந்த டாக்டர் திரு.சுப்ரமணியம் அவர்கள் உரை நிகழ்த்த அனைவரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.சூரியன் மெல்ல மறையத் தொடங்க, நேரம் மாலை 6.45 க்கு மேல் ஆகிவிட்டது. மலைப்பிரதேசத்தில் சூரியன் மறைய நேரம் ஆவதுபோல் உணர முடிந்தது.

சரி இனி பேருந்திலேயே தங்க வேண்டியதுதான் என சிந்தனை செய்து கொண்டே சாலையைத் தாண்டி பேருந்துக்கு வந்தேன், ரோடில் வேன் ஒன்று வந்தது.அருகில் உள்ள ஊரிலிருந்து அதுபோல் அடிக்கடி வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. சற்று நம்பிக்கையுடன் உயரே பார்க்க வரிசையாக வாகனங்கள் மலைமீது இருந்து இறங்கி வர ஆரம்பித்தது தெரிந்தது.

Wednesday, October 13, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..8


ரிஷிகேஷ்லிருந்து கங்கை நதிக்கு செல்லும் வழி, மற்றும் ஊருக்குள் எனக்குத்தெரிந்தவரை இறைச்சி விற்கும் கடைகள் எங்குமே இல்லை. மதுபானக் கடைகளும் இல்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை அக்கறையோடு நடத்துவதும், இறைச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதையும் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. மக்கள் சரியாக இருந்தால் அரசைக் குறை சொல்ல வேண்டியதில்லை:).

Thursday, September 30, 2010

பயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..

ரிஷிகேஷில் கங்கையிலும் வெள்ளம், கரையிலும் பக்தர்கள் வெள்ளம் என்றால் மிகையில்லை. பாலத்தில் நடக்கக்கூட இடமில்லாத அளவு கூட்டம். நானும் இன்னும் இரு நண்பர்கள் மட்டும் சிறு குழுவாக இணைந்து கொண்டு அங்கு சுற்றிப்பார்த்தோம்.

என்னுடைய 12 மெகாபிக்ஸல் சோனி சைபர்ஷாட் காமராவில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர்கள் சற்று முன்னதாக சென்று கொண்டிருந்தார்கள். அடிக்கடி படம் புடிக்கிறேன் என நின்னுட்டே இருந்தா அவங்க என்ன செய்வார்கள். :)

Monday, September 27, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷிகேஷ்)

முஸோரி இரயிலில் நாங்கள் வந்தசமயம் ஹரித்துவாரில் கோவிலுக்கு காவடி எடுக்கும் சீசன். சிவனுக்கு காவடி எடுத்துக்கொண்டு இரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேசனிலும் பக்தர்கள் ஏறிக்கொண்டே வந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் உரிமையாக அமர்ந்தும் கொண்டனர்.

கூட்டம் தாங்காமல் இரயிலின் டிடிஆர், படுக்கைவசதி கொண்ட நாங்கள் இருந்த பெட்டிகளின் நான்கு கதவுகளையும் உள்பக்கமாக தாள் போட்டுவிட்டார். நடுஇரவு இரண்டுமணி இருக்கும்.ஏதோ ஒரு ஸ்டேசனில் இரயில் நின்று கிளம்பி வேகம் எடுத்தது. அந்த ஸ்டேசனில் எனக்கு இடதுபுறம் பிளாட்பார்ம் இருந்தது. பெட்டிகளில் பெரும்பாலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.

Thursday, September 23, 2010

பிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

Tuesday, September 21, 2010

விழிப்புநிலை பெற எளிதான வழி..

விழிப்புநிலை என்பது பயமற்ற விழிப்புணர்வு என்றால் அதை எப்படி அடைவது? அதன் பலன் என்ன? அது வாழ்க்கைக்கு எல்லாவிதத்திலும் எந்த அளவு உதவும்?..

முதலில் பயம் என்பது என்ன? நமது உடல், உயிர், உடமைகள், உறவுகள் இவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம். நிம்மதியாக, இன்பமாக உயிர் வாழ தடை வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம்.

Monday, September 20, 2010

விழிப்புணர்வு என்பது என்ன?

விழிப்புணர்வு என்பதை கொங்குத்தமிழில் சொல்வதென்றால் வே(ய்)க்கானமா இருக்கனும்,விவரமா இருக்கோனும் அப்படின்னு வெச்சுக்குங்களேன்:)

விழிப்புணர்வு என்பது எதிலும் எச்சரிக்கையாக இருத்தலைக் குறிக்கும். எதுகுறித்தும் கூடுதல் விவரங்கள் தெரிந்து வைத்திருத்தலும் கூட விழிப்புணர்வுதான்.

Saturday, September 18, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5

டெல்லி சென்றடைந்தவுடன் அங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று பேருந்துகளில் பிர்லாமந்திர் சென்றடைந்தோம். அங்கு முன்பதிவு செய்ததில் ஏதோ குழப்பம்போல. குறைவான அறைகளே கிடைத்தது. இருப்பதை வைத்து எல்லோரும் சமாளித்துக்கொள்ள, நான் இரயிலிலேயே குளித்துவிட்டதால் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

Wednesday, September 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4

டில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்க்கான நேரம் நெருங்கியது. அறையைக்காலி செய்துவிட்டு, செண்ட்ரல் ஸ்டேசனில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எந்த பிளாட்பார்மில் நிற்கிறது என்பதை டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் பார்த்து 5 வது பிளாட்பார்ம்க்கு சென்றோம். ஏறத்தாழ அனைவருமே வந்துவிட்டனர். அனைவருக்கும் மஞ்சள் வண்ணத்துடன் கூடிய தொப்பியும் கழுத்தில் தொங்கவிடும் வகையிலான அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது.

Tuesday, September 14, 2010

பன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு ஊசி விலை 150.00 ரூபாய். வருத்தம் கலந்த மகிழ்ச்சியான செய்தி...

ஏன் வருத்தம்? தமிழக அரசு இலவசத்தொலைக்காட்சி அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க முடிகிற்து. குடிசைகளை மாற்றி இலவச வீடு கட்டித்தரமுடிகிறது. இலவசமாக விவசாயிகளுக்கு மோட்டார் தரமுடிகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வாழ்க்கையின் அத்தியாவசியமாக இல்லாதபோதும் தரப்படுகிறது.

Thursday, September 9, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3

திருப்பூரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழில்ரீதியாக எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பதால் பலசமயங்களிலும் நீறுபூத்த நெருப்புப்போல்தான் தன் குடும்பத்தினரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிகிறது. இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2

அலுவலகத்தில் சில முக்கிய வேலைகளை செய்யவேண்டியவிதம் பற்றிக் குறிப்புகளை கொடுத்துவிட்டு, நான் செய்யவேண்டிய சில பணிகளையும் முடித்துவிட்டு, வீடு வந்து ’பயணத்திற்கு தயார் செய்ததில் ஏதேனும் விடுபட்டுப் போய்விட்டதா?’ என சரி பார்த்தேன். படுக்கையில் இரு மகள்களும் தூங்கிக்கொண்டிருக்க இனி பனிரெண்டு நாட்கள் பார்க்கமுடியாது என மனதுக்குள் சிரித்துக்கொண்டே நன்கு ஆசைதீரப் பார்த்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன் அப்போது இரவு மணி 11 இருக்கும்..

Tuesday, September 7, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்

மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணம் இமயமலை செல்லவேண்டும். இந்த திருப்பூரை சுற்றி, காய்ந்துபோன நிலங்களையும், சாயம் கலந்த ஆற்றையும், பார்த்து பார்த்து சலிப்பும் வருத்தமும் மிஞ்சும் வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலை வேண்டும் என நான் அவ்வப்போது எண்ணத்தை மனதில் போட்டு வைப்பது உண்டு.

Thursday, September 2, 2010

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

Wednesday, September 1, 2010

இதுதான் திருப்பூர்......2

திருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

Tuesday, August 17, 2010

படித்ததில் பிடித்தது -- 17/08/2010

காசிக்குப் போவதற்கு முன்பு ஹரித்துவார், ரிஷிகேஷ் இரண்டிற்கும் போயிருந்தேன். கும்பமேளா நேரம். ஹரித்துவார் வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருந்தது. இளம்பெண்ணைப் போல புரண்டு ஓடும் கங்கை நதியை ஆசைதீர பார்த்துக்கொண்டு இருந்தேன்.

Sunday, August 1, 2010

சேர்தளம் -- வலைப்பதிவர் கூட்டமைப்பு

திருப்பூர் வலைதள நண்பர்கள் சமீபத்திய சந்திப்பு ஒன்றில் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தை மக்களிடையே பரவலாக சென்று சேர்க்க, வழிமுறைகள் குறித்து வெயிலான் ரமேஷ் அவர்கள் தலைமையில், ஆக்கபூர்வமாக கலந்து உரையாடினோம்.


அது குறித்த விபரம் தினமலர் 01.08.2010

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா 

Saturday, July 31, 2010

இதுதான் திருப்பூர்.....1

பனியன் கம்பெனிகளில் பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என பலவகையாக இருக்கின்றன. அவற்றுள் பல ஏற்றுமதி நிறுவனங்கள் வரவேற்பறை, பாதுகாவலர் எனத் தனித்தனியாக பலவகையான வசதிகளுடன் இயங்கும் பெரிய கம்பெனிகள். அதேசமயம் ஏற்றுமதி நிறுவனத்திற்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சிறுகம்பெனிகளும் இங்கு நிறைய இயங்குகின்றன.

Thursday, July 22, 2010

ஆழ்மனமும்.. வெளிமனமும்..

மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

Thursday, July 15, 2010

தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..

தியானம் செய்தால் என்னென்னமோ நடக்கும் என்கிறார்கள். நமக்கோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. , புரியாத மாதிரியும் இருக்கு. தியானம் செய்தா நம் உடலுக்கும், மனசுக்கும் என்ன நன்மை அப்படின்னு கேள்வி வரும்போது இந்த மனசு இருக்கிறதே அது எதையும் நம்ப மாட்டீங்குது :))

Tuesday, July 13, 2010

உங்களது வலைப்பதிவின் பார்வையாளர் விவரம்....

வேர்ட்பிரஸ் தளத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பதிவை எத்தனைபேர் பாத்திருக்கிறார்கள், எந்த நாளில் எந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். அப்போதல்லாம் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பது மட்டுமே என்னால் முடியும் :)

எளிதில் நலம் தரும் இனிமா.

மலச்சிக்கல் நீங்க  வேண்டும், நமது உணவுப் பழக்கத்தை எளிதில் மாற்றவும் முடியாது. அதேசமயம் வயிறு பிரச்சினை பண்ணக்கூடாது. இதன் தொடர்ச்சியாக வேறு நோய்களும் அதிகப்படக்கூடாது என எண்ணுகிறீர்களா..

கீழ்கண்ட விவரங்களை, சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள். கருத்துகளை கூறுங்கள்..

Monday, July 12, 2010

வயிறு காலியாவது பற்றி..... (உடல்நலம்)

பலபேர் மலத்தைப் பற்றி நினைக்கவும், பேசவும் கூட கூச்சப்படுகிறார்கள். வெளிக்கு எப்படி போகுதுன்னு கேட்டால், ”ஓ! அதெல்லாம் நார்மல், தாரளமாப் போய்விடுவேன். காலையில் எழுந்தவுடன் போய்விடுவேன். முதல் வேலையே இதுதான் “ என்பர். உண்மை வேறாக இருக்கும்.

Wednesday, July 7, 2010

நீங்கள் இடது மூளைக்காரரா?, வலது மூளைக்காரரா?

நமது மூளையை முன்மூளை, நடுமூளை,பின்மூளை என பகுக்கலாம். அதில் முக்கியமாக முன்மூளைப்பகுதி எனப்படும் இரு அரைவட்டப் பகுதிகள் உணர்தல், மொழி, சிந்தனை போன்றவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதிகள் இடதுமூளை, வலது மூளை எனவும் அழைக்கப்படுகின்றன.

Sunday, June 27, 2010

தமிழே! உயிரே! வணக்கம்!

தமிழே! உயிரே! வணக்கம்!

தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!

அமிழ்தே! நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்!

தமிழே! உன்னை நினைக்கும்

தமிழன் என் நெஞ்சம் இனிக்கும்! இனிக்கும்!

அமிழ்தே! உன் எழில் நினைந்தால்

ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்!

தமிழே! நீயேஎன் இயக்கம்!

தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்!

அமிழ்தே! நீதரும் இன்பம்....

அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்?

தமிழே! இன்றுனைப் பழிக்கும்

தறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்

அமிழ்தே! நீவாழும் மண்ணில்

அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்!

தமிழே! உனக்கேன் கலக்கம்?

தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்!

அமிழ்தே உனைஎவன் தொட்டான்?

அவனை என் கைவாள் அழிக்கும்! முடிக்கும்!

---  காசி ஆனந்தன் அவர்களின் பாடல்




Wednesday, June 23, 2010

தமிழ் செம்மொழியும்,.. தனிநாட்டின் அவசியமும்

உலகின் மூல மொழிகள் எனப்பெறும் உயர்தனிச் செம்மொழிகள் ஆறுமட்டுமே. மற்ற மொழிகள் அனைத்தும் இவற்றிலிருந்து பிறந்த சேய்மொழிகளே.

(1) இஸ்ரேல் நாட்டின் யூதர்கள் பேசும் எபிரேய மொழி (ஹீப்ரு மொழி), இயேசுநாதர் பேசிய மொழி
(2) ரோமானியர்கள் பேசிய லத்தீன் மொழி.
(3) கிரேக்கர்கள் பேசிய கிரேக்க மொழி
(4) மத்திய ஆசியாவின் ஆரியர்கள் பேசிய சமஸ்கிருத மொழி
(5) சீனர்கள் பேசும் Mandrine எனப்பெறும் சீனமொழி
(6) நம் தாய்மொழியாகிய தமிழ்மொழி

Tuesday, June 22, 2010

தமிழ்மணம் காசி அவர்கள் ....செம்மொழி மாநாட்டில்....

24.06.2010 நா. கோவிந்தசாமி அரங்கில் மாலை 2.30 முதல் 3.00 வரை திரு,தமிழ்மணம் காசி அவர்கள் உரை...செம்மொழி மாநாட்டில்... 

http://www.infitt.org/ti2010/Schedule%20for%20TI2010%20as%20on%2012%20June%202010%20%28WCTC%20Template%29.pdf
 
 



பொன்னுச்சாமி கேட்ட கேள்வி

பனியன் தொழிலில் கணத்துக்கு கணம் நிச்சயமற்ற சூழலே இருக்கும். எதிர்பார்த்ததை விட எளிதில் பல விசயங்கள் முடியும். எளிதாக முடியும் என்ற விசயங்கள் பல சொதப்பலாக முடியும். அதிலும் முக்கியமாக தொழில்துறை நண்பர்களின், பணியாளர்களின் கவனக்குறைவு, புரிதலில் வரக்கூடிய தவறுகள். என வாய்ப்புகள் பலவிதம்..

Thursday, June 17, 2010

ஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - மலேசியாவில்...

ஆறிலிருந்து நூறுவரை ஆனந்தமாய் வாழ - நிகழ்ச்சி

பசிப் பிணியற்ற தமிழ்நாடு, 

நோயற்ற தமிழ்நாடு,

வளம் நிறைந்த தமிழ்நாடு,

ஞானம் செறிந்த தமிழ்நாடு.

என்கிற இலட்சிய முழக்கத்தோடு வெளிவரும் கவனகர் முழக்கம் இதழின் ஆசிரியர் பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் சிறப்பு நிகழ்ச்சி மலேசிய நண்பர்களின் கவனத்திற்காக.


ஆர்வமுடையவர்கள்   கலந்து பயன்பெறுக.. தனிமனித முன்னேற்றம் உடல்நலம், பொருள்வளம்  பெற  பெரிதும்  உதவும்.

Thursday, June 10, 2010

இருள், மருள், தெருள், அருள்- தொடர்ச்சி

அடுத்து மக்கள் மனத்தெளிவு பெற வேண்டி, ஞானமடைந்த மகான்கள் அளிக்கும் ஆசனம், யோகம், ஞானப்பயிற்சி வழிகள். வயிற்றுப்பசிக்கே வழி காணமுடியாத வறுமையாளருக்கு இந்த வழி பெரிதாக உதவி செய்யாது. பசியை வென்றோர்கே இது பொருந்தும். அதனால்தான் வள்ளலார் போன்ற மகான்கள் முதலில் வயிற்றுப் பசிக்கு உணவிடும் அன்னதானத்தை முதன்மையாகச் செய்தனர்.

சோனியாகாந்தியை உங்களுக்குத் தெரியும் என்பதில் எந்த சிறப்பும் இல்லை. எந்தப் பலனும் இல்லை. ஆனால் சோனியா காந்திக்கு உங்களைத் தெரியும் என்பது சிறப்புநிலை. எல்லோருக்கும் கிடைக்கும் பொதுப்பலன்களை விட உங்களுக்கென்று தனிப்பட்ட முறையில் சிறப்புப் பலன்களை அடையலாம். நியதிக்கு, சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட சிறப்புப் பலன்களையும் அடையலாம் :))

அதேபோல் இறைஆற்றல் இவ்வுலகில் எல்லா உயிர்க்கும் பொதுவான பலன்களைத் தந்து கொண்டேதான் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்பவனுக்கும் அதேதான், இல்லை என்பவருக்கும் அதேதான் :))

உடலை உயிர் இயக்குகிறது. பசித்தால் உண்ணுகிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம். காற்றை சுவாசிக்கிறோம். இவையெல்லாம் இறையாற்றலால் கிடைக்கும் பொதுப்பலன்கள். ஆனால் இறையாற்றலோடு தனிப்பட்ட முறையில் உங்கள் ஆன்மா தொடர்பு கொள்வது என்பது சிறப்புநிலை. இதை ஞானம் பெற்றவர்கள் அடைகிறார்கள். அறிவுத் தெளிவு பெற்றவர்கள் அடைகிறார்கள்.இதை அடைந்தவர்கள் உண்டும் வாழலாம், உண்ணாமலும் வாழலாம், தூயநீர் குடித்தும் வாழலாம், சாக்கடை நீர் குடித்தும் வாழலாம். விதியை மதியால் வெல்லலாம். உலகநியதிகளை மீறி அவர்களால் வாழ முடியும். இந்நிலையே ’தெருள்’ .

இயம நியம் ஆசன பிராணாயாமம் போன்ற யோக முயற்சிகளின் வழியே தெருள் எனப்படும் தெளிவு பெறும்போது அறிவுடையோர் பட்டியலில் முதன்முதலில் இடம பிடிக்கிறோம்.

இறுதியில் பெற வேண்டியது அருள். தெளிவு பெற்றவுடன் இந்த அருள் கிடைத்து விடாது. தெளிவு பெற வேண்டிப் பாடுபட்டு தேடிய அத்தனை தத்துவங்களையும் குப்பைபோல் தூக்கி எறிந்துவிட்டு. உடல், பொருள், ஆவி என்னும் அத்தனை அம்சங்களையும் இறையாற்றலிடம் ஒப்புக்கொடுத்தால்/சரணடைந்தால் அருளைப்பெறலாம். இதைத்தான் தத்துவ நிக்கிரகம் என்பார் வள்ளல் பெருமான்.

இந்த அருள்நிலையைப் பெற்றவன் இறைவனைத்தவிர யாருக்கும் அடிபணிய வேண்டியதில்ல்லை. அதனால்தான் ’துறவிக்கு வேந்தன் துரும்பு’ என்று கூறும் வழக்கம் வநதது. இந்த அருளைப்பெற்ற திருநாவுக்கரசர் ’நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.. !’ என முழக்கமிட்டார்.

இந்த அருள்வழி ஒன்றுதான் இறைவனை அடைவதற்குரிய வழி. மற்ற வழிகளில் இறையருளை அடையலாம் எனக்கூறுவதும், அடைந்ததாக பிதற்றுவதும் வெறும் கூச்சல்களே.

இதைத்தான் திருவள்ளுவர்
’நல்லாற்றால் நாடி அருள் ஆள்க பல்லாற்றால்
தேறினும் அஃதே துணை’ 242

எந்த மார்க்கத்தின் வழியாக இறையாற்றலை நோக்கிப் பயணித்தாலும், இறுதியில் அருள் மார்க்கத்தில் நுழைந்துதான் இறைவனை அடையமுடியும்.

தெளிவு பெறுவோம். இறையருள் அடைவோம். எல்லாம் இன்பமயமாகட்டும்.

நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002

Tuesday, June 8, 2010

இருள், மருள், தெருள், அருள்

கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புவன் முட்டாள் என்பது ஒருபுறம்,

கருப்புசாமி, முண்டகக்கண்ணி, என்ற சிறு தெய்வங்கள் முன்னால் வேப்பிலை கட்டி ஆடுதல், வேல் குத்துதல், உருளுதல்,இருமுடி கட்டுதல், எருமை, ஆடு, கோழி,பன்றி போன்றவற்றை காணிக்கை தரும் பாமரக் கூத்துகள் மறுபுறம்.

நான்தான் கடவுள். நான்தான் இன்றைய தீர்க்கதரிசி, நான் தான் அவதாரம் என பிரமாண்ட கட்அவுட் விளம்பரதாரர்கள் இன்னொரு புறம்.

இயமம்,நியமம்,ஆசனம், பிராணாயாமம், தியானம் என பயிற்சி அளித்து மனித மனங்களை வளப்படுத்தும் குருமார்கள் ஒருபுறம்.

இவர்களின் உண்மை நிலை என்ன? 
நாம் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்கம் எது? எவற்றை எல்லாம் விடவேண்டும்? இது குறித்து தெளிவு செய்வது கவனகர் முழக்கம் இதழின் கடமை.

நாத்திக வாதம் என்பது ஒரு எதிர்மறை வாதம். எதிர்மறை அணுகுமுறை என்பது ஒன்றை அழிப்பதற்குத்தான் உதவும். பிறப்பின் பெயரால் மக்களைப் பிரித்து வைத்து இழிவு படுத்தும் வருணாசிரம தர்மம் எனும் கொடுமையை அழிப்பதற்காக நாத்திகம் என்ற ஆயுதத்தைத் தந்தை பெரியார் கையில் எடுத்துப் பயன்படுத்தி முடிந்தவரை அழித்தார். தவறான கோட்பாட்டை அழிக்கும்போது சரியான கோட்பாட்டை காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வின் காரணாமாக திருக்குறளை அடையாளம் காட்டி, திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.

நாத்திக வாதத்த்தை ஞானிகள் ‘இருள்’ என்று கூறினர்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் - 243

என்கிறது தமிழ்மறை. இருள் சேர்ந்த இன்னா உலகம்தான் இறை மறுப்பு உலகம்.

’அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெல்லாம்
இருள்நெறி என எனக்கு இயம்பிய சிவமே..’ என்பார் வள்ளல் பெருந்தகை.

அடுத்து கடவுளுக்கு கொடைவிழா என்றும் குலதெய்வ வழிபாடு என விலங்குகளை பலியிட்டு ஆடும் வெறியாட்டம், உடலை வருத்திச் செய்யும் அலகு குத்துதல் போன்ற முரட்டுத்தனமான வழிபாடுகள், எல்லாவிதமான காணிக்கைகள் என அறிவுத் தெளிவு இல்லாத மன உண்ர்வால் செய்யப்படும் மூடச் செயல்கள். மதவாதிகளை வாழவைப்பவை இந்த மூடத்தனமான சடங்குகளே. இதை ஞானிகள் ‘மருள்’ எனக் குறிப்பிடுவார்கள். மருள் என்றால் மயக்கம் எனப்பொருள்.

ஆனால் தப்பித்தவறிக்கூட இந்த மயக்கம் தெளியவிடாமல் வைத்திருப்பார்கள் மடாதிபதிகள் மற்றும் போலிச் சாமியார்கள். அரசியல் நடத்தும் அதிகார வர்க்கமும், அறிவில்லாத செல்வந்தர் கூட்டமும் இதற்கு துணையாய் இருப்பார்கள்.

பொதுவாக வறுமை அதிகம் உள்ள நாட்டில், சமுதாய அமைப்பும் அரசமைப்பும் தன்னைக் காப்பாற்றாத நிலையில் தன்னம்பிக்கையை இழந்து ‘ கடவுளாவது நம்மைக் காப்பாற்ற மாட்டாரா’ என்ற ஏக்கத்தில் கேள்விப்பட்ட வழிகளின் பின்னால், கேள்விப்பட்ட சாமியார்களின் பின்னால் பாமரர்கள் செல்லும் வழிதான் மருள்வழி


( தொடரும் )

நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ் மே 2002

Sunday, June 6, 2010

நர்சிம் - முல்லைக்காக அனைவரிடமும் மன்றாடுகிறேன்.

போதும் போதும் என்கிற அளவுக்கு கட்சி பிரிந்து காறித் துப்பிக் கொண்டாகிவிட்டது. இந்த விசயத்தில் எந்தக் கருத்தும் அமைதியை, ஒற்றுமையை ஏற்படுத்தாது என்பதால் அமைதியாக இருந்தேன். அட நாம அந்த அளவுக்கு  பிரபலமும் இல்லையே என்ற சிந்தனையும் கூடத்தான் :))

Tuesday, June 1, 2010

பாமழை - வேலூரும் பெரியாரும்

வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் திருக்குறள் இராமையா அவர்களின் அவதான நிகழ்வு

’வேலூர்’ என்று தொடங்கவேண்டும்.; ’பாலாறு’ என முடியவேண்டும்: இடையில் ’தந்தை பெரியார்’ பெயர் வரவேண்டும். வெண்பா பாடுங்கள்” என கேட்டார் புலவ்ர் வே. நாரயணன்.

Thursday, May 27, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி நான்கு

நம் மனதிற்குப் பிடிக்காத உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் உள்ளிட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து ஆத்திரப்படுதல் சநதிப்பவர்களிடமெல்லாம் அவர்களைப்பற்றி பேசிக் கோபத்தை கொட்டித்தீர்த்தல் என்பது தவிர்க்க வேண்டியதில் நான்காவது ஆகும்.

'நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
'   குறள்-108

என குறள் ஆசான் சொன்னதை நினைவில் கொள்வோம்.

அதோடு மட்டுமில்லாமல்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
’.      குறள் 152

'ஏதோ ஒரு தீயகுணம் அதிகப்பட்டதன் காரணமாக, (அல்லது நமது கர்மவினை காரணமாக) பிறர் நமக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது உயர்ந்த பண்பு.  உடனுக்குடன் அந்த துன்பத்தையும் அதைச் செய்த மனிதரையும் நம் நினைவில் இருந்து அகற்றி விடுவது அதைவிட உயர்ந்த பண்பு'.என்றும் சொல்லி இருக்கிறார்.

பிறரை எச்சரிக்கை செய்யும் பாணியில் சொல்வது என்பது சரிதான், அதுவே நம் மனதைத் தாக்கக்கூடாது என்பதே இதில் முக்கியம்.துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது என்பதே நம் மனதின் சமநிலை பாதிக்காமல் இருக்கத்தான்.

பிடிக்காத மனிதர்களை நினைக்கும் நேரம் எல்லாம் வீணான நேரம். அவர்களைப் பற்றிப் பேச செலவிடும் ஆற்றல் வீணான ஆற்றல்.  திரும்பத்திரும்ப அவர்களை நினைப்பதால் அவர்களைப் பற்றி பேசுவதால் நமக்கு ஏற்படும் மனப்பதிவு,  நமக்கு மன உளைச்சலையும் உடல் உபாதைகளையும் உண்டாக்கும் ஆதலால் இதைத் தவிர்ப்போம் மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்வோம்.


”நமை தூற்றிப் பொறாமையினால் பிறர் பழித்தால்
நம் வினையே வெளிப்படுதலாக எண்ணி
சுமை மனதில் கொள்ளாது அமைதி கொள்வோம்
சொற்சூடு அளிப்பவர்க்கு வாழ்த்து சொல்வோம்
இமை கண்ணைக் காப்பது போல் இறை எவர்க்கும்
எத்துன்பத்துக்குள்ளும் காவலாக
அமை(ந்த) நியதி எப்போதும் மறத்தல் கூடா
அச்சமில்லை அச்சமில்லை அருட்சுடர் நாம்.”

- வேதாத்திரி மகரிஷி ஞானக்களஞ்சியம் பாடல் 602

Tuesday, May 11, 2010

அவலாஞ்சி - பயண அனுபவம்..

திரு.லதானந்த் அவர்களின் ‘ஊட்டிக்கு வாங்க’ வேண்டுகோளுக்கு இணங்கி, மனைவி மற்றும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சனி காலை ஊட்டி  கிளம்பினோம், வழியிலேயே லதானந்த், வலைச்சரம் சீனா தம்பதியர் எங்களுக்காக காத்திருந்து இணைந்து கொண்டனர்.

Saturday, May 8, 2010

பூமியை பசுமையாக்க உதவுங்கள் - ப்ரணவபீடம்

நண்பர்களே நம் கண் முன்னே புல்லினங்கள் அழிக்கப்படுவதை கண்டு உணர்வற்று வாழ்கிறோம். சில நிமிடங்கள் அதற்காக வருந்தினாலும் நம் வாழ்க்கையில் தாவரங்களுக்கு என்ன செய்தோம் என்ற கேள்விக்கு விடை கூற முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.

Tuesday, April 27, 2010

விதியை வெல்ல வேண்டுமா ???

விதியும் மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  அவற்றைப் பிரிக்க முடியாது. மேலோட்டமாய்ப் பார்த்தால் எதிர் எதிர் அம்சங்கள் போல் தெரியும். ஆனால் உண்மையில் அப்படி அல்ல.

Friday, April 16, 2010

அருளியலும்.. பொருளியலும்...

நாம் இப்புவியில் வாழ இன்றைய தினம் அடிப்படைதேவை பணம் என்றால் மிகையொன்றுமில்லை எனக் கருதுகிறேன். அன்றாட வாழ்வில் நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள, பண்டமாற்றுமுறை மறைந்து உழைப்பின் குறியீடாக, மதிப்பாக உள்ள அந்த பணத்தை/பொருளைச் சம்பாதிக்கும் முயற்சியே,  நமது அன்றாட வாழ்க்கை/நடவடிக்கைகள், பணிகள்.

Saturday, April 3, 2010

’ஏசி’ இயந்திர பராமரிப்பு டிப்ஸ்கள்

கோடையில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக ’ஏசி’யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக்கூடாது.

Thursday, March 25, 2010

அம்பறாத்தூணி

எந்த வார்த்தையையும் அன்புடன் சொல்ல வேண்டும். அன்பாக எதையும் சொல்ல முடியவில்லை என்றால் பேசவே வேண்டாம். மெளனம் பரம ஆனந்தம். இது உடனே சாத்தியமா என்றால் இல்லைதான்...:))

Wednesday, March 24, 2010

வார்த்தைகளின் தன்மைகள்


ஒருவன் பொருள் அறிந்து கூறினாலும், பொருள் அறியாமல் கூறினாலும், எந்த வார்த்தை எதைச் சுட்டுகிறதோ, அது நடந்தே தீரும்.

Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்...

பழைய கவலைகளைத் திரும்பவும் நினைவுபடுத்தி அசைபோடுவதும் ’செப்டிக் டேங்க்’ வரை போய் மக்கிப்போன மலத்தைத் திரும்பவும் மலக்குடல் வழியே இழுத்து வந்து வாயில் வைத்து அசைபோடுவதும் ஒன்றுதான்.

Tuesday, March 9, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று

வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருள்களை வாங்க நகரில் உள்ள டிபார்மெண்டல் ஸ்டோர்-க்கு மனைவியுடன் சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாகத் தேடித்தேடி எடுத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பில் போடும் இடம் வந்தேன்.

Saturday, March 6, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.....தொடர்ச்சி

திரு.முருகேசன் என்கிற ஆங்கில ஆசிரியர் +2 வில் கடைசி நான்கு மாதங்கள் தினசரி காலையில் பள்ளிதுவங்கும் முன்னர் ஒருமணிநேரம் ஆங்கில வகுப்பு எடுத்துவந்தார்.

Thursday, March 4, 2010

பேரன்பும்..... மனநோயும்...

பதிவுலகில் நான் மதிக்கும் நண்பர்களுள் ஒருவர் ஸ்வாமி ஓம்கார்
முடிந்தவரை நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்

Tuesday, March 2, 2010

கல்கி ஆசிரமமும் நித்தியானந்தரும்

இன்று விசேசமான நாள் போலிருக்கிறது..

சென்னை கல்கிபகவான் ஆசிரமம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது..



Friday, February 26, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு

பதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.

Sunday, February 21, 2010

படித்ததில் பிடித்தது 21/02/2010

”எப்படித்தான் பொய் கணக்கு எழுதறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு”

”ஏன்?”

Monday, February 15, 2010

படித்ததில் பிடித்தது 15/02/2010

நண்பர் ஆரூரன் விசுவநாதன் அவர்களின் இடுகையை படித்தவுடன் இன்னும் நிறையப் பேருக்குச் சென்று சேரவேண்டியது அவசியம் எனக் கருதியதால் உங்களுக்காக இங்கே


கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி


ஆரூரான் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்

Thursday, February 4, 2010

எதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)

எதிர்காலம் குறித்த அச்சம்

எதிர்காலத்தை எண்ணி எந்த நேரமும் அச்சம் கொள்வது.. அவநம்பிக்கை கொள்வது, மனதை விட்டு அகற்ற வேண்டியது அவசியம்.

எதிர்காலத்தில் நாம் எப்படி வரவேண்டும், வாழவேண்டும் என திட்டமிடுதல், அதன்படி வாழ்தல் என்பது வேறு. ஆனால் எதிர்காலத்தில் எப்படி ஆவோம், அல்லது வாழ்வோமோ என்ற அச்சம் அறவே கூடாது.

இந்த அச்சம் ஏன் வருகிறது?. போதுமான விளக்கமும், விழிப்பும் அறிவுக்கு கிடைக்காததே..

விதியின் பிடியில், மாயையின் பிடியில், மனதின் பிடியில் சிக்கிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ்கிறோம். எந்தவித திட்டமிடுதலும் இல்லை. ஆனால் வருமானம் வாடகை, வட்டி, தரகு என்றோ அல்லது தொழில் நல்ல முறையில் நடப்பதாலோ வருமானம் வந்து குவியும்.

அப்போது இந்த பணம் ஏன் நமக்கு வருகிறது.? எந்த வழியில் வருகிறது.? இதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லை என்றாலே நாம் விதியின் பிடியில் இருக்கிறோம் என்று பொருள்.

"கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை
எனும் தெளிவும் இலார் " என்பார் பாரதி.. வாழ்வில் துன்பம், கஷ்டம் வரும்போது இது ஏன் வந்தது என சிந்திக்க தெரியாததால்தான் அப்படியே வாழ்கிறோம்.

இதனால் எதிர்காலம் குறித்த அச்சம் நிச்சயம் வரும்.

இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல..ஜாதகமும் காரணம் அல்ல.

பெரும்பாலும் நாமும், பெற்றோர் வழியிலான வினைப்பதிவு தொடருமே காரணம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் வினைப்பதிவுடன் கூடிய நமது வாழ்க்கை, ஒரு சேமிப்பு வங்கி கணக்குக்கு அப்படியே ஒப்பிடலாம்.

பணம் போட்டால் பதிவு, எடுத்தால் பதிவு, போட்ட பணத்திற்கு வட்டி வந்தால் வரவுப்பதிவு, குறைந்த பட்ச இருப்பு இல்லையென்றால் அபராதக் கட்டணம் பற்று பதிவு.

கற்பனை செய்யுங்கள். சில இலட்சங்கள் இருப்பிலிருந்தால் பணம் எடுத்துக் கொண்டே இருந்தால் கொஞ்சநாள் கழித்து இருப்பு குறைந்து அபராதம் வரும், மாறக குறைந்த பட்ச இருப்புதான் என்றால் ஒரு முறை பணம் எடுத்த உடனே அபராதப்பதிவுதான். இதுதான் வினைப் பதிவு, செயல்விளைவுத்தத்துவம் எல்லாம் :))

ஆக வங்கிக் கணக்கில் என்ன பதிவு செய்ய வேண்டும் என்பது நம் கையில் உள்ளது, நமக்கு வேண்டியது வட்டி வரவா அல்லது அபராதமா என நாம் தீர்மானிப்போம். இதுதான் முயற்சி..

எதிர்காலம்(வினைப்பதிவுகளின் இருப்பு) இயற்கையின் கையில் உள்ளது. அது எந்த அதிசயத்தையும் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிகழத்தலாம். எந்த அற்புதத்தையும் நம் வாழ்வில் உருவாக்கும்.

அதேசமயம் எதிர்காலம் என்பது நமது அறிவு, திறமை, நம்பிக்கை, முயற்சி, இயற்கையின் ஒத்துழைப்பு போன்ற பலவித அம்சங்களால் தீர்மானிக்கப்படும். அற்புதமாக மாறும் என்பதையும் புரிந்து கொள்வோம்.

எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும் மனதுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாகும்.

நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எண்ண்ங்களை எண்ணுவோம், செயல்களைச் செய்வோம், நல்ல விளைவுகளை அனுபவிப்போம். இதற்கு பெயர் நம்பிக்கை அல்ல. என்னைப் பொறுத்த வரை இதுவே வாழ்க்கை கணிதம், இதுவே வாழ்க்கை அறிவியல்.

வாழும் நுட்பத்தை அறிந்து கொண்டு உங்கள் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும், மனதின்ஆற்றல் பெருகும். உற்சாகமாக இருக்கலாம்.

Tuesday, February 2, 2010

மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று

கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது மனத்திலிருந்து எடுத்தெறிய வேண்டிய தொல்லைகளில் முதன்மையானது.

நம் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒருவகையில் நம் மனதிற்கோ, உடலுக்கோ துன்பம் தரும் நிகழ்வுகள் நடந்திருக்கும்.. நம்மை காத்து வளர்த்த தாய்,தந்தை, நெருங்கிய உறவினர் மறைந்திருக்கலாம்.

தொழில் சூழ்நிலைகளினால், பல்வேறு காரணங்களினால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். மிகவும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்,

பிறர் நம்மை புரிந்து கொள்ளாமல் அவமதித்திருக்கலாம்,

இந்த விசயங்கள் எல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக, ஒரு அனுபவமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அளவில் ஆராய்வதோடு, உணர்ந்து கொள்வதோடு, யோசித்து முடிவெடுப்பதோடு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

மாறாக நினைத்து நினைத்து வருந்துவது, கவலைப்படுவது என்பது நமது மனம் நிகழ்காலத்தில் இயங்குவதை தடுத்து இறந்தகாலத்தில் சஞ்சரிக்கும் நிலையையே ஏற்படுத்தும்.

விளைவு இனிமேல் நடக்க வேண்டிய செயலில் நம் கவனம் சிதறும். நமது செயல்வேகம் குறையும். உறவுகளில் சிக்கல்கள் நம்மால் வரலாம். பலன் இதிலும் இன்னும் நட்டம், இழப்பு, இந்த நிலை நமக்கு தேவையா? என சிந்திப்போம். 

மீண்டும் மீண்டும் அதை நினைத்து வருந்துவதால் நேரம் வீணாவதோடு மனம் இன்னும் பல்வீனமடைகிறது. அது அதிகமாகிறபோது அது உடல் நோயாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.


ஏனெனில் நடந்து முடிந்த ஒரு செயலை யாராலும் மாற்ற முடியாது. என்ன வருத்தப்பட்டாலும் நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய அடுத்த கட்டத்திற்கு நம்மால் முன்னேற முடியாது



இதற்கு மனதை வேறு பல நல்ல வழிகளில் திருப்பலாம். எந்த வழி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

அருள்கூர்ந்து, நடந்து முடிந்த துன்ப அனுபவங்களை மனதிலிருந்து அகற்றுங்கள். இதுவே பலவழிகளிலும் நாம் முன்னேற வழி.

வாழ்த்துகள்

Monday, January 25, 2010

திருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010

அன்பு நண்பர்களே,

திருப்பூரில் கடந்த ஆறுவருடங்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி இந்த வருடமும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறப் போகிறது. இந்த செய்தியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

(படத்தின் மீது ’க்ளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)
















வாய்ப்பும் வசதியும் இருக்கிற அன்பர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுக..:))

திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், ஏழாம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருப்பூர் கே.ஆர்.சி., சென்டரில் நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது; தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் முன் னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர் கள் என, 72 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இந்நிறுவனங்கள் அமைக்கும் 94 ஸ்டால்களில், குழந்தை இலக்கியம், அறிவியல், கலை, இலக் கியம், மொழி, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், தத்துவம், மதம், ஆளுமை, கதை, நாவல்கள் என, அனைத்து பிரிவுகளிலும் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.கண்காட்சி வரவேற்புக்குழு தலைவர் துரைசாமி, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் நிசார் அகமது ஆகியோர் கூறுகையில், "ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவியர் கண் காட்சி விழா மேடையில் பேச உள்ளனர். தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும்,' என்றனர்.
வாழ்த்துகள்

Sunday, January 24, 2010

படித்ததில் பிடித்தது 24/01/2010

கூடுசாலை நண்பரின் இடுகை நாம் பரிசோதனை எலிகள் இல்லை

//இந்த மலட்டு விதைகளை கொண்டு நம் விவசாயிகள் மீண்டும் விதைக்கமுடியாது. விளைவு விவசாயிகள் விதைகளுக்கு மீண்டும் அந்த நிறுவனத்தையே அண்டியிருக்க வேண்டும். நம் முன்னோர்கள் “விதைகள்” என கொஞ்சம் தானியங்களை தலைமுறை தலை முறையாய் காப்பாற்றி நம் கைகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் தானிய ங்களை இழந்துவிட்டு விதைக்காக வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனங்களிடம் நிற்கவேண்டும்.//

பெரிய அளவில் பணம் பண்ணுவது என்பது மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தோடு, ஒரு நாட்டின் விவசாயத்துறையையே மலடாக்கத்துடிக்கும் இயல்பு கண்டு மனம் கொதிக்கிறது.. நீங்களும் படித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

***********************************************
அடுத்தது ஒரு தொழில்நுட்பம்....


இன்டர்நெட் விரும்பியா? உஷார் ஜெர்மன் அரசு எச்சரிக்கை

பெர்லின் : இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக உள்ளதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதை தொடர்ந்து, அதற்கு மாற்றாக வேறு இணைப்பை பயன்படுத்துமாறு, ஜெர்மன் அரசு, அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் இணையதளங்களில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் இணையதளங்களை, சீனா திருடி வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து, கூகுள் போன்ற இணையதள இணைப்பிற்கு செல்ல பயன்படுத்தும், இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டது.எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு, இதனால் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு, இணையதள பயன்பாட்டாளர்களுக்கு தீவிர அபாயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து, ஜெர்மன் நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகம் அல்லது பி.எஸ்.ஐ., கூறியதாவது:ஜெர்மனியர்கள், எக்ஸ்புளோரரின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், தாக்குதல்கள் நடத்துவது என்பது சிறிது கடினமானது; ஆனால், முழுவதுமாக பாதுகாப்பு அளிக்காது. எனவே, இணையதளத்தை பயன்படுத்தும், ஜெர்மனியர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வேறு பிரவுசரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தாமஸ் பாம்கார்ட்னர் கூறுகையில்,"ஜெர்மன் அரசின் எச்சரிக்கை குறித்து, மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூகுள் இணையதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குறிப்பிட்ட நோக்குடன், பெரியளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள், சாதாரண மக்கள் அல்லது நுகர்வோர்களுக்கு எதிராக நடைபெறாது'

நன்றி: தினமலர்

Wednesday, January 20, 2010

காயில் மாற்றிய கதை....

தொழிற்சாலையில் ஆர்டருக்கான ஆயத்த ஆடைகள் உற்பத்தி நடைபெற்றுக்கொண்டு இருந்தது. மணி முற்பகல் 11.30. சட்டென ஒரு புறத்தில் அமைந்த தையல் இயந்திரங்களுக்கான 'ஸ்டார்ட்டர்' மின் கட்டுப்பாட்டுக் கருவி 'டப்' என சத்தத்துடன் பழுதானது.

அருகில் இருந்த பொன்னுச்சாமி சட்டென அங்கே சென்று தனக்கு தெரிந்த அனுபவ அறிவைக் கொண்டு மின்சாதனத்தை சோதிக்க அதில் உள்ள ’காயில்’ புகைந்துவிட்டது. அதை மாற்றினால்தான் மீண்டும் இயந்திரங்கள் இயங்கும். என தெரிந்தது.

உற்பத்தி தடைபட்டதோடு அடுத்து எவ்வளவு நேரத்தில் ரெடியாகும் என்று தெரியாத நிலை. ஆஸ்தான மின் பழுது நீக்குபவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அவர்கள் அடுத்த பத்து நிமிடத்தில் வந்து விட்டனர்.

’காயிலை’ கழட்டி கையில் கொடுத்து புதியதாக வாங்கி வரச் சொல்ல இன்னொரு பணியாளரை அழைத்து அருகில் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மின்சாதன பொருள்கள் விற்கும் கடையில் அதை புதிதாக வாங்கி வரப் பணித்தார் பொன்னுச்சாமி

அங்கே அந்த கடையில் ’காயில்’இல்லை, தொழிற்சாலை அமைந்த இடம் சற்று நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது. இப்போது வேறு எங்கு கிடைக்கும் என விசாரித்தில் வடக்குபுறமாக மூன்று கிலோமீட்டர் சென்றால் அங்கு உள்ள சிற்றூரில் கிடைக்கும் அல்லது தெற்குபுறமாக சென்றால் ஐந்து கிலோமீட்டர் சென்று நகரை அடைந்தால் நிச்சயம் கிடைக்கும் என்று தகவல் சொன்னார்கள்.

நேரமாக, நேரமாக பொன்னுச்சாமிக்கு வேகமாக செயல்படவேண்டும் என உணர்ந்தார். இல்லையெனில் உற்பத்தி தடைபடும். மேலும் சம்பள இழப்பும் நேரும். அந்த பணியாளரை வடக்கு நோக்கி சென்று வாங்கிவ்ரப் பணித்தார். அங்கு இல்லையென்றால் திரும்ப வந்த வழியே அங்கிருந்து எட்டு கி.மீ வந்து டவுனை அடைய வேண்டும். இன்னும் நேரமாக வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இருந்தால் நேரம் மிச்சம். உற்பத்தி பாதிக்காது. ரிஸ்க் எடுத்தார்.

பணியாளர் வடக்கே சென்று அங்கு கடைகளில் விசாரிக்கத் துவங்க ’அங்கு இல்லை’ என்ற பதிலே கிடைத்தது. பொன்னுச்சாமிக்கு இயல்பாகவே காலதாமதம் என்றால் பிடிக்காது. ஏற்கனவே முக்கால் மணி நேரம் வீணாகி விட்டிருந்தது. இனி அந்த பணியாளர் திரும்பவந்து டவுன் சென்றால் கூடுதலாக இன்னும் அரைமணியிலிருந்து ஒருமணிநேரம் வீணாகும்.

பொன்னுச்சாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. சட்டென ஒரு யோசனை. பணியாளர் அங்கே முயற்சித்து கிடைக்க வில்லை எனில் உடனடியாக டவுனில் வேறுநபரை நியமித்து வாங்கிவிட்டால் பயணநேரம் அரைமணி மிச்சமாகும்.

பொன்னுச்சாமியின் வீடு டவுனில் இருந்தது. அருகிலேயே பெரிய மின்சாதன பொருள்கள் விற்கும் கடையும் இருந்தது. இந்த மதிய நேரத்தில் மனைவி வீட்டு வேலை முடித்துவிட்டு ஓய்வாக இருக்க வாய்ப்பு உண்டு. வீட்டு வேலை செய்ய வசதியான (நைட்டி) உடையில் இருந்தால் அப்படியே வீட்டைவிட்டு வெளியே வருவதை வெறுப்பவள்.


சரி ஆபத்திற்கு பாவமில்லை என மனைவியை உடைமாற்றி தயாராக இருக்கச் சொன்னால் ஒருவேளை அவசரமாக கடைக்குபோய் பொருளை வாங்கி வரச் செளகரியமாக இருக்கும் என முடிவு செய்தார்.

வீட்டிற்கு போன் செய்தார். போனை எடுத்த மனைவியிடம் ”ஆமா நீ நைட்டில இருக்கியா? இல்லை சேலைல இருக்கியா?”

”தேனுங்கோ என்ன விசயம்?”

இல்ல, அவசரமா எலக்ட்ரிகல் கடைக்கு போக வேண்டியதா இருக்கும். கொஞ்சம் சீக்கிரமா ரெடியாகு !”

”இதோ இரண்டு நிமிசத்துல ரெடியாகிடறோனுங்கோ” என்று போனை வைத்தார் அவரது மனைவி.

கிட்டத்தட்ட மொத்தமாக ஒருமணிநேரம் ஆயிற்று. பணியாளருக்கு போன் செய்ய, ஒருவழியாக கிடைத்து விட்டதாக அவர் கூறி விரைவாக தொழிற்சாலைக்கு வந்து கொண்டு இருப்பதாக தகவல் சொன்னார். வந்து அதைப் பொருத்த அரைமணிநேரம் ஆக ஒருவழியாய் இரண்டு மணிநேரத்திற்குள் இயல்புநிலை திரும்பியது.

பொன்னுச்சாமி சற்று நிம்மதியோடு மதிய உணவுக்காக வீடு திரும்பினார். வீடு வந்த போது மனைவி தேவையானால் வெளியே கிளம்பத் தயாராக இருக்க, பொறுமையாக உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அப்படியே தொழிற்சாலையில் உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகளை விவரித்தார்.

அக்கறையுடன் கேட்ட அவரது மனைவி புன்னகை செய்ய ”ஏன் சிரிக்கிற?” என்றார்

”அது வேறொண்ணுமில்லீங்க. திடீர்னு போனு பண்ணி நைட்டில இருக்கிறயா, இல்லை சேலையில இருக்கிரயான்னு கேட்டீங்களா எனக்கு ஒரு மாதிரியா ஆயிப்போச்சுங்கோ..” என்று நாணத்துடன் தலை கவிழ, பொன்னுச்சாமிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை.

Tuesday, January 19, 2010

விலகி ஒன்றிணைவோம்

அன்புடன் கதிருக்கு

இது ஒரு மாற்றுப்பார்வை :)))

வலைத்தளம் நம்மைக் கட்டிப்போட்டது உண்மைதான். அதை உணர்ந்து நாம் வெளியே வராமல் இருக்கும்போதுதான், இந்த போதையில் நாம் மயங்கி இருக்கிறோம் என உணராதபோதுதான் நம் எழுத்துகள் திசை மாறுகின்றன.  மனிதம், நட்பு  மறக்கப்பட்டு, நானே பெரியவன் என்கிற அகந்தை, ஆணவம் என்ற உணர்வு மேலோங்கி விடுகிறது. விளைவுதான் தரமில்லாத எழுத்துகள் ஒருசில பதிவர்களிடமிருந்தும், படைப்பாளிகளிடமிருந்தும் :))

எதன் பொருட்டு எழுதுகிறோம் என்பது அனைவருமே சுயபரிசீலனை செய்துதான் எழுதுகின்றனர். அவர்களுக்கு சரி எனப்பட்டதைதான் எழுதுகின்றனர். சிலசமயங்களில் எழுத்து ஒருவிதமாகவும், செயல் ஒரு விதமாகவும் இருக்கும். அது அவர்கள் வலைபோதையில் இருக்கின்றனர் என்பதை காட்டும். அல்லது அவர்கள் குணமே அதுவாக இருக்கும். அதை அடையாளம் காணுவது நம் பொறுப்பு.

குடிபோதையில் இருப்பதுபோல் தான் இதுவும்,:)) 

சமுதாயத்தில் பார்க்கும் மக்கள்தானே வலைத்தளத்திலும், வேறு கிரகத்தில் இருந்து வந்துவிட்டார்களா என்ன!!  வலையுலகில் நட்பு ஒன்றே பிரதானமாக இருப்போம். அதில் ஒருவேளை கர்வம் கொண்ட படைப்பாளிகளிடமிருந்து அவசியமானால் விலகிக்கூட இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால் நம்மைவிட சகல விதத்திலும் அவர்களை சாமர்த்தியசாலிகளாகவே பார்க்கிறேன்.

உங்களாலும் என்னாலும் நீதி, நேர்மை, உண்மை, அன்பு என்ற விசயங்களை தாண்ட முடியாது. ஆனால் அவர்களுக்கு இந்த துணிவு இருக்கிறது.
அவர்களை திருத்துவது நிச்சயம் வாசகர்களால் முடியாது. அவர்களாகவே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. அதற்கு நமது எதிர்வினையாக, மாற்றுக்கருத்துகளைச் நேரடியாக இடுகையின்மூலம் சொல்லாம். ஒருவேளை அவர்களை இக்கருத்து சென்றடைந்து திருந்த வாய்ப்பு உண்டு.

ஒருவரது நோக்கத்தை ஒட்டியே செயல்பாடு உண்டு. எனவே செயலைத் திருத்தமுடியாது. எனக்கு இரண்டுகண்ணும் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என நினைப்பவரும் உண்டு, மண்ணுக்கு போகிற ஒருவரது கண்களை இருவருக்கு வாழ்வில் ஒளிகூட்ட பாடுபடுவோரும் உண்டு. இதுதான் உலகம். இது பதிவுலகிலும் உண்டு.

இந்த குறுகிய நோக்கம் கொண்ட படைப்பாளிகளை விட்டு விலகுவதும், அவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதுமே நாம் அமைதியாக இருக்க வழி.
அவர்கள் செயலுக்கு அவர்கள் தகுந்த விளைவினை நிச்சயம் அனுபவிப்பர். அதற்கு நாம் கருவியாக இருக்க வேண்டியதில்லை.

சுக்கு நூறாக உடைப்பது நம் வேலை அல்ல. மாறாக ஒதுங்கி ஒத்த எண்ண்ம் கொண்டவர்களோடு ஒன்று சேர்ந்து வலையுலகம் என்பது என்ன, வலையுலகம் என்பது ஒரு ஆக்கபூர்வமான அமைப்பு என்று மாற்ற என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். சண்டை சச்சரவு என்ற கதைக்கு உதவாத பொழுதுபோக்க மட்டும் வலைப்பதிவு என்ற நிலையை மாற்ற முயற்சிப்போம்.

//* சக படைப்பாளிகளை தெருவில் சண்டையிடும் விலங்குகளெனவும், அவர்களின் படைப்புகளைக் குப்பைகளெனவும் சொல்ல வைக்கிறது.

* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.

* சக எழுத்தாளனின் உடல்கூறுகள், உடலில் இயற்கையில் அமைந்த குறைபாடுகளைக் குறித்து குரூரமாகப் பேசவைக்கிறது.//

இதெல்லாம் தன் இருப்பை பதிவு செய்யும் தந்திரம்.
எப்படியாவது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மலிவான யுக்தி, இதை புரிந்து கொண்டால் போதும்
.

அவர்கள் நிம்மதியாக எதை வேண்டுமானாலும் கிழிக்கட்டும், பேசட்டும், நாம் கவனிக்கவில்லை என்பது உறுதியானால் தானாக அடங்கிவிடும்.அவர்கள் அகந்தை.

ஒன்றிணைவோம், சாதிப்போம்.

மாப்பு இது உங்கள் இடுகைக்கு மாற்றுக்கருத்துதான். எதிர்வினை அல்ல :)))))

Saturday, January 16, 2010

இப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க !!

"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல.

அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை, தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல்

இனி வருங்காலத்தில் இதோ போல் எல்லா நிதிகளும் செலவழிக்கப்படும் என்பதற்கான திமிர்த்தனமான பதில், எதிர்பார்த்ததுதான்.

மக்களை பிச்சைக்காரனாகவே, இலவசங்களை கொடுத்து, பதவி, பணம், புகழ் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெற வேண்டும் என்கிற தெளிவான நோக்கத்துடன் இருக்கும் தானைத்தலைவர் கலைஞர் வாழ்க

தமிழன் என்ற பெருமையே நம்மை வாழ வைத்துவிடும் என வாய்சவாடல் இட்டுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொலைநோக்கோடு அடிப்படைவசதிகளான மின்சாரம், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக ஏதேனும் புதிய அணை கட்டுதல், போன்றவை பற்றி சிந்திப்பது கூட இல்லை,

அண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு அணை கட்டுவதைப் பார்த்தால் சற்றே பொறாமையாக இருந்தாலும் நமது நிலையை எண்ணி உள்ளூர வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

டிஸ்கி இது முந்தய பதிவின் தொடர்ச்சி

Wednesday, January 13, 2010

எனக்குத் தேவை பணம், பதவி, புகழ்

சென்னை : "தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது.


முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

நன்றி தினமலர் 13.01.2010

Monday, January 11, 2010

நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்

நம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை கொண்டாடுகிறோம்.

இந்த நல்ல நாளை வரவேற்று மகிழ்வோம்.



இதோ மகானின் பொங்கல் வாழ்த்து அவர் பாணியில் பொங்கலையும், உள்நோக்கிய மனோநிலையில் இருந்தும் நமக்கு வழங்கிய பாடல்

                      

                          சூட்சுமப் பொங்கல்

வெட்டவெளி என்ற பெரும் பானைக்குள்ளே

            வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி

அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்

         ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்

கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்

          கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்

தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது

         சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சமப் பொங்கல்

 

-- வேதாத்திரி மகரிஷி

வாழ்த்துகளுடன் 
நிகழ்காலத்தில் சிவா

Sunday, January 3, 2010

ஐஸ்கிரீம், சாக்லேட், கிரீம் கேக்குகளில் மாட்டு எலும்பு பவுடர் : சுவைக்குப் பின் மறைந்துள்ள 'பகீர்'

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடுகளுக்கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிறது.



படித்ததும், "உவ்வே' என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்கு பின் மறைந்துள்ள "பகீர்' தகவல்கள் வருமாறு: மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் அறுக்கும்போது, சிறிய அளவில் உள்ள எலும்புகள் இறைச்சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியாத எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கின்றனர். அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். ஒரு கிலோ எலும்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காய வைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத்திற்கு 100 டன் வரை எலும்புகள் கிடைக்கிறது.


மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின்றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற்றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட் டைகளில் அடைக்கின்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூபாய் வரை விற்கின்றனர். அதை தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச் செல் கின்றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட்டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல் வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50 முதல் 60 சதவீத அளவிற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.


பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டுமின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் "சிரப்'களிலும் சேர்க்கப்பட்டு வருகிறது. போட்டோ ஜெலட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ்ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.


எலும்பு பவுடர் உரம்: வெளிநாடுகளில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதால், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுகளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர். மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறைச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகியவற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிந்தால், விற்பனை பாதிக்கும் என்பதால், அவற்றை தயாரிப்பாளர்கள் மறைக்கின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -

நன்றி ; தினமலர்  3.1.2010
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6152

இனி நான் சைவம் என சொல்ல முடியாது போல் இருக்கு.:)))
கூடுதல் சத்து கிடைக்கும்னு நினைச்சுக்க வேண்டியதுதான் :(