"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, June 22, 2010

பொன்னுச்சாமி கேட்ட கேள்வி

பனியன் தொழிலில் கணத்துக்கு கணம் நிச்சயமற்ற சூழலே இருக்கும். எதிர்பார்த்ததை விட எளிதில் பல விசயங்கள் முடியும். எளிதாக முடியும் என்ற விசயங்கள் பல சொதப்பலாக முடியும். அதிலும் முக்கியமாக தொழில்துறை நண்பர்களின், பணியாளர்களின் கவனக்குறைவு, புரிதலில் வரக்கூடிய தவறுகள். என வாய்ப்புகள் பலவிதம்..பனியன் உற்பத்தி தயார் செய்த பின் கடைசிகட்டமாக அயர்னிங், பேக்கிங் நடைபெறும். அது முடிந்த பின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு நடைபெறும். அந்த அயர்னிங் பிரிவு பணிபுரிபவ்ர் மிகச் சரியான நேரத்தில் விடுப்பு எடுத்துவிட்டார். பிறகு வேறு நிறுவனத்தில் கொடுத்து அந்த வேலையை முடித்து சரக்கை அனுப்பிவிட்டோம்.

அடுத்த நாள் அயர்னிங் நபர் வேலைக்கு வந்தார். அவர் வந்தார் என்பதற்கு அடையாளமே அவரிடம் கமழும் பீடி மணம்தான் :)) சும்மா கும்மென்று வீசும், நமக்கே நாம் தான் பீடி குடித்தோமா என சந்தேகம் வந்துவிடும். சுமாராக ஐந்தடி தூரத்தில் இருந்தாலே நம்மால் தாங்க முடியாது. வயதோ 42 தான்.

”ஏன் நேற்று வேலைக்கு வரவில்லை, அர்ஜண்ட் அப்படின்னா வரமாட்டீங்களோ??” என விசாரித்துக்கொண்டு இருந்தார் பொன்னுசாமி,

”நேற்று கொஞ்சம் வீட்ல சண்டைங்க.. வீட்டுக்காரிகோட சங்கடம், அதான்.”என்றார் அயர்னிங் நபர். அடிக்கடி அவர் இதே மாதிரி சொல்வது வழக்கம்.

அதற்கு பொன்னுச்சமி ஏதோ கேட்க, அந்தக் கேள்வியில் அவரின் முகம் பேயறைந்தது போல் ஆனது !!

அலுவலகத்தின் உள்ளே நான் அமர்ந்திருந்ததால் என்னவென்று தெரிந்த கொள்ள முடியவில்லை. ஆவல் தாங்கவில்லை. அப்படி என்னதான் சொல்லி இருப்பார் ??

அந்த நபரை அழைத்து ”இனிமேல் சரியா வேலைக்கு வாங்க, பொன்னுச்சாமி ரொம்ப திட்டிட்டாரா” என சற்றே கனிவுடன் (!) விசாரித்தேன்

”இந்த பொணநாத்தம் அடிச்சா எப்படி பொண்டாட்டி படுப்பா, சண்டை வராம வேறென்ன வரும், போ, போய் வேலையப்பாரு”. அப்படின்னாருங்க என பதில் வந்தது....

அட இப்படி ஒரு லாஜிக் இருக்கா என ஆச்சரியப்பட்டேன். நமக்கு புகை உடம்புக்கு கெடுதல் அப்படின்னு மட்டுந்தானே தெரியும், :))

5 comments:

 1. அட இப்படி ஒரு லாஜிக் இருக்கா என ஆச்சரியப்பட்டேன். நமக்கு புகை உடம்புக்கு கெடுதல் அப்படின்னு மட்டுந்தானே தெரியும், :))

  .... இந்த லாஜிக் - அப்ரோச் - நல்லா இருக்கே!

  ReplyDelete
 2. இப்படியும் சில லாஜிக்...

  ReplyDelete
 3. அன்புள்ள சிவா,
  எனது பதிவுகளில் 'சிறுகதை'பகுதிக்கு வந்து 'புதுமைப்பெண்களடி' கதையைப் படித்துப் பாருங்கள். இந்தப் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிந்த ஒரு புதுமைப் பெண்ணின் சாமர்த்தியம் தெரியும்.
  அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
 4. இப்படி ஆட்களைப் பளீர்னு இப்படித்தான் கேட்கணும்!! அப்புறமாவது விட்டாரா பழக்கத்தை?

  ReplyDelete
 5. திருந்தவில்லை சகோ:

  வேலைக்கு வ்ருவதை நிறுத்திவிட்டார் :))))

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)