"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, June 1, 2010

பாமழை - வேலூரும் பெரியாரும்

வட ஆற்காடு மாவட்டம் வேலூரில் திருக்குறள் இராமையா அவர்களின் அவதான நிகழ்வு

’வேலூர்’ என்று தொடங்கவேண்டும்.; ’பாலாறு’ என முடியவேண்டும்: இடையில் ’தந்தை பெரியார்’ பெயர் வரவேண்டும். வெண்பா பாடுங்கள்” என கேட்டார் புலவ்ர் வே. நாரயணன்.

வேலுரில் பாலாறு ஓடுவதால் தொடக்கமும், முடிவும் சரி. இடையே தந்தை பெரியார் ஏன் வரவேண்டும்.?  என்ன சிறப்புத் தொடர்பு? எனக் கேட்டார். திருக்குறளார்.

தந்தை பெரியார் வேலூர் மருத்துவமனையில்தான் இறுதியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இங்குதான் சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்றார் புலவ்ர்.

நீண்ட நாட்களாக நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது பாலாறு. அந்த நிலையைத் தற்குறிப்பேற்ற அணியாக உவமித்து, ‘ தந்தை பெரியாரின் மறைவினால் ஏற்பட்ட அதிர்ச்சியைத் தாங்க முடியாமல்தான் பாலாறு வறண்டு போய்க்கிடக்கிறது என்ற பொருள் வரும்படி மிக அருமையான வெண்பாவை வழங்கினார். இதோ அந்த வெண்பா

வேலூர் பெரும்பேறுபெற்றதே மெய்ம்மை சேர்
ஞாலம் புகழ்பெரியார் நம்தந்தை - காலம்
நிறைவெய்தியே மறைந்தார் என்ற செய்தி நெஞ்சில்
உறைய வறண்டது பாலாறு.


நன்றி:ஜீன் 2002 கவனகர் முழக்கம் மாத இதழ்
Post a Comment