"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, September 14, 2010

பன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு ஊசி விலை 150.00 ரூபாய். வருத்தம் கலந்த மகிழ்ச்சியான செய்தி...

ஏன் வருத்தம்? தமிழக அரசு இலவசத்தொலைக்காட்சி அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க முடிகிற்து. குடிசைகளை மாற்றி இலவச வீடு கட்டித்தரமுடிகிறது. இலவசமாக விவசாயிகளுக்கு மோட்டார் தரமுடிகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வாழ்க்கையின் அத்தியாவசியமாக இல்லாதபோதும் தரப்படுகிறது.இதன் யார்யாருக்கு எவ்வளவு பங்கு என்ற உள் அரசியலுக்கு நான் வரவில்லை.இதன் உச்சகட்டமாக கலைஞர் (கலைஞரின் சொந்தப்பணத்தில் ஏற்படுத்தியதிட்டம் அப்படின்னு நினைச்சுக்கிடாதீங்க, அரசாங்கப்பணம், பேருமட்டும் தாத்தாவோடது ஹிஹி..)காப்பீட்டு திட்டம் போட்டு மக்களின் உயிரை காப்பாற்ற முனைகிற அரசு, ஏன் இந்தத் தடுப்பு ஊசியை அனைவருக்கும் இலவசமாகப் போடக்கூடாது ?

ஒருவேளை நம்மகிட்ட இருக்கிற மிச்சம்மீதிப்பணத்தையும் இப்படி ஒரு மருந்து கம்பெனி ஆரம்பிச்சு புடுங்கிறாய்ங்களோ..

ஒன்னும் புரியலையே....

14 comments:

 1. சமீபத்தில் உருவான மற்றொரு திட்டம்.

  கலைஞர் வீடு வழங்கும் திட்டம்.

  ஆயிரம் ஆண்டுகள் பழமை உள்ள ராஜராஜ சோழன் கட்டிய கோவில் கூட இன்று சிதிலமாகி விட்டது.

  மனிதர்களின் பெயரும் புகழும் அவ்வளவுதான். கலைஞருக்குத் தெரியாமலா இருக்கும்?

  என்ன செய்வது?

  காடு வாவா என்று சொல்ல மகன்கள் போபோ என்று விரட்ட

  எங்கே செல்லும் இந்த பாதை?

  ReplyDelete
 2. ஆட்சியில் தொடர்ந்து இருக்க திட்டம் வகிக்கிறார்களே ஒழிய, ஆரோக்கியமான ஆட்சிக்கு வழி வகுக்கவில்லை.

  ReplyDelete
 3. சரியான சிந்தனை.

  அதிலும் இந்த முறையாவது போலி மருந்தாக இல்லாமல் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 4. உங்க கருத்து சரியானது! எல்லாத்திலேயும் பணம் பார்க்கவேண்டியது!

  ஆட்சியில் அமர துடிக்க வேண்டியது. காலம் எப்போது மாறும் என்று காத்திருக்க வேண்டியது தானா?

  நாம் அதுவரை நம்மை செம்மையாக்கி கொண்டு இருப்போம்.

  எல்லா இரவுகளும் விடிந்தே தீரவேண்டும் என்று நம்புகிறவன்.

  ReplyDelete
 5. கேள்வி இங்கே.. பதில் எங்கே? ... எப்பவும்போல சகிச்சுகிட்டுப் போக வேண்டியதுதான் விதி..

  ReplyDelete
 6. இங்கு பெங்களூரில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தருகிறார்கள். ஏன் தமிழக அரசால் முடியவில்லை? ஒருவேளை தேர்தல் நேருங்குவதாலோ.... இலவசமாக குடுத்தாலே பாதி மக்கள் அதை உபயோகபடுத்தி கொள்ளமாட்டார்கள் இதில் ரு 150 வெரோ. பன்றி காய்ச்சலை கட்டுபடித்தினால் போல் தான்....

  ReplyDelete
 7. தலைமை செயலகத்தில் வேலை செய்யும் ஒருவர் இந்த பன்றிக் காய்ச்சலால் இறந்த பின்னர்தான் இந்த திட்டத்தை கொண்டுவர வேண்டும் என தோன்றியதாம். இது நான் கேள்விப்பட்ட செய்தி. எந்த அளவு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் இது உண்மையாக மக்களுக்க் பயன்பட வேண்டுமென்று நினைத்திருந்தால் எப்போதோ வந்திருக்க வேண்டும்.

  ReplyDelete
 8. ஜோதிஜி கலைஞர் அனேகமாக அவருக்குப்பின் 50 ஆண்டுகள் மக்கள் மனதில் இருந்தாலே ஆச்சரியம்.

  காடு வா வா என்கிற விசயம் கலைஞருக்கு பொருந்தாது. காரணம் அவர் செய்கிற யோகப்பயிற்சிகள்:)

  பணம் சேர சேர அதைக்காப்பாற்றத் தேவையான விழிப்புணர்வு அவரிடம் அபரிதமாக வந்துவிட்டது..

  ReplyDelete
 9. // தமிழ் உதயம் said...

  ஆட்சியில் தொடர்ந்து இருக்க திட்டம் வகிக்கிறார்களே ஒழிய, ஆரோக்கியமான ஆட்சிக்கு வழி வகுக்கவில்லை.//

  மக்களின் சிந்தனை ஆரோக்கியமில்லாமல் இருப்பதே அவர்களுக்கு பலம். :)

  அவர்கள் நோக்கமும் ஆரோக்கியமான ஆட்சி என்பதல்ல.. இதில் எல்லா கட்சியினரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்

  ReplyDelete
 10. @ சிங்கக்குட்டி - ஆங்கில அதற்கு உரிய எல்லை அளவுக்குத்தான் வேலை செய்யும்..

  @ என்னது நானு யாரா? எனது எல்லாப்பொழுதுகளும் நன்றாக விடியும் என்ற நம்பிக்கை தமிழன் ஒவ்வொருத்தருக்குள்ளும் வந்தால் போதுமே:)

  ReplyDelete
 11. @ ஹுஸைனம்மா ஓட்டின்மூலமாக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாமே தவிர
  சமுதாயமாற்றம் என்பது நமக்குள் மலர்ந்தால் மட்டுமே சாத்தியம்..

  வருகைக்கு நன்றியும் வாழ்த்துகளும்..

  ReplyDelete
 12. dearbalaji பெங்களூரில் இலவசம் என்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி.. அரசு இயந்திரம் ஓரளவிற்கேனும் செயல்படுகிறது.:)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி:)

  ReplyDelete
 13. எஸ்.கே இருக்கலாம். நிறைய விசயங்கள் தனக்கு வந்தபின் அது கவனத்தில் எடுக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது உண்மையே:)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. பணம் சேர சேர அதைக்காப்பாற்றத் தேவையான விழிப்புணர்வு அவரிடம் அபரிதமாக வந்துவிட்டது..


  அற்புதம். நிகழ்காலத்தை தெளிவாக புரிந்து வைத்துள்ள சிவா.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)