"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, May 8, 2010

பூமியை பசுமையாக்க உதவுங்கள் - ப்ரணவபீடம்

நண்பர்களே நம் கண் முன்னே புல்லினங்கள் அழிக்கப்படுவதை கண்டு உணர்வற்று வாழ்கிறோம். சில நிமிடங்கள் அதற்காக வருந்தினாலும் நம் வாழ்க்கையில் தாவரங்களுக்கு என்ன செய்தோம் என்ற கேள்விக்கு விடை கூற முடியாத நிலையிலேயே இருக்கிறோம்.

நமக்காக தன்னையே அர்ப்பணிக்கும் தாவர இனத்திற்கு நாம் செய்யும் தீங்குகள் பல வழிகளில் நடந்து வருகிறது. வளர்ச்சிக்கு ஏற்படுத்தும் முயற்சியை காட்டிலும் அழிவுக்கு செய்யப்படும் காரியங்கள் பன்மடங்காக இருக்கிறது.

நவீன அறிவியல், ரசாயன கழிவுகள், நவீன மயமாக்கல் மற்றும் வன அழிப்பு ஆகியவை சுற்றுசூழல் மாசு மட்டுமல்லாமல் பல தாவர இனங்களை அழித்திருக்கிறது. நம் எதிர்கால சந்தியினருக்கு எஞ்சி இருக்குமா என கேட்கும் அளவுக்கு எத்தனையோ நாசகாரியங்கள் நடக்கின்றன.

பல்வேறு நாடுகள் இதை பற்றி உணர்ந்து அதிகப்படியாக நிதி ஒதுக்கி மரங்களை நடுகிறார்கள். இது உலக அளவில் ஏற்படும் பிரச்சனை என உணர்ந்து பல நாடுகள் எல்லைகளை கடந்து பிற நாடுகளிலும் மரங்கள் நடுகிறார்கள்.

பல நிறுவனங்கள் மற்று அரசு நிறுவனங்கள் மரம் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் முன்னெற்றம் என்பது மிக குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. சென்ற மூன்று வருடங்களில் கோவை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல அமைப்புகள் இணைந்து வைக்கபட்ட மரக்கன்றுகள் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்தை தாண்டும்.

இன்னும் லட்சக்கணக்கான மரங்கள் நடுவதற்கு பலர் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் முன்பு நட்ட மரங்கள் வளர்ந்திருக்குமானால் இன்று கோவை பசுமைக் காடாக மாறி இருக்கும்.

மரங்களை கொண்டு எத்தனை லட்சங்கள் நட்டோம் என எண்ணிக்கை காட்டுவதை விட உலகுக்கு எத்தனை மரங்கள் உயிருடன் இருந்து பயன் கொடுத்தது என்பது கூறுவது முக்கியம்.

அப்படியானால் நம் பூமியை பசுமை பூமியாக்க என்ன தீர்வு?

ப்ரணவ பீடம் என்ற ஆன்மீக அறக்கட்டளை இதற்கான தீர்வை கூறுகிறது. சமுதாய மாற்றம் என்பது ஓவ்வொரு தனிமனிதனில் இருந்தும் ஏற்பட வேண்டும். இந்த கருத்தை மையமாக கொண்டு “தாய் மரம்” என்ற திட்டத்தை முன்மொழிகிறது.

மரங்கள் செழித்து வளர மரங்களுக்கு தாயாக இருந்து வளர்ச்சியூட்ட சில மரங்கள் தேவைப்படுகிறது. அத்தகைய மரங்களே தாய் மரம்.

ப்ரணவ பீடம் அறக்கட்டளையும் அதனை சார்ந்தவர்களும் பல வருடங்களாக செய்த தாவரவியல் ஆராய்ச்சியின் விளைவாக உருவான திட்டம் இது.

எளிமையாக கூறுவது என்றால் பல லட்சம் மரம் கொடுக்கும் பலனை சில நூறு மரங்களில் சாதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

பாரத பாரம்பரியத்தில் விருக்‌ஷ சாஸ்திரம் என்ற நூல் பின்வரும் கருத்தை கூறுகிறது. நம் சூரிய மண்டலமும் அதனை சார்ந்த கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அடிப்படையில் தாவரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் அனைத்து கிரகம் அல்லது நட்சத்திரங்களுக்கு உண்டான தாவரங்களை வளர்ப்பதன் மூலம் அந்த பகுதியை இயற்கை மிகுந்த சூழலாக ஆக்க முடியும். இந்த மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இயற்கை மாசு ஏற்படாது.

தற்சமயம் மிகுந்த வரும் வெப்பமடைதல் என்ற விளைவைக் குறைக்கும், மழை பெய்யும் சூழலையும் அதிகரிக்கச் செய்யும்.

இதன் செயல் வடிவம் என்ன?


உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்.

மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும்.

சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால்

மாசுபடுதல்குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 செண்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் நலம்.

இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் இப்பணியை இலவசமாக செய்ய காத்திருக்கிறோம்.

தாய் மரம் செயல்படுத்துவதால் பயன் என்ன?

சமூக ரீதியாக நல்ல மாற்றத்தை உண்டு செய்யும்.

சுற்றுச்சூழலில் மாற்றம் உருவாகும்

நோய்கள் மற்றும் நோய் பரவலை குறைக்கும்.

தனிமனித குணத்தில் நன்மையை ஏற்படுத்தும்.தாய் மரத்திட்டத்தில் முக்கிய விதிகள் உண்டா?

ஆம்.மனரீதியாக சில புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்.

நீங்கள் வழங்கும் தாய்மரம் வளரக்கூடிய பூமியை குறைந்தபட்சம் 6 ஆண்டுகளுக்கு விற்பதற்கோ அல்லது மரங்களை எடுப்பதற்கோ அனுமதிக்க கூடாது.மரங்களை உங்கள் சொந்த உபயோகத்திற்கு தாராளமாக பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வெட்டுவதோ வேருடன் அகற்றுவதோ கூடாது.

தாய் மரம் உருவாக்கப்பட்ட பிறகு பத்து வருடங்கள் கழித்து உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் பூமியையும் தாவரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சொந்த இடம், பள்ளிகள், நிறுவனங்கள், ஆன்மீக ஸ்தலங்கள், ஆசிரமங்கள்,
பஞ்சாயத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என எதுவாகஇருந்தாலும் உங்களின் ஆளுமையில் பெற்றுக் கொடுங்கள். சிரம் பணிந்து பணி செய்ய காத்திருக்கிறோம்

நம்மை எப்பொழுதும் தாங்கி நிற்கும் பூமிக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம்?தாயாக தாங்கும் பூமிக்கு தாய் மரத்தால் நன்மை செய்வோம்.

தாய் மரம் உருவாக்க இணைந்து பணியாற்ற விரும்பினாலும்
இத்திட்டத்தை பற்றிய மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும்
மின்னஞ்சல் செய்யுங்கள்

thaimaram@gmail.com
தொலைபேசி : +91 98422 10907

வாருங்கள் அனைவரும் இணைந்து தாய் மரம் உருவாக்குவோம்.


தாவரத்திற்காக
உங்கள் தாழ் பணியும்


ஸ்வாமி ஓம்கார்


இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி உதவுங்கள்.
உங்களின் உதவிக்கு எங்கள் நன்றிகள்.

“எனக்கு வந்த மின்னஞ்சல், தகவலின் முக்கியத்துவம் கருதி இங்கு வெளியிட்டு இருக்கிறேன், வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் - நிகழ்காலத்தில் சிவா”

4 comments:

 1. mikavum ubayokamaana seythi. vaazhthukkal. thaaimaram amaippin sevaiyai oru naal kandippaaka payan paduththikolven. nandri

  T N Neelakantan
  www.neel48.blogspot.com
  www.thiruvadhirai48.blogspot.com

  ReplyDelete
 2. திரு சிவா,

  உடனடியாக வினையாற்றியமைக்கு நன்றி.

  ReplyDelete
 3. சொந்த இடம், பள்ளிகள், நிறுவனங்கள், ஆன்மீக ஸ்தலங்கள், ஆசிரமங்கள்,
  பஞ்சாயத்தில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் என எதுவாகஇருந்தாலும் உங்களின் ஆளுமையில் பெற்றுக் கொடுங்கள். சிரம் பணிந்து பணி செய்ய காத்திருக்கிறோம்

  ...Best wishes! Thats nice.

  ReplyDelete
 4. தாய் மரத் திட்டம் வெற்றி பெறட்டும்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)