வேர்ட்பிரஸ் தளத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பதிவை எத்தனைபேர் பாத்திருக்கிறார்கள், எந்த நாளில் எந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். அப்போதல்லாம் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பது மட்டுமே என்னால் முடியும் :)
ஆனால் இப்போது கூகுள் பிளாக்கரில் வலைப்பதிவு வைத்திருக்கும் நானும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம். என்னுடைய இந்த இடுகை இத்தனை பேரால் படிக்கப்பட்டு இருக்கிறது, இத்த்னை மணிக்கு இவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என புள்ளிவிவரம் கொடுக்க முடியும்.
முதல்ல உங்களது டாஷ்போர்டு blogger in draft ஐ டிக் அடித்து அந்த வசதியை ஏற்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்களது பிளாக்கர் டாஷ்போர்டுக்கு போய்ப்பாருங்க., புதுசா status என ஒரு பகுதி இருக்கும்..அதை கிளிக் பண்ணுங்க, இனி தேவையான பார்வையாளர்கள் விவரம் உங்கள் விரல் நுனியில்..
overview, என்பது மொத்தமாக அனைத்து விவரங்களையும் உள்ளடக்கி இருக்கும். இதை now, lastday, lastweek, lastmonth, alltime என தனித்தனியாகவும் பார்க்கலாம்.
இதையே தனித்தனியாக பிரித்து posts என்கிற தலைப்பில் இன்று, நேற்று, போனவாரம், போனமாதம் என எந்தெந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு இருக்கின்றது என அறியலாம்.
traffic sources இந்த தலைப்பில் எந்தெந்த வலைத்தளங்களின் வழியாக நண்பர்கள் வந்துள்ளனர் என அறிந்து வருங்காலத்தில் அதற்கு தகுந்தாற்போல் செயல்படலாம்.
audience என்கிற தலைப்பில் எந்தெந்த நாடுகளில் இருந்து நண்பர்கள் வருகின்றனர். அவர்களால் பயன்படுத்தப்பட்ட உலாவிகள், ஆபரேட்டிங் சிஸ்டம் முதல் தொகுத்து தருவதையும் பார்க்க்லாம்.
இனி நீங்களும் புள்ளிவிவர சிங்கம் ஆகிவிடலாம்...
அப்பாடா, நானும் ஒரு தொழில்நுட்ப பதிவு போட்டாச்சு :))
// வேர்ட்பிரஸ் தளத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பதிவை எத்தனைபேர் பாத்திருக்கிறார்கள், எந்த நாளில் எந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். அப்போதல்லாம் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பது மட்டுமே என்னால் முடியும் //
ReplyDeleteநாங்களெல்லாம் வேர்ட்பிரஸ்! :)))))
http://www.google.com/analytics/ -- see there for more..
ReplyDeleteyou can get more info
status என்ற வசதியை முதலில் கொண்டு வருவது எப்படி? புரியவில்லை
ReplyDeleteமுதல்ல உங்களது டாஷ்போர்டு blogger in draft ஐ டிக் அடித்து அந்த வசதியை ஏற்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்களது பிளாக்கர் டாஷ்போர்டுக்கு போய்ப்பாருங்க., புதுசா status என ஒரு பகுதி இருக்கும்..
ReplyDeleteஅதுதான் இந்த இடுகையின் முதல்படம்!
நண்பரே! அருமை! எனக்கு இதுவரை தெரியாமல் இருந்த விஷயத்தை தெரியபடுத்திட்டீங்க!
ReplyDeleteமுயற்சி செய்து பார்த்தேன். நன்றி!