"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, June 23, 2010

தமிழ் செம்மொழியும்,.. தனிநாட்டின் அவசியமும்

உலகின் மூல மொழிகள் எனப்பெறும் உயர்தனிச் செம்மொழிகள் ஆறுமட்டுமே. மற்ற மொழிகள் அனைத்தும் இவற்றிலிருந்து பிறந்த சேய்மொழிகளே.

(1) இஸ்ரேல் நாட்டின் யூதர்கள் பேசும் எபிரேய மொழி (ஹீப்ரு மொழி), இயேசுநாதர் பேசிய மொழி
(2) ரோமானியர்கள் பேசிய லத்தீன் மொழி.
(3) கிரேக்கர்கள் பேசிய கிரேக்க மொழி
(4) மத்திய ஆசியாவின் ஆரியர்கள் பேசிய சமஸ்கிருத மொழி
(5) சீனர்கள் பேசும் Mandrine எனப்பெறும் சீனமொழி
(6) நம் தாய்மொழியாகிய தமிழ்மொழிஇவற்றுள் நான்கு மொழிகள் தம் தனித்தன்மையை இழந்து பிற மொழிகளில் கலந்து ஒட்டுக்குடித்தனம் நடத்தி உயிர் வாழ்கின்றன. அவற்றை பேசிவந்த இனத்தவர்களும் தங்கள் அறிவு, திறமை, புகழ், பண்பாடு, நாகரீகம் போன்றவற்றை இழந்து ஒட்டுண்ணிகளாய் உயிர் வாழ்கின்றனர்.

லத்தீன் மொழியைப் பேசி வந்த நாடாகிய ரோமானியப் பேரரசுதான் இன்றைய இத்தாலி! மாஃபியா கும்பலின் தலைமையிடமாக மாறி, உலகின் பார்வையில் கேவலப்பட்டு நிற்கும் நாடாக மாறியதற்குக் காரணம் தன் தாய்மொழியாகிய லத்தீனை ஆங்கிலத்துடன் கலந்து உயிர் இழக்கச் செய்ததுதான்.

சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ என உலகம் வியக்கும் அறிஞர்களைப் பெற்றிருந்த கிரேக்கநாடு இன்று இருந்த இடம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் தம் தாய்மொழியாகிய கிரேக்க மொழியை ஆங்கிலத்துடன் கலந்து உயிர் இழக்கச் செய்ததுதான்.

தம் அறிவாலும், திறமையாலும், ஒற்றுமையாலும் இன உணர்வாலும் பல நாடுகளின் பொருளாதாரத்தைக் கைப்பற்றி வாழ்ந்த யூதர்கள், ஜெர்மனி நாட்டில் ஆரிய இன வெறியுடன் திகழ்ந்த அடால்ப்ஃ ஹிட்லரிடம் அடிவாங்கி நொந்த பிறகுதான் தமக்கு என தனிநாட்டை உருவாக்க முயன்று வெற்றியும் பெற்றனர். அதுதான் இன்றைய இஸ்ரேல். அந்தக்காலத்து ராக்பெல்லர் முதல் இந்தக் காலத்து பில்கேட்ஸ் வரை உலகக் கோடீசுவரர்கள் அனைவரும் யூதர்கள்தாம். ! மங்காத இன உணர்வாலும், இன ஒற்றுமையினாலும் இழந்த நாட்டை அவர்கள் மீண்டும் பெற்றார்கள். இழந்த மொழியை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் மும்முரமாய் உள்ளனர்.

சமஸ்கிருதத்தைப் பொறுத்தவரை தனக்கென தனிநாடு, தனிமக்கள் என எந்தச் சிறப்பும் இன்றி உலகின் சகல மொழிகளிலும் கலந்து ஓர் ஒட்டுண்ணி மொழிஆக உயிர் வாழ்ந்து வருகிறது. அது ஒரு மூலமொழி என்பதால் தன் உயிர்ப்பை இன்னும் இழக்காமல் வாழ்கிறது.

அன்று கண்டமேனிக்கு அழிவில்லாமல் ஆதிகாலம் முதல் அப்படியே வாழ்ந்து, வளரும் மொழிகள் என்றால் அவை இரண்டுதாம். சீன மொழியும், தமிழ் மொழியுமே அவை. இதை அடிக்கடி தமிழர்களுக்கும்,உலகத்திற்கும் நினைவூட்ட வேண்டிதான் உலகத்தமிழ் மாநாடுகள், உலகத்தமிழ் செம்மொழி மாநாடுகள் என நடத்தி வருகின்றனர் அரசியல் தலைவர்கள்.

ஓர் இனத்தின் ஞானம் எனபது அந்த மொழியின் நீண்ட வரலாற்றையும், ஆழத்தையும் பொறுத்தே அமையும். அந்த வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள். நம் மொழிக்கென தனி எழுத்து உண்டு. பிற மொழிகளில் இருந்து எழுத்தையோ, சொற்களையோ கடன் வாங்க வேண்டிய தேவையோ அவசியமோ நம் தமிழ் மொழிக்கு கிடையாது.


சகல இலக்கணங்களுடன், ஞானத்துடனும் காலத்தை வெல்லும் திருமறைகளுடனும் திகழும் தங்கம் போன்ற நம் மொழியை எந்த அளவு மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்மொழியில் நாம் தெளிவுடன் இருந்தால் மட்டுமே திருக்குறள், திருவாசகம், தேவாரம், திருவருட்பா போன்ற திருமறைகளில் உள்ள ஞானத்தை பெற முடியும். எனவே தமிழ் மொழியில் படிப்பது, தமிழ்மொழியைக் கற்பது என்பதும் தமிழைக் காப்பாற்றுவதற்கு அல்ல. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளத்தான் என்ற உண்மையை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் அற்புதமான செம்மொழியை தாய்மொழியாகப் பெற்ற நமக்குத் தனியாக தமிழ்நாடு என்ற ஒரு நாடு இல்லாதது பெரும் குறைதான். போரடிப்பெற முடியாவிட்டால், இஸ்ரேல் நாட்டை யூதர்கள் விலை கொடுத்து வாங்கியதுபோல் நாமும் நன்கு சம்பாதித்து கோடீஸ்வரர்களாக உயர்ந்து, விலை கொடுத்தாவது ஒரு நாட்டை/பெரும் தீவை வாங்க வேண்டும். ஞானம் வந்தால் பணம் தானாக வரும். எனவே அச்சமின்றி உழைப்போம்.

மொழியை இழந்த இனம் தன் ஞானத்தை இழக்கும், நாகரீகத்தை, பண்பாட்டை இழக்கும். ஆகவே நம் தாய்மொழியை நெஞ்சில் வைத்துப்  போற்றுவோம்.

நன்றி: ஏபரல் 2010 கவனகர் முழக்கம் மாத இதழ்
Post a Comment