ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்?
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்
தெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.
5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.
இப்போது சொல்லுங்கள்!
உங்கள் வாழ்க்கை...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?
5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?
வாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.
அடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்
பல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.
சொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.
குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்...
சுயமானதாக................................................SELF
அளவிடக் கூடியதாக..................................MEASURABLE
அடைய முடிவதாக....................................ACHIVEABLE
யதார்த்தமுள்ளதாக...................................REASONABLE
காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED
நம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.
உதாரணமாக..
அடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....
20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...
என் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.
குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.
நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)