"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 9, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3

திருப்பூரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழில்ரீதியாக எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பதால் பலசமயங்களிலும் நீறுபூத்த நெருப்புப்போல்தான் தன் குடும்பத்தினரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிகிறது. இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.ஆனால் நம் குடும்பத்தினரின் அன்பைப் பெறுவதிலும், அதை நான் உணரக்கூடிய சந்தர்ப்பத்தையும் நிறைய இழந்திருக்கிறேன் என்பதை அந்தப் பேப்பர் உணர்த்தியது. அது பேப்பர் அல்ல. கடிதம்:)

இதைத் திறந்து படித்தவுடன் நான் அடைந்த நெகிழ்வை, உணர்வை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது.என் மகளின் அன்பை பூரணமாக நான் உணர்ந்து கொள்ள இந்தப் பயணம் ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது, இந்தப் பயணத்தின் மனநிறைவை நான் அப்போதே அடைந்தேன்.

எந்த நிகழ்வும் தகுந்த காரணமின்றி நிகழ்வதில்லை. இந்தப் பயணம் எனக்கு வாய்த்ததே இந்த அன்பை உணரத்தானோ...
Post a Comment