"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, January 24, 2010

படித்ததில் பிடித்தது 24/01/2010

கூடுசாலை நண்பரின் இடுகை நாம் பரிசோதனை எலிகள் இல்லை

//இந்த மலட்டு விதைகளை கொண்டு நம் விவசாயிகள் மீண்டும் விதைக்கமுடியாது. விளைவு விவசாயிகள் விதைகளுக்கு மீண்டும் அந்த நிறுவனத்தையே அண்டியிருக்க வேண்டும். நம் முன்னோர்கள் “விதைகள்” என கொஞ்சம் தானியங்களை தலைமுறை தலை முறையாய் காப்பாற்றி நம் கைகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் தானிய ங்களை இழந்துவிட்டு விதைக்காக வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனங்களிடம் நிற்கவேண்டும்.//

பெரிய அளவில் பணம் பண்ணுவது என்பது மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தோடு, ஒரு நாட்டின் விவசாயத்துறையையே மலடாக்கத்துடிக்கும் இயல்பு கண்டு மனம் கொதிக்கிறது.. நீங்களும் படித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

***********************************************
அடுத்தது ஒரு தொழில்நுட்பம்....


இன்டர்நெட் விரும்பியா? உஷார் ஜெர்மன் அரசு எச்சரிக்கை

பெர்லின் : இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக உள்ளதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதை தொடர்ந்து, அதற்கு மாற்றாக வேறு இணைப்பை பயன்படுத்துமாறு, ஜெர்மன் அரசு, அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் இணையதளங்களில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் இணையதளங்களை, சீனா திருடி வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து, கூகுள் போன்ற இணையதள இணைப்பிற்கு செல்ல பயன்படுத்தும், இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டது.எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு, இதனால் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு, இணையதள பயன்பாட்டாளர்களுக்கு தீவிர அபாயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து, ஜெர்மன் நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகம் அல்லது பி.எஸ்.ஐ., கூறியதாவது:ஜெர்மனியர்கள், எக்ஸ்புளோரரின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், தாக்குதல்கள் நடத்துவது என்பது சிறிது கடினமானது; ஆனால், முழுவதுமாக பாதுகாப்பு அளிக்காது. எனவே, இணையதளத்தை பயன்படுத்தும், ஜெர்மனியர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வேறு பிரவுசரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தாமஸ் பாம்கார்ட்னர் கூறுகையில்,"ஜெர்மன் அரசின் எச்சரிக்கை குறித்து, மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூகுள் இணையதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குறிப்பிட்ட நோக்குடன், பெரியளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள், சாதாரண மக்கள் அல்லது நுகர்வோர்களுக்கு எதிராக நடைபெறாது'

நன்றி: தினமலர்

3 comments:

 1. எல்லோருமே இந்த விதையை எதிர்க்கும் போது இந்திய அரசு ஒப்புதல் அளிக்கிறதே? என்ன காரணம் சிவா?

  ReplyDelete
 2. வெறும் தகவலகள், உணர்வுகளைத் தூண்டும் காலம் மலையேறி விட்டது,சிவா.
  நம் குடும்பங்களுக்கும்,அதையும் மீறி நமக்கும் மட்டும் நடக்கும அநியாயங்களை மட்டும் கண்டு பதற்றப் படும் அளவுக்குச் சுயநலம் பெருத்த விட்ட சமூகமாகி விட்டோம்.

  அனைவருக்கும் தெரிந்தே,அனைவரின் அனுமதியுடன் அல்லது உதாசீனத்தோடே எல்லா அக்கிரமங்களும் நடக்கின்றன.

  எல்லோருக்கும் வடிகால்கள்தான் தேவை.விடிவுகள் தேவை இல்லை.

  அத்ர்மங்களுக்கு அயோக்கியர்கள் மட்டும் பொறுப்பல்ல.நாம் அனைவருமே பொறுப்பு.

  ReplyDelete
 3. IE மட்டுமில்லை, கடந்த சில நாட்களாக நெருப்பு நரியும் ரொம்பவே தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. கூகிள் க்ரோமில் பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்குப் பொறுமை இல்லை. இன்று இணையத்தின் உபயோகம் அதிகரித்து இருப்பது எந்த அளவு உண்மையோ, அந்த அளவுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதுமே உண்மை.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)