"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, January 13, 2010

எனக்குத் தேவை பணம், பதவி, புகழ்

சென்னை : "தமிழக அரசின் முக்கிய திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர், "டிவி', காஸ் அடுப்பு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை, முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாமென அரசுக்கு சிபாரிசு செய்துள் ளோம்,'' என தமிழக, புதுச்சேரி இந்திய தணிக்கை முதன்மை அதிகாரி சங்கர் நாராயணன் தெரிவித்துள்ளார்.


அவர், மேலும் கூறியதாவது:தமிழகத்தில், கடந்தாண்டு மார்ச் வரை கிராமப்புறங்களில் அமல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் பற்றி, தணிக்கை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.கிராமப்புறங்களில் குளம் வெட்டுதல், வாய்க்கால் வெட்டுதல் போன்ற நீர் ஆதார வசதியை மேம்படுத்துதல் மற்றும் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி' திட்டம் உள்ளது.ஆறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட வேண்டிய 120.98 கோடி ரூபாய், முக்கியமில்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, இலவச கலர் "டிவி', இலவச காஸ் அடுப்பு, முதியோருக்கான பென்சன், மகளிர் உதவிக் குழுவினருக்கு கடன் மற்றும் தள்ளுபடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.


ஒரு சில நகராட்சிகளில், வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவரங்கள் அடங்கிய பட்டியலை, கடந்த திங்கள் கிழமை, சட்டசபையில் தாக்கல் செய்துள்ளோம்.உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பணியை எடுத்துக் கொள்வதற்கு முன், அப்பணியை எப்படி செய்ய வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை இல்லாமல், பல வேலைகளை திட்டமிடாமல் செய்து, மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி, நிர்வாகம், சுகாதாரம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில், மோசமான பணியை செய்துள்ளது.


முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.

நன்றி தினமலர் 13.01.2010

6 comments:

 1. காலையில் படித்தவுடன் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன். மக்களுக்கு 100 முதல் 1000 வரை இலவசமாக கொடுத்தால் அத்தனையும் மறந்து விடுவார்கள். ஆனால் அவர்கள்?

  கடந்த 15 ஆண்டுகளில் இந்த தணிக்கை அதிகாரிகள் தமிழ்நாட்டில் நடந்த மொத்த நிகழ்வுகளையும் ஒருவர் படித்தால் " அரசியல் ஞானம்" நிச்சயம் கிடைக்கும்????

  ReplyDelete
 2. //முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை//

  நீங்க சொன்னா மட்டும் யார் குடும்ப திட்டங்களுக்கு என்று எங்களுக்கு புரிந்து விட போகிறதா என்ன?

  நாங்க எல்லாம் ஓட்டு சீட்டுல யாரு நிறைய பணம் வைத்து தருகிறார்கள் என்று மட்டும்தான் பார்ப்போம் தெரியுமா :-)

  ReplyDelete
 3. அன்பின் சிவசு

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  இதெல்லாம் கடமை - அவரவர்கள் செய்வார்கள் - ஒன்றும் மாறப்போவதில்லை

  ReplyDelete
 4. //முக்கிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, இலவசங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என, அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.இவ்வாறு சங்கர் நாராயணன் கூறினார்.//

  மகிழ்ச்சியான விடயம்


  பொங்கல் தின வாழ்த்துகள் நண்பா

  ReplyDelete
 5. ச*ட சபைல மாடு மேய்க்கிறவன் லெவெல்ல பேசுறதுல இருந்தே தெர்யுது. என்னத்த சொல்ல

  ReplyDelete
 6. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். செய்தி பகிர்வுக்கு மிக்க நன்றி. காலம் மாறும்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)