"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 7, 2010

நீங்கள் இடது மூளைக்காரரா?, வலது மூளைக்காரரா?

நமது மூளையை முன்மூளை, நடுமூளை,பின்மூளை என பகுக்கலாம். அதில் முக்கியமாக முன்மூளைப்பகுதி எனப்படும் இரு அரைவட்டப் பகுதிகள் உணர்தல், மொழி, சிந்தனை போன்றவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதிகள் இடதுமூளை, வலது மூளை எனவும் அழைக்கப்படுகின்றன.1950 லிருந்து மூளையைப்பற்றி ஆய்வு செயத ரோகர் ஸ்பெர்ரி என்பவர் மூளையின் இவிரு பகுதிகளும் வெவ்வேறு அளவில், வெவ்வேறு வகையில் பணியாற்றுகின்றன எனக் கண்டறிந்தார். இதற்கென 1981 ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இடது மூளைப்பகுதி மொழியறிவு, ஒன்றைத் தொகுத்துச் சொல்லுதல், தொடர்ச்சியாக எண்ணுதல், கருத்தாக்கம் போன்ற திறன்களைக் கொண்டிருக்கிறது. எண்கள், தொடர்ச்சியாக கணித்தல், காலம் பற்றிய அறிவு, கணக்கறிவு, பெயர்கள் மற்றும் அடையாளங்களை அறிகிறது. ஒவ்வொரு செய்திகளையும் அதன் அடிப்படைப் பகுதிகள் வரை பல கூறுகளாக்கி ஆய்வு செய்கிறது. முழுமையான செய்திகளிலிருந்து தொடர்புடைய சிறுசிறு செய்திக்கூறுகளைப் பிரித்து அறிகின்றது. நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எதையும் விவேகத்தால் பகுத்து (analytical) அறியும் தன்மை கொண்டது. தர்க்க உணர்வு அதிகம். படித்தல், எழுதுதல்,செய்திகளை நினைவுக்கு கொண்டு வருதல்,உலகியலுக்கு வேண்டியவைகளை நன்கு நிர்வகிக்கிற்து. உள்ளுணர்வுத் தொடர்பில்லாத அறிவுலக, பொருளாதார வாழ்வை நிர்ணயிப்பதில் இதன் பங்கு மிக முக்கியம்.

வலது மூளைப்பகுதி: மொழியறிவு இன்றி சைகைகளாலும், படங்களாலும் சொல்ல முயலும். சிறு சிறு விசயங்களை ஒன்றாக இணைத்து முழுமையாக்கும். இருவேறு விசயங்களுக்கிடையே, உருவங்கள், பொருள்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது.

ஒவ்வொரு விசயமும் எப்படி இருக்கிறதோ அதைப்பற்றிய உணர்வைக் கூட்டாமலும், குறைக்காமலும், உள்ளது உள்ளபடி பார்க்கும் பார்க்கும் பண்பைக் கொண்டது. காலம், எண்கள் குறித்து அறியும் ஆற்றல் இதற்குக் குறைவு.

உள்ளுணர்வு, உருவ அமைப்பு, கலை, ஞானம், இசை, கனவு, மனக்காட்சிகள், முழுமையான தீர்வு காணல், தத்துவஞான கொள்கைகள், சிறுசிறு விசயங்களை ஒன்று சேர்த்தல், ஒவ்வொரு துணுக்கையும், விசய ஞானத்தையும், செய்தியையும் உருவ அமைப்பையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி முழுமைப்படுத்துகிறது. அறிவு குறிக்கிடாத உணர்வுலக வாழ்க்கையை நடத்துகிறது,

இப்படித் தனித்தனி சிறப்புப் பணிக்ளை கொண்டிருந்தாலும், ஒன்றுக்கொன்று இவை துணையாகவே இயங்குகின்றன. இதில் எந்நேரத்தில் எந்த மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்த உணர்வுகள் நமக்கு மேலோங்கி இருக்கும்.

இவ்விரு மூளையும் சரியான விகிதத்தில் இணைந்து செயலாற்றும் போது எந்த செயலும் அறிவு பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் இருக்கும். நிறைவாகவும் இருக்கும்.

மாறாக இடது மூளை ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பொருளை முக்கியமாக வைத்து காரியமாற்றுவோம். அங்கே மனிதம் சார்ந்த உணர்வுகள் குறைவாகவே இருக்கும். விளைவு நம் செயலால் பிற உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணரமாட்டோம்.

வலது மூளை ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது பொருள்சார்ந்த செயல்பாடுகளில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.

இவையிரண்டையும் சரியான விகிதத்தில் இயங்க வைப்பது நம் வாழ்வு சிறக்க மிகவும் அவசியம். உள்முகமாக நம்மைக் கவனிக்கும் தியானப் பயிற்சிகளின் மூலம் இதை கொண்டு வரலாம். வாழ்வில் தியானம் செய்வதைவிடவும் வாழ்வையே தியானமாக மேற்கொள்வது சிறந்தது.

நட்புகள், உறவுகள் இடையே பழகும்போது உங்களை நீங்களே தரம் பிரித்துக்கொள்ளுங்கள். இடதுமூளை ஆதிக்கத்தில் உள்ளீர்களா, அல்லது வலது மூளை ஆதிக்கத்தில் உள்ளீர்களா என. பின் இடதுக்கும் இடதுக்கும் எளிதில் பொருந்தும், வலதுக்கும் வலதுக்கும் எளிதில் பொருந்தும். மாறினால் பொருந்தாது. இதை பொருந்த வைக்கவே தியானம்.

தற்போது இடது மூளையின் ஆதிக்கத்தில் உள்ள நண்பர் எழுத்திற்கு இதோ உதாரணம்.

கருத்து: வானத்தை வசப்படுத்தும் வார்த்தைகள் நூலில் இருந்து...

9 comments:

 1. ரொம்ப அறிவான மூளையோடு சொல்லிருக்கிங்க...உங்களுக்கு வாழ்த்துங்கோ

  ReplyDelete
 2. வால் பையன் பெயரை நேரடியாகவே சொல்லியிருக்கலாமே சிவா! உங்கள் பதிவில் இலவசமாக விளம்பரம் கொடுப்பதற்கு உடனடியாக நன்றியை வந்து சொல்லியிருப்பாரே!

  வால்ஸ் எழுதுவது கொஞ்சம் விடலைத் தனம் மட்டும் தான்!விஷமத்தனமோ, விஷம் கலந்தோ இல்லை!

  அதற்கெல்லாம் கொஞ்சம் சிவப்புச் சாயம் கலந்திருக்க வேண்டும்!

  ReplyDelete
 3. எனக்கு மூளை இருக்குன்னு ஒத்துகிட்டதுக்கு ஒரு நன்றி!

  :)

  அது இடதா, வலதான்னு ஆராய்ச்சிக்கு இன்னொரு நன்றி!

  :)

  ReplyDelete
 4. //rk guru said...

  ரொம்ப அறிவான மூளையோடு சொல்லிருக்கிங்க...உங்களுக்கு வாழ்த்துங்கோ //

  வாழ்த்திற்கு நன்றி, உடன்பாடான கருத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டேன் அவ்வள்வுதான்.. :))

  ReplyDelete
 5. \\கிருஷ்ணமூர்த்தி said...

  வால் பையன் பெயரை நேரடியாகவே சொல்லியிருக்கலாமே சிவா! \\

  படிப்பவருக்கு யார் என பார்க்கும் ஆவலைத் தூண்டும் விதமாக அப்படி எழுதினேன்..

  \\உங்கள் பதிவில் இலவசமாக விளம்பரம் கொடுப்பதற்கு உடனடியாக நன்றியை வந்து சொல்லியிருப்பாரே!\\

  ஒன்றல்ல இரண்டு நன்றிகள் வந்துவிட்டன தோழமையுடன்..:)))

  //வால்ஸ் எழுதுவது கொஞ்சம் விடலைத் தனம் மட்டும் தான்!விஷமத்தனமோ, விஷம் கலந்தோ இல்லை!//

  எப்போதும் விடலைத்தனம் என்பது மற்றவர்களால் விசமத்தனமாக பார்க்கப்படும் அபாயம் உண்டு..:))

  ReplyDelete
 6. கல்க்கிட்டிங்க ;)

  ReplyDelete
 7. //வலதுக்கும் வலதுக்கும் எளிதில் பொருந்தும். மாறினால் பொருந்தாது. இதை பொருந்த வைக்கவே தியானம்.//

  என்னென்னவோ சொல்றீங்க. பெரிய ஆளுதான் நீங்க.

  ReplyDelete
 8. //Sabarinathan Arthanari said...

  கல்க்கிட்டிங்க ;)//

  நன்றி :))))

  ReplyDelete
 9. கொல்லான் said..

  // என்னென்னவோ சொல்றீங்க. பெரிய ஆளுதான் நீங்க.//

  இருக்கிறத சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான்:))

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)