"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, September 20, 2010

விழிப்புணர்வு என்பது என்ன?

விழிப்புணர்வு என்பதை கொங்குத்தமிழில் சொல்வதென்றால் வே(ய்)க்கானமா இருக்கனும்,விவரமா இருக்கோனும் அப்படின்னு வெச்சுக்குங்களேன்:)

விழிப்புணர்வு என்பது எதிலும் எச்சரிக்கையாக இருத்தலைக் குறிக்கும். எதுகுறித்தும் கூடுதல் விவரங்கள் தெரிந்து வைத்திருத்தலும் கூட விழிப்புணர்வுதான்.

விழிப்புணர்வு அப்படின்னா சமுதாயக் கண்ணோட்டத்தில் இந்த வார்த்தை புழக்கத்தில் எப்படி இருக்குன்னு பார்த்தீங்கன்னா, இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு, இரத்தம் கொடுத்தா நமக்கு ஏதாவது ஆயிப்போச்சுன்னா என நினைப்பது மக்களோட பொதுவான இயல்பு, அப்படி ஒன்னும் ஆகாது. மிகக்குறைஞ்ச அளவுதான் எடுப்பாங்க, அதுவும் குறிப்பிட்ட நாளில் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும் அப்படின்னு அவங்களுக்கு தெரியாத கூடுதல் தகவல்களை எடுத்துச்சொன்ன அது விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

இதேபோல் கண் தானம், உடல்தானம் என மருத்துவ சம்பந்தமான விழிப்புணர்வு, அப்புறம் சுகாதாரம், சுற்றுச்சூழல் சம்பந்தமான மரம் நடுதல் குறித்து, மரங்களை அழித்தால் என்னென்ன தீமை,வளர்த்தால் என்ன நன்மை,

கிராமப்புறங்களில் கழிவறை உபயோகம், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

ஓட்டுப்போடுவது குறித்தான விழிப்புணர்வு எத்தனை பேருக்கு இருக்கிறது:) 100 சதவீதம் ஓட்டுப்பதிவு இருந்தால் இந்த கழகங்களின் ஆட்டங்களெல்லாம் அடங்கிவிடும். தெளிவான சட்டசபைக்கான பெரும்பான்மை படித்தவர்களால் நிர்ணயிக்கப்படும். இன்னும் சின்னங்களின் செல்வாக்கிலும், பணத்தாலும் ஓட்டு வாங்குவது செல்லாக் கதையாகிவிடும்.

இப்படி எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு இருந்தால் என்ன நன்மை, இல்லாவிட்டால் என்ன இழப்பு என்ன தாரளமாக உங்களாலேயே சற்று யோசித்தால் எளிதில் உணரமுடியும்.

அன்றாட வாழ்வில் தேவையில்லாத இழப்புகளை தவிர்க்க வேண்டும் என்றால் விழிப்புணர்வு தேவை. உதாரணமாக சொத்து குறித்தான ஆவணங்களில் என்னஎன்ன நகல்கள் நம்மிடம் இருக்கவேண்டும். பட்டா மாறுதல், போன்ற அரசு சார்ந்த நடைமுறைகள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் இது இல்லாவிடில் புதிதாக வாங்கும் சொத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்து நமக்குத் தெரியாவிட்டால் சிக்கல்தான்.

எலக்டிரிகல் விசயம் சாதரண ஃபியூஸ் போடத் தெரியாவிட்டால் இருட்டில் உட்கார்ந்திருக்கவேண்டும்:)

இப்படி விழிப்புணர்வின் அடிநாதம் என்ன அப்படின்னு பார்த்தால் பயம்தான். இல்லை புவி மீதும், சமுதாயத்தின் மீதும் கொண்ட அக்கறை என்று சொன்னால் கூட அந்த அக்கறை நாம் நிம்மதியாக வாழவேண்டும் அதற்கு இடைஞ்சல் வந்துரக்கூடாது என்ற பயம்தான். 

வாழ்க்கைகுறித்தான, உடல், மனம், பொருள் என எல்லாவற்றிலும் நாம் இழப்பை சந்தித்து விடுவோமோ என்ற பயம் தான்.

மற்றவர்களை விட நாம் எல்லா விசயங்களிலும் பின் தங்கி இருக்கிறோமா இல்லையா என ஒப்பிட்டுப்பார்த்தால் நமது விழிப்புணர்வின் தன்மை தெரிந்துவிடும். ஆக விழிப்புணர்வு என்பது பொருளாதார வாழ்க்கையில் நமது வாழ்க்கைநிலை மேலும் மேலும் வளமடைவதற்கும், இழப்பு ஏதுமின்றி இருப்பதற்கும் கண்டிப்பாக தேவை, தேவை,தேவை. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

விழிப்புணர்வு நமக்கு எச்சரிக்கை உணர்வைத் தரும். முன்னேற்றத்தைத் தரும். ஆனால் பயத்தை விலக்காது.

உடல்வலுவுள்ளவன் எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்பேன் என்றால் கூட அவனுக்கும் வேலைகுறித்தோ, வாழ்க்கை குறித்த அச்சம் உள்ளூர இருந்தே தீரும். அதன் சதவிகிதம் வேண்டுமானால் கூட குறைய இருக்கலாம்.

முடிவாக  விழிப்புணர்வு நமக்குத் தேவையானதா என்று பார்த்தால் அது நிச்சயம் தேவை, ஆனால் ஏற்கனவே நான் விழிப்புணர்வுடன்தான் இருக்கிறேன் என்பவர்களுக்கு அதுவே போதுமானதா என்றால் இல்லை அடுத்த நிலை ஒன்று உண்டு. அதுதான் பயமற்ற விழிப்புணர்வு..... அதுவே விழிப்புநிலை:)

சரி விழிப்புநிலை என்பது பயமற்ற விழிப்புணர்வு என்றால் அதை எப்படி அடைவது? அதன் பலன் என்ன? அது வாழ்க்கைக்கு எல்லாவிதத்திலும் எந்த அளவு உதவும்?..

தொடர்ந்து சிந்திப்போம்....

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment