"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, February 27, 2009

எப்படி இப்படி?

பனியன் நிறுவன பேக்கிங் பிரிவில் பணிபுரியும் பெரியவர் வயது ஐம்பதுஇருக்கலாம் . ஆறுமாத அனுபவம் உள்ளவர் பெயர் சண்முகம் .

சகதொழிலாளி சம வயது குமார் எட்டுவருட அனுபவம் உள்ளவரும் உடன் பணிபுரிகிறார் குமார் பலவித நெளிவு சுளிவு எங்களால் கற்று தரப்பட்டு பலவேலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வோம்.பேக்கிங் பிரிவில் தலைமைப் பொறுப்பும் அவருக்கே. அதன் பலன்தவறுகள் நடக்காது

சண்முகத்தின் பார்வையில் குமார் சற்று சுகமாக இருந்துகொண்டு வேலை செய்யாமல் தன்னை மட்டும் வேலை வாங்குவதாக பட்டது.
குமார் ஒருநாள் வேலை சம்பந்தமாக குறிப்புகள் கொடுக்க சண்முகம் "போய்யா உன் வேலைய பார்த்துக்கிட்டு" என்று மிகுந்த சப்தமிட்டார்.
நான் உடனே "அய்யா தவறு ஏற்பட்டுவிடக்கூடாது
என்பதற்க்காக சொல்கிறார். ஏன் கேட்டால் என்ன? "என்று,
வினவ அடங்க மறுத்து வேலையை விட்டு விலகுவதாக வெளியேறினார்.

குடும்பம், வருமானம், பொறுப்பு இது பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல்
எப்படி இருக்கிறார்கள் இப்படி? இவரைப் போன்றவர்கள் ஒட்டளித்தால்..?
யாரை குற்றம் சொல்வது?

இதுதான் அதிர்ஷ்டம் என்பதோ?

பனியன் தயாரிக்கும் சிறிய தொழில்சாலையில் நடந்த சம்பவம் இது.

பெரிய எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் சப் காண்டிராக்ட் அடிப்படையில் ஆர்டர் எடுத்து், முழு பனியனையும் தயார் செய்து, தரக் கட்டுப்பாடுகளை நிறைவு செய்து, தவறு ஏற்பட்டால் முழு இழப்பையும் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது
பனியனில் ப்ரிண்டிங் அடிக்க, பெரிய நிறுவனத்தின் அதிகாரபூர்வமான
பிரிண்டிங் நிறுவனத்தில் தொடர்பு கொண்டேன். அந்த
ப்ரிண்டிங் நிறுவனத்தின் பொறுப்பு, எக்ஸ்போர்ட் நிறுவனம் தரும் பல்வேறு டிசைன்களை தயாரித்து, கலர் மற்றும் இதர தரக்கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்து, மாதிரி பனியனில் பிரிண்ட் அடித்து தர வேண்டும்.
பிறகு பையர் அப்ரூவல் கிடைத்ததும், மொத்த ஆர்டரையும் அதே தரத்துடன் மாறாமல், கலர் உட்பட ப்ரிண்ட் அடிக்க வேண்டும்.

இதில் பையரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, பலமுறை ப்ரிண்ட் அடித்து அனுப்பி, எது தேர்வானதோ, அதை மொத்த ஆர்டருக்கும் அடிக்க வேண்டும்.
ஆக அந்த பனியனின் டிசைனின் முழுவிவரமும் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்க்கும், ப்ரிண்டிங் நிறுவனத்திற்கும் மட்டுமே எளிதாக விளங்கும்.

நாங்கள் எங்களின் பனியன் பிரிண்டிங் டிசைனை மாதிரிக்காக அளித்து
கலர் விவரங்களை எக்ஸ்போர்ட் நிறுவன அதிகாரபூர்வ நபரிடம் தொடர்பு
கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள். இது எல்லா ஆர்டருக்கும் பொதுவான விதியாக வலியுறுத்தி இருக்கிறோம்

ஆனால் கலர் மாற்றி அடித்து கொடுத்தார். ரூபாய் 500 இழப்பு எங்களுக்கு.
பரவாயில்லை.மீண்டும் அடிக்க வேண்டும் என்று போனில் பிரிண்டிங் முதலாளியை அழைத்து பொறுமையாக "தயவு செய்து முறையான தகவல்களை எழுத்து மூலமாக பெற்று பிரிண்ட் அடியுங்கள் இழப்பு இருவருக்கும்தானே?காலமும் உழைப்பும் வீணாகப் போகிறதே"
என்று சொன்னேன்.
அவர் சொன்ன பதில். அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்.
நீங்கள் வேறு இடத்தில் ப்ரிண்ட் அடித்துக் கொள்ளுங்கள்
.

ஆச்சரியப்பட்டேன். இவருக்கெல்லாம் எப்படி தொழில் நடக்கிறது? இதுதான் அதிர்ஷ்டம் என்பதோ?