வெகுமதி என்றால், பரிசு என்பது நாம் அனைவரும் அறிந்தே இருந்தாலும், அது பொருளாகவோ பணமாகவோதான் நிகழ்காலத்தில் உணரப்படுகிறது.
நமக்கு, பல்வேறு தொழில் சூழல், குடும்ப, சமூக சூழல் காரணங்களினால் அவ்வப்போது மனச்சோர்வு ஏற்படத்தான் செய்யும். அப்போதெல்லாம் மீண்டு வருவது எப்படி ? ஒவ்வொருவரின் மனவலியும், ஒவ்வொருவிதம். இதற்கு, வெளியிலிருந்து வரும் உணவு, இசை, பாடல், ஆட்டம், பயணம் எல்லாம் அதை குறைந்த காலத்திற்கே மறக்க வைக்கும்.
மனம், தன்னிலைக்கு ஏற்றவாறு, வெளியிலிருந்து வரும் வார்த்தைகளை, எழுத்துக்களை தன்வயமாக எப்போது உணர்கிறதோ, அப்போது உற்சாகம் கொள்ளும். வெறுமனே, தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் நம்மை மீட்டெடுக்காது.
நம்மை மீட்டு எடுத்து, உற்சாகம் ஊட்டும் வார்த்தைகள் எப்படி இருக்கும் தெரியுமா? நம் மனதுக்கு முதலில் ஆறுதல் அளிக்கும். நாம் செய்த காரியங்கள், நம் குணங்களில் உள்ள நியாயங்களை முழுமையாக ஏற்று வெளிப்படுத்தும். நாம் செல்லும் வழி, தனி வழியாக தெரிகிறதே? சரிதானா என்ற ஐயம் தோன்றும்போது, சரியான வழிதான் என்று உணர்த்தும். பின்னர் அம்மனச்சோர்வில் இருந்து மீண்டு வருவது எப்படி என்ற பாதையை காட்டும்.
அப்படியான ஒரு கவிதை பகிர்தல்.
(William Arthur Ward - The Rewarding)
இவையெல்லாம் கடினமானதுதான். ஆனாலும் இவை வாழ்வில் நமக்கு வெகுமதியை தருகின்றன. இதை அனுபவமே, உண்மையென உணர்த்தும்.
செயல் ஊக்கம் கொண்டவன், விழி மூடி சும்மாவிருக்க மாட்டான். விழிப்புணர்வு பெறுவோம். ஆற்றலை வளர்ப்போம்.
(நன்றி: விஜயா பதிப்பகத்தின் நலவாழ்வின் படிகள் நான்கு என்ற நூல். ஆசிரியர் பேரா.எம்.இராமலிங்கன் அவர்கள் நூலில் இருந்து கவிதை பகிர்வு)