"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..10

காங்னானி என்ற இடத்தை சென்று சேர்ந்தோம். இங்கு என்ன விசேசம் என்றால் வெந்நீர் ஊற்றுதான்:) எனக்கு வெந்நீர் ஊற்றை முன்னபின்னே பார்த்தது இல்லையா! அதுனால அது எப்படி இருக்கும். தேங்கியிருக்கும் குட்டைபோல் இருக்குமா? நீர் ஆதாரம் கீழே இருந்து வருமா? என்கிற யோசனை எல்லாம் மனதில் ஓடியது. பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களுடன் வெந்நீர் ஊற்றைத் தேடிக்கொண்டே ரோடில் நடந்து போனோம். எங்குமே காணவில்லை. விசாரித்ததில் பஸ் நின்ற இடத்திலேயே கடைகள் நிறைய இருந்தன. அதற்கிடையில் மேலே படியில் ஏறிப்போகச் சொன்னார்கள்.கொஞ்ச தூரம் ஏறிப்போனதும் பெரிய சிமெண்ட் தொட்டி முழுக்க நீர் நிறைந்து இருந்தது. அதில் ஆவி பறக்கும் வெந்நீர்!பார்த்தவுடன் உற்சாகம், பரவசம் எல்லாமே எங்களைப் பற்றிக்கொள்ள அணிந்திருந்த ஆடைகளை மழை வந்தால் நனையாதவாறு எதிரே இருந்த கடையின் உள்ளே வைத்துவிட்டு, காவலுக்கு ஒரு நண்பரை இருக்கச்சொல்லி விட்டு நீரில் பாய்ந்துவிட்டோம். :)


குளிர் வெளியே தசைகளை ஊடுருவி எலும்பைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்க, அந்த வெந்நீர்க் குளியல் கிடைத்தற்கரிய வரம்போல் இருந்தது. அப்போது வேறு எந்த தேவைகளோ, யோசனையோ மனதில் எழவே இல்லை.

நன்கு அனுபவித்து குளித்தேன். நீரின் உள்ளே முக்குளித்து கொண்டால் இன்னும் அபாரம். தலை, கண், காது எல்லாம் குளிர்விறுவிறுப்பு நீங்கி சூடு ஏறியது. அதிலும் அந்த சூடு உரைத்தது. ஆனால் உரைக்கவில்லை:). அந்த வெப்பம் அதிவெப்பம் என உடல் அளவில் உணரமுடிந்தாலும், உள்ளே அதன் பாதிப்பு கொஞ்சம்கூட இல்லை.உடலினுள் இயல்பான வெப்பம் என்பதையும் தோலின்மீது மட்டும் சூடு அதிகம் என தெளிவாக பிரித்து அனுபவிக்க முடிந்தது. வீட்டில் என்னதான் வெந்நீரில் குளித்தாலும் இப்படி ஒரு தொடர்ந்த கதகதப்பு கிடைக்கவே கிடைக்காது:)

நீரின் சூடு தொட்டிக்குள் இடத்துக்கு இடம் மாறுபட்டது. நான் நீர் வரும் இடத்தின் அருகிலேயே சென்று ஆற அமர குளித்தேன். நீச்சல் தெரியாதவர்களும் குளிக்கலாம், மார்பளவு நீர்தான் இருந்தது. சோப்பு போடாமல் குளிக்க வேண்டும். சற்று தள்ளி அதே நீர் வெளியே வருமாறு சிறிய பைப் வைத்திருக்கிறார்கள். அதில் உடைகளை அலசிக்கொள்ளலாம். தேவையானால் சோப்பும் போடுக்கொள்ளலாம்.

தொட்டியின் வலதுபுற மூலையில் மலையின் சுமார் 100 அடி உயரத்திலிருந்து வெந்நீர் கீ்ழ்நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது.

படத்தில் சற்று அடர்த்தியாக புகைபோல் தெரியுமிடமே ம்லைமீதிருந்து வெந்நீர் வெளியாகும் இடம்.


ஓடி வந்த நீரின் 3 இன்ச் பைப்பில் வருவதுபோல் பாய்ந்து விழுந்து கொண்டிருந்தது. அந்த நீரின் வெப்பநிலை கொதிநிலைக்கு சற்றே குறைவாக இருந்தது. அந்த குளிரிலும் கூட நீரில் கை வைக்கவே முடியவில்லை. அந்த நீர் தெறித்தால் சூடு தாங்காது என நீர் வந்து தொட்டியில் விழும் இடத்தில் துணியைப் போட்டு விட்டிருந்தால் அருகே சென்று குளிக்க முடிந்தது. இந்த நீரின் வெப்பநிலை மிக அதிகம். பின்னர் கேதார்நாத்ல் இது போல் வெந்நீர் ஊற்று இருந்தாலும் இதில் மூன்றில் ஒரு பாகம்தான் அதனுடைய வெப்பம் இருந்தது.

வீடியோ

கங்கோத்ரி பாதையில்,  காங்னானி அவசியம் பார்த்தே தீர வேண்டிய இடம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை:) புத்துணர்ச்சியோடு குளித்துவிட்டு வெளியே வந்தோம். வெளியே வர மனமில்லை என்பதே உண்மை:)

15 நிமிடம் குளித்துவிட்டு மேலேறினேன். அடுத்தவர்கள் குளிக்கவேண்டும். காத்திருக்கின்ற நண்பர்களும் குளிக்கவேண்டும். குறிப்பாக என்னால் ஏதும்
காலதாமதம் ஆகக்கூடாது என்கிற உணர்வுடன் மேலே ஏறிவந்து கேமராவை எடுத்து படம் பிடிக்கத் துவங்கினேன்.

காங்னானி வரும் வழியில் எடுத்த புகைப்படங்கள்....


பயணம் தொடரும்..
நிகழ்காலத்தில் சிவா

11 comments:

 1. அங்கிட்டு ஜட்டிப் போட்டு குளிக்க அனுமதி உண்டா ? :)

  ReplyDelete
 2. ஆஹா..............

  பெண்களுக்குத் தனித்தொட்டி உண்டா?

  ReplyDelete
 3. தல அடுத்த வண்டிய புடுச்சு கிளம்புனும் போலிருக்கே.

  அப்புறம் கண்ணன் சொன்னது உண்மையா?

  ReplyDelete
 4. நிஜம் நிகழ்ச்சியில் பார்த்த ஞாபகம்..பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. //கோவி.கண்ணன் said...

  அங்கிட்டு ஜட்டிப் போட்டு குளிக்க அனுமதி உண்டா ? :)//

  அனுமதி உண்டு:))

  ஆண்கள் மட்டுமே குளித்தோம். எதிரே நடைபாதைதான். அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்:))

  ReplyDelete
 6. //தல அடுத்த வண்டிய புடுச்சு கிளம்புனும் போலிருக்கே.//

  போய்ப்பார்த்தாத்தான் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட விசயங்கள் இருப்பது தெரியவருகிறது ஜோதிஜி..

  சும்மா பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டே நாம் இதையெல்லாம் இழந்துவிட்டோம்.

  //அப்புறம் கண்ணன் சொன்னது உண்மையா?//

  சாமி, அது இல்லாமல் வெறும் துண்டோட நிறைய பேர் குளிக்கிறாங்க, உள்ளாடைய நனைச்சிட்டா காய வைக்க வழிஎன்ன?? ஹிஹிஹி...

  ReplyDelete
 7. //ஹரிஸ் said...

  நிஜம் நிகழ்ச்சியில் பார்த்த ஞாபகம்..பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்..//

  நன்றி ஹரிஸ் பயணம் நல்லபடியாக திரும்பிவிட்டேன். இடுகை போட காலதாமதம் ஆகிவிட்டது..

  ReplyDelete
 8. \\துளசி கோபால் said...
  ஆஹா..............

  பெண்களுக்குத் தனித்தொட்டி உண்டா
  \\

  ஆமாங்க..தனி இடத்தில் மறைவாகவே இருக்குதுங்க...

  ReplyDelete
 9. மிக அழகாக நாங்களே நேரடியாகக் கண்டதுபோல் எழுத்திலும்,
  சலனப்படத்திலும் அருமையாக பதிவிட்டுள்ளீர்கள்.

  நெஞ்சில் நீங்காமல் பதிந்திருக்கும் எந்நாளும்...

  வாழ்த்துக்கள் நண்பர் சிவா..அவர்களே.

  ReplyDelete
 10. நல்லா எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. அன்பு நண்பரே வணக்கம் ப்லக்கேர் பற்றி எனக்கு சொல்லி தரவும்

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)