ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் வீட்டுவாசலில்......
சின்னவள்:ஏய்., பருப்பாம் பருப்பாம் விளையாடலாம் வாடி..
பெரியவள்: சரி வா விளையாடலாம்..
சின்னவள்: ம்ம்.........கொழுத்தபன்னி
பெரியவள்: ஏய் அப்படி இல்லைடி ’முருங்கப்பூ’ அப்படின்னு சொல்லனும்
சின்னவள்: சொல்லமுடியாது. நீ ஏண்டி எங்கப்பாவை ’உங்கொப்பன்’னு சொன்ன.... போடி நா வரல விளையாட்டுக்கு....
சின்னவள்:ஏய்., பருப்பாம் பருப்பாம் விளையாடலாம் வாடி..
பெரியவள்: சரி வா விளையாடலாம்..
பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்
சுக்கத்தட்டி சோத்துல போட்டு
குள்ளீம்மா குழலூத
ராக்காத்தா வெளக்கெடுக்கங்
கொப்பம் பேரென்ன?
சின்னவள்: ம்ம்.........கொழுத்தபன்னி
பெரியவள்: ஏய் அப்படி இல்லைடி ’முருங்கப்பூ’ அப்படின்னு சொல்லனும்
சின்னவள்: சொல்லமுடியாது. நீ ஏண்டி எங்கப்பாவை ’உங்கொப்பன்’னு சொன்ன.... போடி நா வரல விளையாட்டுக்கு....