"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்...

பழைய கவலைகளைத் திரும்பவும் நினைவுபடுத்தி அசைபோடுவதும் ’செப்டிக் டேங்க்’ வரை போய் மக்கிப்போன மலத்தைத் திரும்பவும் மலக்குடல் வழியே இழுத்து வந்து வாயில் வைத்து அசைபோடுவதும் ஒன்றுதான்.


நம்மில் பெரும்பாலானோர் பழைய நினைவுகளைத் திரும்பவும் மனதில் கொண்டு வந்து அசைபோட்டு துன்பச்சுகம் காண்பவர்கள் மீதியிருப்போர் எதிர்காலத்தில் பிரமாதமான வாழ்வு வரப்போவதாக கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்போர் இரண்டுமே அறியாமைதான்..

கடந்த காலத்தில் அனுபவித்த இன்ப உணர்வுகளை, துன்ப உணர்வுகளை மறந்துவிடுங்கள். அந்த அனுபவங்கள் தந்த பாடத்தை, அறிவை மாத்திரம் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும் கைவிளக்காக ஏந்திக்கொள்ளுங்கள்.

எதிர்காலம் குறித்தத் தெளிவான திட்டங்களையும் இலட்சியங்களையும் வகுத்துக் கொள்ளுலாம். ஆனால் வாழ்வது நிகழ்கால விழிப்புணர்வுடன் கூடிய வாழ்வாக உங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

கனவின் வழியே வாழ்வது.. கற்பனைகளின் வழியே வாழ்வது..வாழ்க்கையல்ல !

கண்முன்னே கணந்தோறும் காத்திருந்த அனுபவங்களைச் சூடாக அனுபவிப்பதுதான் உண்மையான வாழ்க்கை. ஞானவாழ்க்கை

கடந்தகாலச் சோகமூட்டைகளை உடனடியாக இறக்கி வையுங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள்!

>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
--தலைமறைவானந்தா

****************************************

கவுண்டமணி பாணியில் சொன்னால் கோழி குருடா இருந்தா என்ன ! கொழம்பு ருசியா இருந்தாச் செரி :))

நமக்கு எல்லாம் தத்துவங்களை வாரி வழங்கியவர்,   தான் கடைப்பிடிக்காததால் வந்ததே  இந்த தலைமறைவு நிலை...

போதனை பிறர்க்கே, தனக்கல்ல என்ற போலித்தனம் வெளிப்பட்டதே, அவரை அனைவரும் கும்ம்ம்மமம.. காரணம்..

அல்லதை விடுத்து நல்லதை எடுத்துக்கொள்வோம்.

6 comments:

  1. நான் அவரோட எழுத்தை படிச்சதில்லீங்க.


    நம்ம மாப்பு என்னடா இம்புட்டுத் தத்துவமா எழுதறாருன்னு வந்து பார்த்தா..

    ஷேம்... ஷேம் பப்பி ஷேம்

    ReplyDelete
  2. கடந்தகாலச் சோகமூட்டைகளை உடனடியாக இறக்கி வையுங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள்! // சரியா சொன்னீங்க இனியாவதும் செய்றாங்களா பாப்போம்....

    ReplyDelete
  3. கண்முன்னே கணந்தோறும் காத்திருந்த அனுபவங்களைச் சூடாக அனுபவிப்பதுதான் உண்மையான வாழ்க்கை. ஞானவாழ்க்கை


    .........இப்போ புரியுதுங்க. ha,ha,ha,ha...

    ReplyDelete
  4. எனக்கு மட்டும் சொன்ன மாதிரி இருக்கு சிவாண்ணே...

    ReplyDelete
  5. எதிர்காலம் குறித்தத் தெளிவான திட்டங்களையும் இலட்சியங்களையும் வகுத்துக் கொள்ளுலாம். ஆனால் வாழ்வது நிகழ்கால விழிப்புணர்வுடன் கூடிய வாழ்வாக உங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளுங்கள்//

    True

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)