"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 2, 2010

கல்கி ஆசிரமமும் நித்தியானந்தரும்

இன்று விசேசமான நாள் போலிருக்கிறது..

சென்னை கல்கிபகவான் ஆசிரமம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது..காரணம் பண மோசடி, உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து அதில் பித்தலாட்டம்


இரண்டாவது நித்தியானந்தாவின் சொல்லொன்று செயலொன்றாக இருக்கும் வீடியோ சன் டிவீ உபயத்தில் பார்க்க முடிந்தது/...

கூட இருந்த நடிகை இவ்விசயத்தில் படமெடுக்க மிகவும் உதவி இருப்பார் போல..:)))

அவரது முகம் மறைக்கப்பட்டது ஏனோ??  எப்படி இருப்பினும் அவரது உதவியால் நித்தியானந்தரின் முழுபிம்பம் வெளியானது மிகவும் நன்மைக்கே..

பொதிகை டிவியில் வாரம் மூன்றுநாள் அவரது உரை கால்மணிநேரம் இருக்கும். அதற்கு முன் அலுவலகம் கிளம்பி விடுவதால் நான் கேட்கவில்லையே என சற்றே வருத்தப்படுவேன். என் வருத்தத்தை துடைத்துவிட்டார்.

ம்ம் பாவம் பொதிகை டிவி

ஆன்மீகம் என்பதை இன்னும் பல சாமியார்களே உணரவில்லை என்பதை இந்நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

வேதாத்திரி மகான் பிரம்மச்சாரியத்தை ஒதுக்கி குடும்பவாழ்வில் ஈடுபடச் சொல்வதன் மகிமை இதுதான் :))

எதை இழந்தேனும், அது ஆன்மீகமானலும் சரி குடும்பத்தில் அமைதி வரவேண்டும். அதுக்கு அடிப்படை இயற்கை அளித்த இனப்பெருக்க உபாயமான சிற்றின்பமான காமம்தான்.

சற்று விவகாரமாக இருந்தாலும் இதுவே உண்மை
இது இன்னொரு தகவல் போனசாக..

லேட்டஸ்ட் தினகரன் செய்தி

இதோ வீடியோ--செந்தழல்ரவியிடமிருந்து..

12 comments:

 1. //எதை இழந்தேனும், அது ஆன்மீகமானலும் சரி குடும்பத்தில் அமைதி வரவேண்டும். அதுக்கு அடிப்படை இயற்கை அளித்த இனப்பெருக்க உபாயமான சிற்றின்பமான காமம்தான்.//

  பங்காளி, ஒரு ஆய்வு நடத்தினீங்களே? அது முடிவுக்கு வந்துச்சுங்களா, இல்ல கும்மியடிக்கிறதுலயே போய்டுச்சா??

  ReplyDelete
 2. எவ்வளவு ஆசாமிங்க இருந்தாலும், அவனுங்க குட்டு உடைஞ்சாலும் மக்கல் இனும் அவனுங்கள நம்புது...கொடுமைங்க..

  ReplyDelete
 3. பழமைபேசி
  \\பங்காளி, ஒரு ஆய்வு நடத்தினீங்களே? அது முடிவுக்கு வந்துச்சுங்களா, இல்ல கும்மியடிக்கிறதுலயே போய்டுச்சா??\\

  :)) கலாச்சார காவலர்களுக்கு பயந்து அதோடு நிறுத்திவிட்டேன் பங்காளி:)))

  கடவுளைப்பற்றி பேசலாம், சாதியைப்பற்றி பேசலாம், ஆனால் காமம் குறித்து பேசுவது அபச்சாரம் என தெரிந்து கொண்டேன். கலந்துரையாடலுக்கு என யாருமே வரவில்லை :)))

  கும்மியோடு போய்விட்டது அந்த ஆய்வு

  காம உணர்வுகள் குறித்த விழிப்புணர்வு
  முழுமையாக மக்களிடையே வராதவரை குடும்ப,சமுதாயத்தில் நிரந்தரமாக அமைதி வராது

  இதற்குதான் பங்காளி வேண்டும் என்பது :))

  வாழ்த்துகள்

  ReplyDelete
 4. \\புலவன் புலிகேசி said...

  எவ்வளவு ஆசாமிங்க இருந்தாலும், அவனுங்க குட்டு உடைஞ்சாலும் மக்கல் இனும் அவனுங்கள நம்புது...கொடுமைங்க..\\

  குட்டு என்பதைவிட மாயை என்பதில் பொருளாதார வாழ்வில் உள்ள நாமும் சிக்குகிறோம்,

  முழுக்க ஆன்மீக வாழ்விற்கு வாய்ப்பிருந்தும் இவர்களும் மாயையில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதால் ஆன்மீகத்தில் இன்னும் தெளிவும், உறுதியும் நமக்கு தேவை என்பது புரிகிறது..

  ReplyDelete
 5. பதிவொலக அண்ணமார்களுக்கு மசக்கவுண்டன் வண்க்கமுங்க.
  ஏனுங்க சாமியாருங்கதான் விடியவிடிய தூங்காம சாமி கும்படறாங்கன்னா நீங்கல்லாம் எதுக்குங்க ராப்பூராவும் முளிச்சுகிட்டு பதிவு, வெனை, பின்வெனை,எதிர்வெனைன்னு கஷ்டப்படறீங்க? கஷ்டப்பட்டாலும் ஏதாச்சும் பிரயோசனம் இருக்கணுமுங்கோ? ஏனுங்க நாஞ்சொல்ரது கரீட்தானுங்க?

  ReplyDelete
 6. காஞ்சி சுப்புணி போலக் கொலை செஞ்சாரா, தேவநாதன் போல சாமி சாட்சியா செஞ்சாரா,
  சினிமா நடிகையோடக் கொஞ்சம் பிரைவேட் சூட்டிங்,அதுவும் இருட்டிலே.....இதப் போயி
  கலாநிதி வியாபாரம் செய்யலாமா?

  ReplyDelete
 7. எதை வைத்துக் காசு பார்க்க முடியுமோ, அதை வைத்து வியாபாரிகள் வருவதிலும், போட்டி வியாபாரிகள் அதை அம்பலப் படுத்துவதும் புதியதல்லவே சிவா!

  பரபரப்பான, இயந்திரத் தனமான வாழ்க்கைக்குள் சிக்கிக் கொண்டு மனிதன் எதையோ எப்போதும் தேடிக் கொண்டிருக்கிறான். அந்தத் தேடல், ஆன்மீக உரையாக, இந்த மாதிரி ஆசாமிகளுக்கு வியாபாரமாகி விடுகிறது.

  பகுத்தறிவு பேசி இருப்பதையும் மழுங்கடித்துப் பிழைப்பு நடத்துவதற்கும் ஒரு கூட்டம் எப்போதுமே எதிரணியில் இருக்கத் தான் செய்கிறது.

  ஆக இப்போது அம்பலமாகி இருப்பது வியாபாரிகளுக்கிடையில் நடக்கும் போட்டாபோட்டியில் யாரோ ஒரு எதிர் பார்டி, ஒரு பட்டாசைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்! அவ்வளவு தான்!

  கொஞ்ச நாள் இதை மெல்லுவார்கள், அப்புறம் மறந்துபோய் விடுவார்கள்!

  ஐயோ அம்மா கொல்றான்களே வசனம் டப்பிங் கொடுக்கப் பட்டது, தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொலை செய்யப் பட்டபோது கலாநிதி மாறன் அளித்த ஆவேசப் பெட்டி இதையெல்லாம் எத்தனை நாளைக்கு நினைவு வைத்துக் கொள்வீர்கள், அல்லது அதையே பேசிக் கொண்டிருப்பீர்கள்?

  அப்புறம், காமம் குறித்த உங்களுடைய விவாதம்.....இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது!

  காமத்தைப் பற்றி பேச, புரிந்து கொள்ளும் விதத்தில் அந்தப் பதிவு ஆரம்பிக்கவில்லையே!

  அடுத்தவர் தங்களுடைய அந்தரங்கங்களைத் தெருவில், இப்போது நித்தியானந்தர் வீடியோ மாதிரி அலச வேண்டுமென்கிற தொனியில் அல்லவா ஆரம்பித்து, அந்தரத்தில் நின்றது?

  ReplyDelete
 8. \\மசக்கவுண்டன் said...

  பதிவொலக அண்ணமார்களுக்கு மசக்கவுண்டன் வண்க்கமுங்க.
  ஏனுங்க சாமியாருங்கதான் விடியவிடிய தூங்காம சாமி கும்படறாங்கன்னா நீங்கல்லாம் எதுக்குங்க ராப்பூராவும் முளிச்சுகிட்டு பதிவு, வெனை, பின்வெனை,எதிர்வெனைன்னு கஷ்டப்படறீங்க? கஷ்டப்பட்டாலும் ஏதாச்சும் பிரயோசனம் இருக்கணுமுங்கோ? ஏனுங்க நாஞ்சொல்ரது கரீட்தானுங்க?\\

  தோட்டங்காடு எதுவுமில்லின்னு, பதிவு ஒன்ன வெச்சுக்கிட்டு வேற என்ன பன்னறதுங்க :))

  முதல் வருகைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 9. \\Thamizhan said...

  காஞ்சி சுப்புணி போலக் கொலை செஞ்சாரா, தேவநாதன் போல சாமி சாட்சியா செஞ்சாரா,
  சினிமா நடிகையோடக் கொஞ்சம் பிரைவேட் சூட்டிங்,அதுவும் இருட்டிலே.....இதப் போயி
  கலாநிதி வியாபாரம் செய்யலாமா?\\

  சூட்டிங்னாலே வியாபாரம்தானுங்களே..

  வாழ்த்துகள் தமிழ்

  ReplyDelete
 10. \\காமம் குறித்த உங்களுடைய விவாதம்.....இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது!\\

  அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எனக்கு சொல்லத்தெரியவில்லை எனச் சொல்லலாம் நண்பரே :))

  \\காமத்தைப் பற்றி பேச, புரிந்து கொள்ளும் விதத்தில் அந்தப் பதிவு ஆரம்பிக்கவில்லையே!\\

  அது சற்று அதிரடியான ஆரம்பம்தான் :))

  ||அடுத்தவர் தங்களுடைய அந்தரங்கங்களைத் தெருவில், இப்போது நித்தியானந்தர் வீடியோ மாதிரி அலச வேண்டுமென்கிற தொனியில் அல்லவா ஆரம்பித்து, அந்தரத்தில் நின்றது?\\

  பாலியல் செயல்பாடுகள் அந்தரங்கமானவைதான், ஆனால் அது குறித்து பேசுவது என்னைப்பொறுத்தவரை பசி,தாகம்,போல இயல்பானதுதாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.

  ஆனால் அனைவருமே அதுகுறித்து அனானியாக முகமூடி இட்டு பேசுவதும்கூட தவறு என ஒதுங்கியதால் என்னளவில் என் சிந்தனையை அணை போட்டுவிட்டேன்.

  இது மற்றவர்களுக்கு ஆபாசமாக தெரியலாம். எனக்கு அப்படி தெரியவில்லை:))

  நன்றி நண்பரே., அக்கறையுடன் தங்களின் கருத்தைப் பகிர்ந்தமைக்கு

  ReplyDelete
 11. //எதை இழந்தேனும், அது ஆன்மீகமானலும் சரி குடும்பத்தில் அமைதி வரவேண்டும். அதுக்கு அடிப்படை இயற்கை அளித்த இனப்பெருக்க உபாயமான சிற்றின்பமான காமம்தான்.

  சற்று விவகாரமாக இருந்தாலும் இதுவே உண்மை//

  உண்மை....

  ReplyDelete
 12. காமம் என்ற விசயத்தில் ரிஷிகளுக்கும் 'ரகசியம்' உண்டு என்பதை ஒரு பின்னூட்டத்தில் கூறியிருந்தேன்.
  இவன் ரிஷி இல்லை என்பது முகத்தை பார்த்தாலே தெரியும். இந்தியாவில் இவன் போன்ற Billionare சாமியார்கள் அதிகம், அவர்கள் என்னைக்கு மாட்டப்போகிறார்களோ. இவன் போன்ற புறம்போக்குகள் இன்னும் பலபேர் அனைத்து மதத்திலும் உள்ளனர். இந்து மதத்தில் அதிகம். பாவம் இந்துக்கள். நானும் ஒரு இந்துதான். என் சாதி சான்றில் அவ்வாறு தான் உள்ளது.

  என்னை பொறுத்தவரை காமம் ஒரு மனிதனின் மூச்சு உள்ளவரை மனதில் இருக்கும். அந்த மனதை பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். செயல் பட்டால் அவனுக்கும், மற்றவர்களுக்கும் அழிவுதான்.
  காமம் = உடலில் சுரக்கும் வேதிபொருளால் மனதை மயக்கும் DRUG.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)