"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, November 26, 2009

அறிவும் உணர்ச்சியும் தொழில்நுட்பக் கோளாறும்

நண்பர்களே


நம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது, சிக்கல் வருகிறது என்றால் அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.


”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.


”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!” என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத் தெரியும்.


மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனதிற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்...துரதிர்ஷ்டம் என்று பல பெயர்கள் வைத்துள்ளோம்.


சமையலில் சிறிது உப்பு அதிகம் என்றால் சற்று தண்ணீர் சேர்த்து சரி செய்யலாம். அதே போல் தண்ணீர் அதிகமாகிவிட்டால் சற்று தண்ணீர் அதிகமாக்கி சரி செய்யலாம்.


அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)


அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)


முயற்சித்துப் பாருங்களேன்

வாழ்த்துகள்

13 comments:

 1. உண்மை உண்மை அன்பின் சிவசு

  அறிவும் உணர்வும் சேர்ந்தே இருந்தால் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வெற்றி பெறும்.

  ஆனால் நாமோ உணர்ச்சி பூர்வமான முடிவுகளையோ அல்லது அறிவு பூர்வமான முடிவுகளையோ தான் எடுக்கிறோம்.

  நல்வாழ்த்துகள் சிவசு

  ReplyDelete
 2. //”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.//

  அற்புதமான வார்த்தைகள் ஐயா.நல்ல பதிவு.வாழ்க வளமுடன்

  ReplyDelete
 3. ”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!

  "உணர்ந்து" கொள்ளக்கூடியது,

  ReplyDelete
 4. //அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)//

  காக்டெய்ல் தான் கிக்குன்னு இருக்குமா ?

  ReplyDelete
 5. //அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)
  //
  அடங்கிப்போ - ன்னு சொல்றிங்க

  //அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)//

  அடக்கிப்பார் - ன்னு சொல்றிங்க

  ReplyDelete
 6. சிவா!
  இதை விட எளிமையான வழி ஒன்று இருக்கிறது. எதையும் எதனுடன் கலக்காமல், குழப்பிக் கொள்ளாமல் கொஞ்சம் அமைதியாக இருப்பது!
  உணர்ச்சி, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அத்தோடு இத்தைக் கலப்பது, இத்தோடு அத்தைக் கலப்பது என்ற சோதனை முயற்சிகள் பிரச்சினையை இன்னமும் பெரிதாக்கி விடக் கூடிய அபாயம் இருக்கிறது.

  தவிர, அறிவு என்பது கற்றுக் கொள்வதில் இருந்து, அதன் படிப்பினைகளை அனுபவத்தில் இருந்து புரிந்து கொள்வதில் இருந்து, ஏற்கெனெவே அநிபவப்பட்டவர்களை, அவர்கள் அனுபவங்களில் சொல்லியிருப்பதை நம்புவதில் இருந்து தொடங்குகிறது.

  ReplyDelete
 7. அன்பின் சீனா, manogkaran krishnan,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..

  ReplyDelete
 8. \\”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!

  "உணர்ந்து" கொள்ளக்கூடியது,\\

  ஆம், உணர்ந்து கொண்டால் கொண்டாட்டம்,
  உணராவிட்டால் திண்டாட்டம்..

  ReplyDelete
 9. //அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)
  //
  அடங்கிப்போ - ன்னு சொல்றிங்க  //அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)//

  அடக்கிப்பார் - ன்னு சொல்றிங்க

  முடிவெடுக்கும் சமயத்தில் எதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது எனப் பாருங்கள். சரியான விகிதத்தில் ’கலந்தால்’ மட்டுமே பிரயோசனம். :))

  ReplyDelete
 10. கிருஷ்ணமூர்த்தி
  \\சோதனை முயற்சிகள்\\

  சாதனை முயற்சிதான், சாதரண முயற்சிதான்.

  இதோ கோவியாருக்கும் சேர்த்து...

  பொருளீட்டும் முயற்சி, குடும்பத்தில் ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டும்.
  பிரிவு வலியானதுதான். அங்கே கொஞ்சம் அறிவைக் கலந்தால் போதும், சரி மூன்று வருடம் போதுமான பொருள் சம்பாதித்த உடன் திரும்ப வந்து விடலாம்.

  தொழிலாளர் பிரச்சினை, நம் அறிவார்ந்த முடிவு சற்று தொழிலாளர்க்கு எதிராகவும், உற்பத்திக்கு ஆதரவாகவும் இருக்கிறது.

  இதோடு சற்று உணர்வைக் கலந்து தொழிலாளர்களுடன் உணர்வுபூர்வமாக உரையாடல் செய்தால், அவர்கள் சம்மதத்துடன் முக்கால்வாசியாவது அதை சரி செய்யலாம்.

  இவ்வளவுதான். எளிமையானதுதான்

  வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 11. //முயற்சித்துப் பாருங்களேன்//

  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 12. உண்மை, நல்ல கருத்துள்ள பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 13. @ ஆ.ஞானசேகரன்

  @ சிங்கக்குட்டி

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

  வாழ்த்துகள்

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)