"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, July 20, 2009

இரு இறக்கைகள்

இரு சகோதரர்கள் இணைந்து நடத்தும் நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய நகைக்கான பில்லைப் பார்த்து அதிர்ந்து போனார்.

கூட்டலில் தவறு. மொத்தத் தொகை ரூ.10,000/= அதிகமாகக் குறிக்கப்பட்டிருந்தது. நகை வாங்கியவர் மிகுந்த கோபத்தோடு மூத்த சகோதரரிடம் அந்தச் சீட்டை நீட்டினார்.

சீட்டைப் பார்த்தவுடன் நிலைமையை புரிந்து கொண்ட மூத்தவர், தன் தம்பியை விட்டுக் கொடுக்காமல் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த விரும்பினார்.

”அது ஒண்ணுமில்ல சார், தம்பி அப்பாகிட்ட தங்கம்,வெள்ளி பற்றி கத்துகிட்டான், கணக்கு மட்டும் நாந்தான் சொல்லிக் கொடுத்தேன்”என்றார்.

நல்ல வாடிக்கையாளர், தன் சகோதரர் இருவருமே காயம்படாமல் அந்த இடத்தின் இறுக்கம் அகன்றது.

குறிக்கோளை அடைய….

நகைச்சுவை உணர்வும், நட்பைக் காப்பாற்றும் குணமும் கூடுதல் இறக்கைகள் ஆகும்.

நன்றி:
அடுத்த ஆயிரம் நாட்கள்’ நூலில் இருந்து

25 comments:

 1. நல்லா இருக்கு, அடுத்த ஆயிரம் நாட்களில் அடுத்த நாளை போடுங்க.

  ReplyDelete
 2. கருத்துக்கும் வருகைக்கும் நன்றியும்,வாழ்த்துக்களும்

  ஒரு சில பக்கங்கள் உள்ள சிறிய நூல்தான்
  இருப்பினும், தொடர்வோம்

  ReplyDelete
 3. //குறிக்கோளை அடைய….

  நகைச்சுவை உணர்வும், நட்பைக் காப்பாற்றும் குணமும் கூடுதல் இறக்கைகள் ஆகும்.//

  நல்ல செய்தி,நன்றி. வாழ்த்துகள் நிகழ்காலத்தில்

  ReplyDelete
 4. அண்ணே! வணக்கம்ணே!

  ReplyDelete
 5. //நகைச்சுவை உணர்வும், நட்பைக் காப்பாற்றும் குணமும் கூடுதல் இறக்கைகள் ஆகும்.
  //

  கண்டிப்பா! 100% உண்மை!

  ReplyDelete
 6. வாங்க முரளி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  தங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete
 7. \\☼ வெயிலான் said...

  அண்ணே! வணக்கம்ணே!\\

  சொல்லுங்க தல

  வணக்கம் போடறத பார்த்தா...:))))!!!

  ReplyDelete
 8. \\பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

  //நகைச்சுவை உணர்வும், நட்பைக் காப்பாற்றும் குணமும் கூடுதல் இறக்கைகள் ஆகும்.
  //

  கண்டிப்பா! 100% உண்மை!\\

  நான் படிக்கும் எல்லா பதிவுகளிலுமே உங்களின் பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அந்த வகையில் பிரபல பதிவராக இருந்தாலும் இந்த அளவுக்கு அனைவருக்கும் ஊக்கம் தருவதற்கு நன்றிகள் பல.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. //நான் படிக்கும் எல்லா பதிவுகளிலுமே உங்களின் பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அந்த வகையில் பிரபல பதிவராக இருந்தாலும் இந்த அளவுக்கு அனைவருக்கும் ஊக்கம் தருவதற்கு நன்றிகள் பல.//


  ஹெஹெ!

  பிரபலப் பதிவர்னு நானே போட்டுகிட்டேன்!

  ReplyDelete
 10. பிரபல பதிவர் என்பது தற்போதுதானே!!

  நாமக்கல் சிபி ..


  எல்லா இடுகைகளிலும் உங்கள் பெயர் வந்து விட்டாலே ‘பிரபலம்’தானே:))

  ReplyDelete
 11. முனைவர்.இரா.குணசீலன் said...

  ம் நன்றாகவுள்ளது..........

  ’ம்’ வந்து விட்டதால் இதை ஓரளவிற்கு நன்றாகவுள்ளது என எடுத்துக் கொள்கிறேன்.

  கருத்துக்கு மகிழ்ச்சியும், நன்றியும்

  ReplyDelete
 12. //
  எல்லா இடுகைகளிலும் உங்கள் பெயர் வந்து விட்டாலே ‘பிரபலம்’தானே:))//

  நான் எழுதுற எல்லா இடுகையிலும் என் பேர் வருமே!

  Posted By : பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி ன்னு!

  ReplyDelete
 13. //நான் படிக்கும் எல்லா பதிவுகளிலுமே உங்களின் பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன்.//

  உதாரணத்திற்கு
  v
  v
  v
  v  http://sinekithan.blogspot.com/2009/07/blog-post_20.html
  பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

  வாழ்த்துக்கள்!

  உங்களால் கௌரவிக்கப்பட்ட அறுவருக்கும் வாழ்ட்துக்கள்!
  July 20, 2009 12:02 PM
  ************

  http://podian.blogspot.com/2009/07/blog-post_20.html

  ReplyDelete
 14. சிபி

  இன்னொன்று

  http://kurunjeythi.blogspot.com/2009/07/blog-post.html
  பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...

  நல்லாத்தான்யா யோசிக்கிறீங்க!
  12:16 PM, July 20, 2009

  இன்னும் வரும்

  ReplyDelete
 15. இனிய சிநேககிதமே...

  என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

  http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

  ஏற்றுக்கொள் தோழமையே...

  நன்றிகளுடன்
  கதிர்

  ReplyDelete
 16. நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்...

  ReplyDelete
 17. \\கதிர் said...

  இனிய சிநேககிதமே...

  என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

  http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

  ஏற்றுக்கொள் தோழமையே...

  நன்றிகளுடன்
  கதிர்\\


  தங்களின் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனினும் வெளிப்பாடாக ‘சுவாரசிய வலைப்பதிவு விருது’ வழங்கியதை அதே அன்போடு ஏற்றுக் கொள்கிறேன்.

  நன்றிகள், வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. \\சந்ரு said...

  நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள்...
  July 21, 2009 3:45 AM \\

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 19. //நகைச்சுவை உணர்வும், நட்பைக் காப்பாற்றும் குணமும் கூடுதல் இறக்கைகள் ஆகும்.//

  உண்மைதான், நகையும் சுவையும் சேர்ந்தாலே சுகம்தானே. நன்றி உங்களின் பகிர்தலுக்கு.

  ReplyDelete
 20. பாலாஜி தங்களின் கருத்துக்கும் , வருகைக்கும் நன்றி

  ‘நகையும் சுவையும் சேர்ந்தாலே சுகம்தானே’:)))

  ReplyDelete
 21. அண்ணன் ஒரு கோவில் அல்லவா!

  ReplyDelete
 22. நல்ல இருக்கு. இன்னும் எழுதுங்க.

  ReplyDelete
 23. \\SUREஷ் (பழனியிலிருந்து) said...

  அண்ணன் ஒரு கோவில் அல்லவா!
  July 21, 2009 10:53 PM \\
  \\அக்பர் said...

  நல்ல இருக்கு. இன்னும் எழுதுங்க.
  July 22, 2009 12:27 PM \\

  இருவரின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 24. அன்பின் சிவா

  நல்ல கருத்துகள் - உண்மை - நட்பும் நகைச்சுவை உணர்வும் இருந்தால் - கூடுதல் இறக்கைகள் கிடைத்த மகிழ்ழ்ச்சி தான்

  நல்வாழ்த்துகள் சிவா

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)