"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 26, 2013

மோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்?.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதில் இணையம் ரொம்பவுமே சூடாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தவரை முஸ்லீம் அன்பர்கள் அதிகம் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருந்தனர். அது அவர்கள் உரிமை. அதைத் தடை செய்ய இயலாது...ஆனால் அதில் அவர்கள் காட்டும் தீவீரம், மோடியை ஆதரிக்கும் இந்துமதம் சார்ந்த நண்பர்களின் கருத்துகளில் இருப்பதாகத் தெரிவதில்லை :)தீவிரம் காட்டத்தான் வேண்டும். அப்படியானால் அது மத மோதலுக்கு வழிவகுக்காதா? மதத்தீவிரவாதத்தை தூண்டுவது ஆகாதா ? அதையும் நிகழ்காலத்தில் வலைதளம் பரிந்துரைக்கிறதா? என்ற ஆச்சரியமும் வரும்.

மதம் சார்ந்து மனிதன் இயங்கக்கூடாது என்பது என் விருப்பம். ஆனால் எதிரே இருப்பவன் மதம் சார்ந்து இயங்கும்போது அதனால் எனக்கு துன்பம் எனில் நானும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை:(. இது இரு மதத்தினருக்கும் பொதுவானதுதான்.

ஜீலையில் இறுதிவாக்கில் நாங்கள் அமர்நாத் யாத்திரையில் இருந்தோம். முந்தய நாள் இரவு தங்க, ஸ்ரீநகரில் இருந்து சுமார் 30 கிமீ உள்ள சிஆர்பிஎப் போலீஸ் முகாமுக்குச் செல்ல வேண்டும். அங்கேயே இலவச உணவு கட்டணத் தங்குமிடம் எல்லாம் உண்டு. அங்கு செல்ல ஒரே பாதைதான். ரம்ஜான் மாதம் எல்லோரும் தொழுகைக்குச் சென்றிருப்பார்கள். ரம்ஜான் மாதத்தில் வன்முறைக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை.. இருப்பினும் இரவு செல்வோம் என்று பஸ்ஸில் பயணித்தோம்.

கந்தர்வால் என்ற பகுதியைத் தாண்டும் போது தொடர்ச்சியாக குட்டி குட்டி ஊர்கள். மதராசாக்கள், சுமார் இரண்டு அல்லது மூன்று கீமி அந்த இடத்தை கடந்தாக வேண்டும். சட்டென பஸ்ஸின் சைடில் உள்ள கண்ணாடி நொறுங்கியது.. சரி ஏதேனும் மரக்கிளை பட்டிருக்கும் என நினைத்தேன்.. அடுத்த சில நொடிகளுக்குள் பொட் என்ற சப்தத்துடன் இன்னொரு கண்ணாடி ..பஸ்ஸுக்குள் வந்து விழுந்தது ஒரு கல்.. கைடு அனைவரையும் சீட்டில் முடிந்தவரை கீழே படுத்துக்கொள்ளுங்கள்.. என்று சொல்ல அனைவரும் முடிந்தவரை பஸ்ஸின் நடுவில் உள்ள நடைமேடையிலும், சீட்டுக்கடியிலும் தலையை நுழைத்துக்கொண்டோம். கிட்டத்தட்ட இரண்டு கிலோ எடையிள்ள பெரியகல் பறந்து வந்து சென்னையைச் சேர்ந்த நண்பர் கணபதி என்பவரின் மண்டையில் விழுந்தது. அவரோ ஏற்கனவே மொட்டை. இருட்டில் இரத்தம் பிசுபிசுத்தபடி வருவதை உணர்ந்தாலும், ஒன்றும் செய்ய இயலவில்லை... தாய்க்குலங்கள் கதற... கதறாதீர்கள் அதுவே நம்மை யாத்ரீகர்கள் என்றும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்றும் அடையாளம் காட்டும் என்று கைடு சொல்ல

நடப்பதெல்லாம் இறைவிருப்பம் என்றாலும் சிந்துத்து செயல்பட புத்தி இருக்கிறதே. நானும் சீட்டிக்கடியில் தலையை நுழைத்துக்கொண்டுதான் வந்தேன். ஒரே வித்தியாசம். மற்றவர்கள் பதற்றமாகவும், பயமாகவும் இருந்த/உணர்ந்த சூழலை பதற்றமின்றி நடப்பது நடக்கட்டும். செய்வதற்கு ஒன்றுமில்லை என அமைதியான மனதோடு அமர்ந்து வந்தேன், ..வழிநெடுக கல்வீச்சு தொடர்ந்தது. உணவு உண்ண டிராவல்சால் கொடுக்கப்பட்ட எவர்சில்வர் தட்டுகளை எடுத்து எனக்கு மேலே இருப்பவரின் தலைக்கு கேடயமாக்கி பிடித்துக்கொள்ளவும் செய்தேன்,

கொடுமையான பலநிமிடங்கள் கடந்தது. முகாம் சென்றபின் பார்த்தால் நண்பர் கணபதிக்கு முன் மண்டையில் கிழிசல்.. தலையில் ஆறு தையல் போட வேண்டி வந்தது.. என் பின்னே இருந்த கணினித்துறை சார்ந்த இன்னொரு நடுத்தர வயது நண்பருக்கு காதுக்கு மேலாக கல் விழுந்ததில் கண் நரம்பு பாதிக்கப்பட்டு கடுமையாக சிவந்தது, மூக்கிலும் லேசான காயம்.. இருவருக்கும் முகாமில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.சரி எங்களுக்கும் அந்த ஊர்காரர்களுக்கும் என்ன பகை? மதம்தான் பகை...... நாங்கள் இந்து என்பது ஒன்று மட்டும்தான் காரணம்..... எதற்காக அமர்நாத் வருகிறாய், வராதே என்பது அங்குள்ள சில அமைப்புகளின் தீர்க்கமான கொள்கை முடிவு.. இந்துக்களை அச்சுறுத்தி இங்கு வராமல் இருக்கச் செய்வதே அவர்கள் நோக்கம். சிறுவர்கள்தான் இந்த கல்வீச்சில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு ஊக்கத்தொகையும் உண்டு. ஒரு கண்ணாடிக்கு 500 முதல் வழங்கப்படுகிறது

போனவருடம் வரை சிஆர்பிஎப் போலீஸ் துறையினரால் முழுமையாக கொடுக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள்......... இந்த வருடம் முதல் மாநில காவல்துறையால் செய்யப்பட்டிருந்தது..நாங்கள் புகார் கொடுக்க விரும்பினோம். அங்குள்ள காவல்துறை அதிகாரியோ தமிழ்நாட்டில் போய்க் கொடு என்கிறார்..எதிர்த்துப் பேசவும், தகராறு பண்ணவும் உணர்வுகள் துடித்தாலும் இன்னும் பாதிதூரம் போகவேண்டும். திரும்ப அதே வழியில் வந்தாகவேண்டும் என்ற பாதுகாப்பு/பய உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடங்கிக்கொண்டோம். இணைய இணைப்பு செல்பேசி வேலை செய்யாத இடம். கூட வந்த பயண ஏற்பாட்டாளர்களும் எதிர்வினை வேண்டாம். அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று சமாதானம் செய்தனர்.

எங்களுடன் வந்த குவாலிஸ் கார் சைடு கண்ணாடி உடைக்கப்பட்டதில் அதில் வந்த அம்மாவிற்கு மூக்கில் கல்லடிபட்டது.. முதலுதவி செய்தும் மிகுந்த சிரமத்தில் இருந்த அவர் ஸ்ரீநகர் மருத்துவமனை கொண்டு சேர்த்தனர், ஸ்ரீநகரில் மூக்கு ஆபரேசன் பண்ண வேண்டியதாகிவிட்டது.காலையில் வாகனங்களைப் பார்வையிட்டபோது சுமார் 15க்கும் அதிகமான வண்டிகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. பஸ் மேல்டாப்பில் கிடந்த கற்கள் நிறைய..வாகனங்கள் இன்சூரன்ஸ் மூலம் இழப்பினை ஈடுகட்டிக்கொள்வதாலும், வடமாநில டூரிஸ்ட், கைடுகளுக்கு இது பழகிவிட்டதால் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.. அதே சமயம் அடுத்தநாள் பகலில் பேருந்தின் முன்பகுதியில் வெளியில் இருந்து பார்த்தவுடன் தெரியும் வண்ணம் டிராவல்சின் ஸ்ரீநகர் முஸ்லீம் கைடு தாடியுடன் முன் அமர்ந்து வந்தார்.. அப்படி இருந்தால் கல் விழாதாம்...விழவில்லை என்பதும் உண்மை:)

இந்தியா மதச்சார்பற்ற நாடு..சொல்ல நல்லா இருந்தாலும் யதார்த்தம் அப்படி இல்லை.. பிறப்பால் இந்துவாகிய எனக்கும், என்னைச் சார்ந்தவருக்கும் விரும்பிய பொது இடத்திற்குச் செல்ல உரிமை இல்லை.. ஏன் இங்க வர்ற என்று கேள்வியை கேட்காமலேயே/ உணர்த்துகிற தாக்குதல்.. இனி நான் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில், விருப்பம் இருக்கிறதோ இல்லையோ என் மதத்தை/குழுவை நாடித்தானே ஆகவேண்டும்..?

முஸ்லீம் சமூகத்தை இந்துவாகிய நானும், என்னைச் சார்ந்தவர்களும் தாக்கினால் அது தப்பு, இந்தியா மதச்சார்பற்ற நாடு. சிறுபான்மை மதத்தினரை பெரும்பான்மை தாக்குவது என்ன நியாயம் என்று அனைவரும் பொங்கலாம். ஆனால் சிறுபான்மை மதத்தினர் கூச்சப்படாமல் பெரும்பான்மையினரைத் தாக்குகின்றனர்.. காரணம் இந்து என்றால் இளிச்சவாயன். சகிப்புத்தன்மை உள்ளவன், அடிச்சா திருப்பி அடிக்கனுமான்னு பலமா யோசிப்பான்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க...

இந்த நிகழ்வுக்குப் பின் நாங்கள் சுற்றுப்பயணம் செய்த ஜம்மு, ஸ்ரீ நகர் முழுக்க 600 கிமீ பயணத்தில் வேறு வேறு இடங்களில் சில சிஆர்பிஎப் போலீசார் தமிழர்கள், மலையாளிகளை அடையாளம் கண்டு பேசினோம். அனைவரும் ஒரேமாதிரியாகச் சொன்னது.. ஸ்ரீநகரில் யார் யார் இந்த பிரச்சினைகளுக்குக் காரணம் என்று எங்களுக்குத் தெரியாமல் இல்லை. இவர்களை அடக்க குறைந்த பட்சம் மூன்று மணிநேரமும் வேரோடு அறுக்க மூன்று நாளும் போதும்..

முஸ்லீம்களில் தவறானவர்களை எளிதில் அடக்கமுடியும்..ஆனால் இந்த ஏகே47 துப்பாக்கி எங்களைப் பாதுகாத்துக்கொள்ளத்தான்... முஸ்லீம்கள் மீது துரும்பு கூட படக்கூடாது... முஸ்லீம் அடித்தால் அடியை வாங்கிக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள். திருப்பித் தாக்காதே என்பது அமைச்சகத்தின் வாய்மொழி உத்தரவு... இது யாரோ ஒருவரின் கருத்து அல்ல.. நாங்கள் உரையாடிய 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலிசாரின் ஒரே மாதிரியான கருத்து.:( தீவிரவாதம் எந்த வடிவிலும் நீடிப்பது நல்லதல்ல.. அதுவும் மதம் என்ற போர்வையில் அனுமதிப்பது மகாதவறு.

பாதுகாப்பான சூழல் என்பது முஸ்லீம்களுக்கு தமிழகத்தில் நிச்சயமாக இருக்கிறது.. அது கலைஞராக இருந்தாலும் சரி, ஜெ வாக இருந்தாலும் சரி..எந்த கலவரம், மோதல் எதிலும் ஜாதி, கட்சி, அரசியல், காரணம் இருக்குமே அன்றி எனக்குத் தெரிந்த வரை மதம் ஒரு காரணியாக இருந்ததில்லை. அப்படி இருக்கையில் தமிழகத்தில் வாழும் முஸ்லீம்களில் மிகச்சில சதவீதத்தினர் மோடியை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். காரணம் எதுவுமில்லை. மதம் மட்டுமே. மோடி இந்து மதத்தை முன்னிலைப்படுத்துவது மட்டுமே காரணம்..

பதவி, பொறுப்பில் இல்லாத ஒரு இயல்பான சாதரண முஸ்லீம்கூட தன் மதத்தை இஸ்லாத்தை விட்டுக்கொடுப்பதும் இல்லை. பழிப்பதும் இல்லை. ஆனால் சொந்த மதத்தை எப்படி வேண்டுமானால் கிழித்து துவைத்து தொங்கவிடுவது இந்துவாய் பிறந்த எவருக்கும் சாத்தியம். மதமும் அதை அனுமதிக்கிறது. சாதரணனுக்கும் சாத்தியம். மிகப் பிரபலங்களுக்கும் சாத்தியம்.

நான் மட்டும் ஏன் இந்து மதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்?. இங்கே இஸ்லாத்திற்கு எதிராக எதுவும் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தவறானவர்கள் அடக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். சொத்தை காங்கிரஸ் இருக்கும்வரை அது சாத்தியமில்லை. இந்நிலை மாற அல்லது மோடி வந்தால் இந்த கேடுகெட்ட காங்கிரசை விட நிச்சயம் ஒரு படியாவது நன்றாக இருக்கும்.

 ஆக மதம் சார்ந்த ஆதரவை மோடிக்கு உரக்கத் தெரிவிக்க வேண்டும். 

பிரதமர் பதவி மதம் சார்ந்ததல்ல.,.. இந்திய மக்களுக்கானது, பொதுவானது என்று சொல்கிறீர்களா?

அப்படி எனில் மோடி எதிர்ப்பாளர்களில் ஒரு முஸ்லீம் நண்பராவது எனது இந்தியா என்று சுதந்திர தின வாழ்த்தினை பொதுவில் தெரிவித்து இருந்தால் அவரே மோடியை எதிர்த்துப் பேச தகுதியானவர்... பிற இணைய முஸ்லீம் நண்பர்களுக்கு இந்தியாவின் சுதந்திரதினம் ஒரு விடுமுறை நாள் அவ்வளவே,,,ஆனால் அவர்கள் தாம் இப்போது வந்து மோடி ஆகாது என பரப்புரை செய்து கொண்டு இருக்கின்றனர். எனது நாடு என சொல்ல விருப்பமில்லாதவர்களுக்கு, நாட்டின் தலைமைக்கு மோடி வரக்கூடாது எனச் சொல்ல என்ன உரிமை..? அடையாளம் காண்போம் அவர்களை...உரிய கருத்துகளை பதிவு செய்வோம்.

நம்முடைய அரசியல் அமைப்பில் 51 சதவீத ஓட்டு யாருக்கோ அந்த அரசியல் கட்சிதான் நாட்டை ஆளும் தகுதி.. மற்ற 49 சதவீத ஓட்டு போட்ட எதிரணியினருக்கும் சேர்த்துதான்.. அதே போல இந்த நாடு இந்தியா என்பது இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. ஆக தன் மதத்தை / மதிப்பை /தன் மக்களை காக்கும் ஒருவன் தலைவனாக வேண்டும் என்பது பொது விருப்பமாயின் எதற்கு இந்த சலசலப்பு ?,

யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும். எங்களுக்கு தொந்தரவில்லாமல் இருக்கட்டும் என்றால் இருமதத்தினரும் நெருங்கிவரும் வாய்ப்பு உண்டு. இல்லையெனில் எதிர்ப்பு தொடரத்தான் செய்யும் . பொதுவில் 100 மார்க் மோடிக்கு கொடுக்க முடியாவிட்டாலும் நிர்வாகத்தில் இப்போது இருக்கிற பிரதமரைவிட பல மடங்கு சிறப்பானவர்தாம். இந்து என்பதிலும் பெருமை கொள்வோம். மோடியை ஆதரிப்போம்

நிகழ்காலத்தில் சிவாPost a Comment