"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 24, 2009

பரிணாமம் குறித்தான...1

 முந்தய இடுகையின் பின்னூட்டங்களின் தொடர்ச்சியே இந்த இடுகை
இந்த பதில் பின்னூட்டமாக வெளியிடுவதில் கூகுளாண்டவர் ஒத்துழைக்காததால் இங்கே இடுகையாக..


டவுட் தனபாலின்  கேள்விக்கான பதில்

\\அந்த ஒரு செல் உயிரியின் செயல் எதனால் நிர்ணயம் செய்யப்பட்டது? அதற்கு முன் தான் செயலோ வினையோ இல்லையே?\\

அதற்கு முன்னர் பஞ்சபூதங்களின் தோற்றம், அதற்கு முந்தய நிலை இவற்றிற்கு எந்த செயலும் விளைவும் காரணம் இல்லைதான்.

காரணம் உருபொருள் என தாங்கள் சொல்லும் இறையின் தன்மைகளுள் ஒன்று விரிவு,அழுத்தம்

ஆகவே அதன் பெருக்கத்தில் மலர்போல் உள்ளிருந்து உள்ளாக தோன்றியதே இப்பிரபஞ்சம், இதில் மறைபொருளாய் இருப்பது காந்த ஆற்றல்.

விளைவு என்பதே வித்திலிருந்துதான் தொடங்குகிறது. அதன் பின்னரே வினைப்பதிவுகள் வந்தன.

\\புல்லாகி உருவாக புல்லுக்கு முன் என்னவாக இருந்தது? \\

பஞ்சபூதங்களாக, அதற்கு முன்னதாக இந்த பூமியை எது தாங்கிக் கொண்டிருக்கிறதோ அதுவாக இருந்தது.அதற்கு முன் அதுவுமில்லாமல் இருந்தது.

\\புல்லாக எது செயல்பட்டது? \\

தோற்றுவித்தது எதுவோ அதுவே புல்லாகவும் செயல்பட்டது.

\\எதன் கருமையம் புல்லில் இருந்தது?\\

உயிரோட்டம் எதை மையமாக வைத்து ஓடுகிறதோ அதை கருமையம் என்கிறோம். அப்படி பார்க்கும்போது தாவர இனங்கள் புவியோடு வேர்மூலம் இணைந்தே இருப்பதால் கருமையம் என்று ஒன்று தனியாக இல்லை. அது நகரும் உயிரினங்களுக்கே உரித்தானது

\\புல் எந்த செயல் செய்ததால் வினை பயன் பெற்று பூடாகியது? பிறகு புழுவாக மாற எது காரணமாகியது.?\\

இதற்கு சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது செயலுக்கு வினைக்கு விளைவு நிச்சயமே தவிர செயலினால்தான், அதன் விளைவினால்தான் அடுத்த பிறவி (பரிணாமம்)என என்னால் சொல்ல முடியவில்லை.

ஆனால் அதன் குணங்களும்,அமைப்புகளும் காந்ததின் மூலம் சுருக்கி இருப்பாக வைத்து அடுத்த நிலையில் விரித்து காண்பிக்கப்படுகிறது.

 காந்தஓட்டம் பஞ்சபூதங்களுள் முறையான சுழற்சி அடையும் போது ஒருசெல் உயிரினம், இந்த ஓட்டம் மேலும் ஒழுங்கு பெற்றபோது பிற உயிரினங்கள் வந்தன.

அவையும் அழுத்தம், ஒலி,ஒளி,சுவை, மணம் இவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் வரிசையாக தோன்றின. இதில் காந்த(சக்தி) ஆற்றலின் பங்கு மகத்தானது

இறையின் பண்புகளின் ஒன்று ’விரிவு‘ அதுதான் காரணம்., யார் கண்டார்கள், பலகோடி வருடத்திற்குபின் பரிணாமத்தில் நாம் என்ன உருவம் எடுப்போமோ?

இதில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையது. நிறை இருந்தால் வேதாத்திரி மகானுடையது.

வாழ்த்துகளைத் தனபாலிடம் சொல்லுங்கள்.

10 comments:

 1. //
  தோற்றுவித்தது எதுவோ அதுவே புல்லாகவும் செயல்பட்டது.
  //

  புரியலை, தோற்றுவித்தது என்றால் என்ன ? எதை ? யார் ?

  ReplyDelete
 2. //காந்தஓட்டம் பஞ்சபூதங்களுள் முறையான சுழற்சி அடையும் போது ஒருசெல் உயிரினம், இந்த ஓட்டம் மேலும் ஒழுங்கு பெற்றபோது பிற உயிரினங்கள் வந்தன.

  அவையும் அழுத்தம், ஒலி,ஒளி,சுவை, மணம் இவற்றை உணர்ந்து கொள்ளும் வகையில் வரிசையாக தோன்றின. இதில் காந்த(சக்தி) ஆற்றலின் பங்கு மகத்தானது//

  ஏ(க்) காந்தம் ! அது எங்கிருந்து வந்தது !

  ReplyDelete
 3. //இதற்கு சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது செயலுக்கு வினைக்கு விளைவு நிச்சயமே தவிர செயலினால்தான், அதன் விளைவினால்தான் அடுத்த பிறவி (பரிணாமம்)என என்னால் சொல்ல முடியவில்லை. //

  :) செயலுக்கு தூண்டல் தேவை. அதன் பிறகு தான் வினையா வேறெதுமான்னு சொல்ல முடியும் !

  ReplyDelete
 4. //இனங்கள் புவியோடு வேர்மூலம் இணைந்தே இருப்பதால் கருமையம் என்று ஒன்று தனியாக இல்லை//

  அமைதியான கடலில் அலை தோன்ற காற்று அங்கே அடிக்கனும் ! பூமி சுழற்சியில் பருவ காலங்கள் மாறி மாறி வர... உயிரின வாழ்க்கை சுழற்சிக்கு...அது நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்றாலும் தொலைவில் இருக்கும் சூரியன் அதற்கான சக்தியைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. சூரியன் இல்லாமல் பூமியில் தற்சுழற்சி ஏற்படாது.

  எந்த ஒரு தற்சுழற்சிக்கும் அல்லது முடிவற்ற சுழற்சிக்கும் புறத்தூண்டல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

  ReplyDelete
 5. \\எந்த ஒரு தற்சுழற்சிக்கும் அல்லது முடிவற்ற சுழற்சிக்கும் புறத்தூண்டல் இருந்து கொண்டே இருக்க வேண்டும்\\

  புறத்தூண்டுதல் தரக்கூடியதே, உள்ளே இருந்து அகத்தூண்டுதலையும் தருகிறது என்பதே இதன் விளக்கம்,

  \\புரியலை, தோற்றுவித்தது என்றால் என்ன ? எதை ? யார் ?\\

  இதைக் கொஞ்சம் மனதின் ஒரத்தில் போட்டு வையுங்கள், கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடும்.

  ReplyDelete
 6. சூப்பர். கோவி சில நேரங்களில் உங்களை முழுமையாக வெளிப்படுத்துகிறீர்கள்.

  இன்று நீங்கள் தினமலர் படிக்கவில்லை சரியா :) ?

  ReplyDelete
 7. //இன்று நீங்கள் தினமலர் படிக்கவில்லை சரியா :) ?//

  இந்தவாரம் ஞான நந்தம் அவ்வளவாக நன்றாக இல்லை. இடைச் சொருகல் இல்லாமல் எழுதிட்டார்
  :)

  ReplyDelete
 8. //புறத்தூண்டுதல் தரக்கூடியதே, உள்ளே இருந்து அகத்தூண்டுதலையும் தருகிறது என்பதே இதன் விளக்கம்,
  //

  நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் ? ஆன்மா என்று ஒன்று இல்லவே இல்லை, கற்பனை என்றா ?

  ReplyDelete
 9. \\நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள் ? ஆன்மா என்று ஒன்று இல்லவே இல்லை, கற்பனை என்றா \\

  ஆன்மா என்பது உண்டு, :)

  ReplyDelete
 10. //இன்று நீங்கள் தினமலர் படிக்கவில்லை சரியா :) ?//

  இந்த விசயம் ஓம்காருக்கும் தெரிந்து விட்டதா? ;)

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)