"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 17, 2009

பிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)

கொஞ்ச நாளா மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.. சரி இன்னும் வலுப்பெறட்டும் என விட்டுவிட்டேன்.


மனதில் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


கலவிக்கு சற்றுமுன்...
கலவியின்போது...
கலவிக்குப் பின்....

அதன் பின் அடுத்த நாள்...

உங்கள் மனநிலை என்ன?

உங்கள் துணையோடு(ஆண், பெண் இருபாலருக்கும் மன உறவு எப்படி இருந்தது.?

பின்னூட்ட நிபந்தனைகள்

1)இதில் அங்குபடித்தது, இங்கு கேட்டது இது எல்லாம்  எழுத வேண்டாம்

2)முழுக்க முழுக்க உங்களது சொந்த மனம் குறித்தான அனுபவங்களை மட்டும் எழுதுங்கள் (உடல் அனுபவத்தை நான் கேட்கவே இல்லைங்க சாமிகளா)

3)திருமணமானவ்ர்கள், திருமணம் ஆகாதவர்கள், குறுக்குத்தொடர்பு உள்ளவர்கள் எல்லோருமே பின்னூட்டமிடலாம்.

4)கூச்சமா இருக்கா.

கவலையே படவேண்டாம், முழுக்க முழுக்க அனானி என்ற பெயரிலேயே பின்னூட்டமிடுங்கள், அந்த வசதி இந்த இடுகைக்கு  மட்டும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

5)நான் இடையில் கருத்து தெரிவிக்கமாட்டேன்.

6)ஆபாசம் தொனிக்காமல் தகவல் தெரிவிக்கும் இயல்பான தொனியில் பின்னூட்டங்கள் இருத்தல் வேண்டும்,

7)வக்கிரமான பின்னூட்டங்கள் வந்தால் நீக்கப்படும்.

இது கலவி குறித்த விழிப்புணர்வுக்கான இடுகை

ஓட்டுப்போடுங்கள், கூடவே உங்கள் நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள்


கலவி  என்றால் என்ன என தெரியாதவர்கள் வெளியேறவும் , நன்றி

காத்திருக்கிறேன்......உங்களுக்காக

***************************************************

டிஸ்கி: இந்த இடுகையின் நோக்கம் கலவி நம் மனதில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.? கலவியில் மனம் நிறைவு பெறுவது எப்படி?,  இதில் துணை தவிர்த்து நம் பங்கு என்ன? இது சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற சிந்தனையைத் தூண்டுவதே
****************************************************

32 comments:

 1. பரிசோதனைப் பின்னூட்டம்

  ReplyDelete
 2. என்ன கொடுமை சார்,

  எதாவது புதுத்தகம் எழுதும் எண்ணமா ?

  அவ்வ்வ்வ்வ்வ் !

  அந்தரங்கம் பகிர்ந்து கொள்ளாதவரை புனிதம்.

  அம்மணமாக குளித்தாலும் நான்கு சுவர் ஆடையாக இருக்கும். என்னைக் கேட்டால் பாலியல் பிரச்சனைகள் அல்லது ஆலோசனைகள் நாராயண ரெட்டி போன்ற மனநல மருத்துவர்களிடம் தவிர்த்து பகிர்ந்து கொள்ள பொதுவானது கிடையாது.

  ReplyDelete
 3. சிவாண்ணே!

  எங்கியோ..... போய்ட்டீங்க.

  ReplyDelete
 4. /உடலுறவு, காமம், செக்ஸ், தாம்பத்யம், பிதற்றல்கள், மனம்/
  இப்படி நீங்களே காரணங்களை உளறி விட்டு எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று கேட்பது ஏன் என்று புரியவில்லையே சிவா!
  கோவி.கண்ணன் சொன்னது போல இதில் பெரியஆண்ட பகிரண்ட ரகசியமெல்லாம் கிடையாது. மோகத்தில் என்னென்னவோ உளறல் வரும். அந்த நேரத்தில் என்ன பலவீனமோ,பெண் ஜென்மமும் அந்த ஆகாசப் புளுகை நம்பித் தொலைக்கும்!

  இதற்கு ஸ்க்ரிப்ட் வேறு தேவையா என்ன? கோவி.கண்ணன் பாணியில். போங்க, போய் வேறு உருப்படியான வேலை இருந்தால் போய்ப்பாருங்க!
  புள்ளைகுட்டியைப் படிக்க வையுங்க! நல்ல புத்தகம் கெடைச்சா படியுங்க!

  ReplyDelete
 5. கோவி.கண்ணன்

  \\அந்தரங்கம் பகிர்ந்து கொள்ளாதவரை புனிதம்\\

  அந்தரங்கத்தை அந்தரங்கமாக, அனானியாக பகிர்ந்து கொள்ள சொல்லி இருக்கிறேன். இதில் என்ன பிரச்சினை வரும் என புரியவில்லை :(

  மனநல மருத்துவரிடம் போய்(?) காசு கொடுத்தாலும் கொடுப்போம், நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்களா ?

  பசி,தாகம்,கழிவுகள் வெளியேற்றம் போல் பாலியல் உணர்வும் இயல்பானதே, மற்றபடி புனிதமா? புதிரா? என நான் சிந்திக்கவே இல்லை,

  மறைப்பதே பிரச்சினை என்பதால்தான் இது குறித்து பலமாக யோசித்தே இதை வெளியிட்டு இருக்கிறேன்.

  ReplyDelete
 6. கிருஷ்ணமூர்த்தி
  //மோகத்தில் என்னென்னவோ உளறல் வரும். அந்த நேரத்தில் என்ன பலவீனமோ,பெண் ஜென்மமும் அந்த ஆகாசப் புளுகை நம்பித் தொலைக்கும்//

  இடுகையில் என்ன பேசுவீர்கள் என்று எழுதியது இடுகையின் போக்கை மாற்றிவிட்டதால் அதை எடுத்துவிட்டேன்.

  நன்றி

  கலவியினை இங்கே விவரிக்க சொல்லவில்லை,

  ReplyDelete
 7. \\☼ வெயிலான் said...

  சிவாண்ணே!

  எங்கியோ..... போய்ட்டீங்க.\\

  உங்களை அனானியாக இந்த இடுகையில் எதிர்பார்க்கிறேன் :))

  ReplyDelete
 8. //உங்களை அனானியாக இந்த இடுகையில் எதிர்பார்க்கிறேன் :))//

  அப்ப அனானி கமெண்ட் வந்தால் வெயிலான் ரமேஷ் போட்டதுன்னு எடுத்துக் கொள்கிறேன்

  :)

  ReplyDelete
 9. நான் நாளைக்கு வந்து படிக்கிறேன்.


  சுவாரஸியமா இருக்கணும் ஆமா!!

  :)))

  ReplyDelete
 10. அடுத்தவங்க கதைய கேட்டு என்ன பண்ண போறீங்க மிஸ்டர்??அபிஸ்து

  ReplyDelete
 11. உங்களின் நோக்கம் என்பதை கோவி கண்ணன் கூட மாற்றம் அடைய வைத்து விட்டார்.

  இது மற்றொரு முறையில் யோசித்து பார்க்கலாம்.

  அப்பா அம்மா நல்லவர்கள். குழந்தைகள் மனதில் தினந்தோறும் விதைக்கும் நல்ல எண்ணங்கள். எல்லாமே சரி.

  சந்தில் நுழையும் போது, சாக்கடையை தாண்டு போதும், சகதியில் நுழைந்து வெளியேறும் போது மூக்கை பொத்துவதா? அதை பொறுத்து வாழ கற்றுக்கொடுப்பதா? இதுவும் கடந்து போகும் என்று சகிப்புத் தன்மையை புகுத்துவதா?

  பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை வைத்தே ஒரு மணி நேரத்திற்கு முன் 6 வது படிக்கும் பெண்ணும் ஆணும் அத்தனை நெருக்கமாக (அவர்கள் குழந்தைகள், சிறுவர்கள் அல்ல. காரணம் அத்தனை தெளிவு நோக்கத்தில்) பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

  புத்தகப்பபை அனாதையாக.

  ஒரு உதாரணம் வைத்து உளறுவதா?

  அப்பா அம்மா பகிர்தலில் தொடங்குகிறது.

  அந்தரங்கமா? எதிர் கால அனாதையா?

  கல்வி கலவி இந்த ஒரு புள்ளி தான் மொத்தமாய் வாழ்க்கையில் முக்கிய புள்ளியாஇல்லை வாழ்க்கை முழுக்க முக்கிக்கொண்டு வாழும் புள்ளியா என்று உணர்த்தும்.

  நல்ல பங்களிப்பு சிவா.

  ReplyDelete
 12. \\Anonymous said...

  அடுத்தவங்க கதைய கேட்டு என்ன பண்ண போறீங்க மிஸ்டர்??அபிஸ்து\\

  எனக்கு ஏதேனும் பாடம் கிடைக்குமா என்கிற நப்பாசைதான்.,

  வேறு எந்த நோக்கமும் இல்லை :((

  ReplyDelete
 13. ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  \\கல்வி கலவி இந்த ஒரு புள்ளி தான் மொத்தமாய் வாழ்க்கையில் முக்கிய புள்ளியாஇல்லை வாழ்க்கை முழுக்க முக்கிக்கொண்டு வாழும் புள்ளியா என்று உணர்த்தும்.\\

  கலவியைக் கலவியாகவே அனைவரும் பார்க்கிறார்கள்.,

  நானோ அதில் கல்வியையும் பார்க்கிறேன், அதற்கும் மற்ற நிகழ்வுகளுக்கும் தொடர்பு படுத்திப் பார்க்கிறேன்.

  நீங்கள் என் கருத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி
  ஜோதிஜி..

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. அவுட் ஆப் சிலபஸ்.. :-)

  ReplyDelete
 15. //பட்டிக்காட்டான்.. said...

  அவுட் ஆப் சிலபஸ்.. :-)//

  பரவாயில்லை, பார்வையாளரா இருங்க..

  சிலவருசம் கழித்து தேவைப்படும்

  ReplyDelete
 16. மற்றவர் அந்தரங்களை அறிய ஆசைப்படுபவன்
  ஒரு PERVERT. டாக்டரும் நீயும் ஒன்றாகமுடியுமா.

  ReplyDelete
 17. // உங்களை அனானியாக இந்த இடுகையில் எதிர்பார்க்கிறேன் :)) //

  ஏன் இந்தக் கொலை வெறி?

  நான் எப்பவும் என் பெயருடன் தான் பின்னூட்டமிடுவேன்.

  ReplyDelete
 18. \\Thevesh said...

  மற்றவர் அந்தரங்களை அறிய ஆசைப்படுபவன்
  ஒரு PERVERT. டாக்டரும் நீயும் ஒன்றாகமுடியுமா\\

  :))

  வாழ்த்துக்கு நன்றி துவேஷ்

  ReplyDelete
 19. ☼ வெயிலான் said...

  // உங்களை அனானியாக இந்த இடுகையில் எதிர்பார்க்கிறேன் :)) //

  ஏன் இந்தக் கொலை வெறி?

  நான் எப்பவும் என் பெயருடன் தான் பின்னூட்டமிடுவேன்.\\


  சரி இந்த இடுகையில சார்ந்து பின்னூட்டமிடுங்கள் :))

  ReplyDelete
 20. //டிஸ்கி: இந்த இடுகையின் நோக்கம் கலவி நம் மனதில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.? கலவியில் மனம் நிறைவு பெறுவது எப்படி?, இதில் துணை தவிர்த்து நம் பங்கு என்ன? இது சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற சிந்தனையைத் தூண்டுவதே
  //
  இப்புடி டிஸ்கி போடறதுக்கு பதில் உங்கள் கேள்விகளுக்கு முதல் பதிலாக உங்களுடையதை போட்டிருக்கலாமே? எல்லாருக்கும் ஒரு முன் மாதிரியா இருந்திருக்குமில்ல

  ReplyDelete
 21. குழலி

  உடனே போடாததுதான் என்னைப் பலராலும் தவறாக புரிந்து கொள்ள வைத்துவிட்டது.

  ஆனால் எழுதி இருக்கிறேன், படித்துப்பாருங்கள்..
  http://arivhedeivam.blogspot.com/2009/11/18.html

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 22. \\எடுத்தஎடுப்பில் உங்கள் ஆக்கத்தைப்படித்ததும் மனதில் தோன்றிய வெறுப்பில் உங்களை அப்படி விளிக்கும்படி ஆகிவிட்டது மற்றப்படி உங்கள் மனதை நோக வைப்பதுஎன் நோக்கமில்லை. \\

  நான் இன்னும் தங்களுடன் நட்புணர்வுடனே இருக்கிறேன், தங்களின் பின்னூட்டம் என் வலைப்பதிவை படிக்கும் புதிய அன்பர் எனப்தை உணர்த்தியது,
  அதனாலேயே உங்களது அர்ச்சனையை வாழ்த்தாகவே எடுத்துக் கொண்டேன்.

  எதிர்கால சமுதாயம் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும், அதனாலான குற்றங்கள் குறைய வேண்டும். அதற்கு செக்ஸ்.ல், மனைவியை எத்தனை பேர் நிறைவடைந்தாயா என கேட்கிறோம் என அறிந்து அதற்கேற்றாற்போல் என் கருத்தினை வலியுறுத்தலாம். அதிலும் சொந்த பெயர் வேண்டாம். அனானியாக வரும் போது வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது எளிது எனகருதியே வெளியிட்டேன். ச்முதாயத்திற்கு நண்பர்களின் கருத்து தேவைப்படும் காலம் இன்னும் தொலைவில் இருக்கிறது போலும்,

  நேரடியாக நான் விசயத்தை சொல்லாமல் சற்றே சுற்றி வளைத்தது தவறாகிவிட்டது :))

  இது அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் செயலாக படிப்பவர்களால் பார்க்கப்பட்டு விட்டது. வீதியில் செல்லும் ஞானி/பிச்சைக்காரனுக்கு உடை குறித்தான விழிப்புணர்வு இருக்காது. காரணம் அவன் மனநிலை உடையைத் தாண்டிவிட்டது. அதுபோல் நான் தாம்பத்யத்தில் ஈடுபட்டாலும், அதை புனிதமாகவோ, அருவருப்பாகவோ பார்க்க மனம் விரும்பவில்லை. அதை இயல்பாக பசி,தாகம் போல் இயற்கையாகவே பார்க்கத் தோன்றுகிறது.

  எனக்கு நான் உண்மையாக இருக்க விரும்புவதால் இதை தங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

  ReplyDelete
 23. unathu muthuhai muthalil nee thirumbi paar unathu naangu kealvigalukkum bathil unnidamey ullathu

  ReplyDelete
 24. \\jafar said...

  unathu muthuhai muthalil nee thirumbi paar unathu naangu kealvigalukkum bathil unnidamey ullathu\\

  நண்பரே முதலில் நீங்கள் ஒரு வலைப்பதிவு தொடங்குங்கள், அல்லது குறைந்த பட்சம் profile ஏற்படுத்தி உங்களை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

  பிறகு நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் :))

  ReplyDelete
 25. அஃகஃகா.... சிரத்தையான இடுகைய இப்படிச் சிரிப்பாக்கிட்டாங்களே? எங்கப்பா நம்ம கட்டுடைப்பாளர்கள் எல்லாம்? சித்த வந்து கட்டுடைச்சிக் கடமைய ஆத்துங்க சித்த!!

  ReplyDelete
 26. \\பழமைபேசி said...

  அஃகஃகா.... சிரத்தையான இடுகைய இப்படிச் சிரிப்பாக்கிட்டாங்களே? எங்கப்பா நம்ம கட்டுடைப்பாளர்கள் எல்லாம்? சித்த வந்து கட்டுடைச்சிக் கடமைய ஆத்துங்க சித்த!!\\

  வாங்க பங்காளி..

  என்ன செய்ய..அமைதியாகி விட்டேன்:))
  இதுவெல்லாம் நாம் முன்னேறாமைக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.

  என் உணர்வினை புரிந்து கொண்டமைக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் :))

  ReplyDelete
 27. //என்ன செய்ய..அமைதியாகி விட்டேன்:))
  இதுவெல்லாம் நாம் முன்னேறாமைக்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன். //

  பின்னூட்டம் போட்டவங்க பழமைவாதிங்கிற மாதிரி ஒலிக்குது உங்கள் பதில். :(

  ReplyDelete
 28. \\பின்னூட்டம் போட்டவங்க பழமைவாதிங்கிற மாதிரி ஒலிக்குது உங்கள் பதில். :(\\

  ஏற்றுக்கொள்கிறேன், ’மாற்றத்திற்கு தயார் இல்லாதவர்கள்’ என வைத்துக்கொள்ளுங்கள்


  எடுத்துக்கொண்ட கருத்தை உரையாடி, அதில் உள்ள சாதக பாதகங்களை அலசி முடிவுக்கு வராமல்
  போனதில் எனக்கு வருத்தமே,

  நான் விரும்பியது, என் கருத்துதான் சரி என பிடிவாதம் எனக்குக் கிடையாது, கலந்து உரையாடுவதன் மூலம் தங்களிடம் இருந்து உயர்வான, சரியான கருத்தும் பார்வையும் வந்திருக்கலாம்,

  அந்த வாய்ப்பை இழந்து விட்டேனோ என இப்போதும் கவலைப்படுகிறேன்:(.

  மற்றபடி எனக்கு பின்னூட்டமிடுபவர்களை மிகவும் மதிக்கிறேன். அது எதிர்கருத்தாக இருந்தாலும் கூட.
  விவாதம் நடைபெற வேண்டும் என்பதே என் விருப்பம், நண்பர்களை பழிப்பவன் அல்ல நான்.

  இன்னும் கூட நான் எடுத்த சொல்லிய விதம் பொருத்தம் இல்லாமல் போய்விட்டது, நாசூக்காக சொல்லி இருக்க வேண்டுமோ எனத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

  தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நட்புக்கு என் வணக்கங்கள் கோவியாரே:))

  ReplyDelete
 29. //ஏற்றுக்கொள்கிறேன், ’மாற்றத்திற்கு தயார் இல்லாதவர்கள்’ என வைத்துக்கொள்ளுங்கள்//

  நிர்வாணம் அழகானது என்று உணர்ந்தாக நம்பும் ஒருவர், இன்னும் நான்கு பேரை அழைத்து வாங்க பொதுமக்கள் நடமாடும் இடத்தில் கூச்சப்படாமல் நிர்வாணமாக நின்று மகிழலாம் என்று சொல்வதைப் போன்றது இந்த இடுகை.

  ReplyDelete
 30. :))

  இந்த இடுகை ஒரு பைத்தியகார உளறல்.. அப்படி வைத்துக்கொள்ளுங்களேன்.

  நம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவையும் இதில் வரும். அதனாலேயே ’பிதற்றல்கள்’ எனத் தலைப்பு வைத்தேன்.

  வாழ்த்துகள்

  ReplyDelete
 31. மற்றவர்களின் அந்தரங்களை அறியமுயல்வதற்கும் பிட்டு படம் பார்ப்பதற்கும் எந்தவித்தியாசமும் இல்லை. நீங்கள் மற்றவர்களின் அனுபவங்களோடு உங்கள் அனுபவங்களை வைத்து ஒப்புமை பார்க்க முயல்கிறீர்கள் என தெரிகிறது.
  டாக்டர். ருத்ரனை சீக்கிரம் போய் பாருங்கள்.

  ReplyDelete
 32. ஆலோசனைக்கு மிக்க நன்றி பிரதாப்..

  கூடவே வருகைக்கும் அக்கறையோடு படித்தமைக்கும் நன்றிகள் பல:)

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)