"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, November 21, 2009

பாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயன்களை அனுபவிக்கின்றனர்-இது ஏன்?


செயலுக்குத் தக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது.வராது.

செயலுக்கும் விளைவுக்கும் இடையே உள்ள காலநீளம் பல காரணங்களினால் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயல்களுக்கும் விளைவுகளை இணைத்துப் பார்ப்பதில் பொருத்தமில்லாமல் போகிறது.

ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம்,
மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம்.
இன்னொரு செயல் அதைச் செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து மூன்று அல்லது நான்கு தலைமுறைக்குப் பின்கூட விளைவு வரலாம்.

கணித்து இணைத்துப் பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கைச் சட்டத்தில் என்றுமே தவறு இருக்க முடியாது.

இதனாலேயே நாம் செய்யும் செயல்கள் முடிந்தவரை பிறரின் உடல், உயிர்,மனம் இவற்றிற்கு துன்பம் தருமா என்பதை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். அதே சமயம் நமது உடல்,ம்னம், உயிருக்கு இனிமை தருவதாகவும் அமைய வேண்டும்.

நன்றி - அன்பொளி 1983ம் வருடம் -  வேதாத்திரி மகரிஷி

வருங்கால சந்ததிக்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சேர்த்து வைக்கும் சொத்து வினைப்பதிவுகளே. ஆகவே நம் வினைகளை தேர்ந்து செய்வோம்.

21 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

இப்படியும் கூட இருக்கிறது:
ஆடு செய்தது, குட்டி தலையில் என்று கூட ஆகலாம்!
பிள்ளைகள், சொத்துக்கு மட்டுமே அல்ல, கர்மவினைகளுக்குமே வாரிசுதாரர்கள் தான்!

நிகழ்காலத்தில்... said...

ஆம்

குட்டி மீது நமக்கு உண்மையான அக்கறை இருந்தால் அவர்களுக்காக நமது செயல்களை ஒழுங்கு செய்வது அவசியம்.

வாழ்த்துகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களே..

அ. நம்பி said...

//செயலுக்குத் தக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது.வராது.- வேதாத்திரி மகரிஷி//

நேரம் இருப்பின் இவ்விரு கட்டுரைகளையும் படித்துப் பாருங்கள்.

செய்வினை:

http://nanavuhal.wordpress.com/2008/06/16/seyvinai/

நாமும் நம் வினைகளும்:

http://nanavuhal.wordpress.com/2008/06/18/karma-saivam/

சிங்கக்குட்டி said...

//இயற்கைச் சட்டத்தில் என்றுமே தவறு இருக்க முடியாது//

நல்ல கருத்து.

prabakar.l.n said...

arumai nikalkaalathil unka name naku therila mannikavum , arumai simple azha rathina surkkama evlo periya visayatha sollirukinga good

cheena (சீனா) said...

அன்பின் சிவசு

நல்ல சிந்தனை - நாம் செய்யும் வினைகள் நமக்கோ அல்லது நமது சந்ததியினருக்கோ - செயலாக மாறும். உண்மை

நல்வாழ்த்துகள்

கேசவன் .கு said...

நல்லப்பகிர்வு நன்றி !

பழமைபேசி said...

நன்றிங்க!

ஸ்வாமி ஓம்கார் said...

கேள்வி கேட்பது...டவுட் தனபால்,

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?

முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது?

கொஞ்சம் புரியாத பொன்னுசாமியை கேட்டு சொல்லுங்கண்ணே...

கோவி.கண்ணன் said...

:)

விதி என்றால் என்ன ? ஏற்கனவே (கடவுளால்?) முடிவு செய்யப்பட்ட ஒன்றா ? ஒருவர் தனக்கான விதியை அவரே முடிவு செய்கிறாரா ?

ஒருவர் ஒரு செயலின் கருவி அதாவது அவர் எதுவுமே செய்வதில்லை அவர் வெறும் கருவியே செய்வதும் செய்விப்பதும் கடவுளே.......என்றால் விதிப்பயனை ஏன் அந்த ஒருவன் அனுபவிக்கிறான் ?

நிகழ்காலத்தில்... said...

அ. நம்பி

தங்களின் சுட்டிகளைப் படித்துப் பார்த்தேன்,
தங்களின் விரிவான இடுகையின் உள்ளடக்கத்தையே
நானும் குறிப்பிட்டுள்ளேன்.

தகவலுக்கு நன்றி நண்பரே

நிகழ்காலத்தில்... said...

prabakar.l.n

சதுரகிரி நண்பரே

என்பெயர் சிவசுப்பிரமணியன்

கூப்பிட வசதியாக சிவா :))

எப்படி விருப்பமோ அப்படி அழையுங்கள்

விரைவில் சந்திப்போம்...

வாழ்த்துகள்

நிகழ்காலத்தில்... said...

@ சிங்கக்குட்டி
@ cheena (சீனா)
@ கேசவன் .கு
@ பங்காளி பழமைபேசி

நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் வாழ்த்துகளும்..

நிகழ்காலத்தில்... said...

\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?

முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது?

கொஞ்சம் புரியாத பொன்னுசாமியை கேட்டு சொல்லுங்கண்ணே...\\

சரியான சிந்தனையைத் தூண்டும் வண்ணம் கேள்வி எழுப்பி உள்ளார்.

பொன்னுசாமியிடம் தகவல் கொடுத்தேன். இது பின்னூட்டத்தில் விளக்குவதைவிட தனி இடுகையாப் போட்டுவிட்டா சிறப்பா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டார்.

கிடைத்தவுடன் இடுகையிட்டுவிடுகிறேன்.
டவுட் தனபாலிடம் தகவல் தெரிவித்து விடுங்கள்..

என் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள்..:))

நிகழ்காலத்தில்... said...

\\விதி என்றால் என்ன ? ஏற்கனவே (கடவுளால்?) முடிவு செய்யப்பட்ட ஒன்றா ? ஒருவர் தனக்கான விதியை அவரே முடிவு செய்கிறாரா ?

ஒருவர் ஒரு செயலின் கருவி அதாவது அவர் எதுவுமே செய்வதில்லை அவர் வெறும் கருவியே செய்வதும் செய்விப்பதும் கடவுளே.......என்றால் விதிப்பயனை ஏன் அந்த ஒருவன் அனுபவிக்கிறான் ?\\

விதி என்றால் இயற்கைவிதி என்றே பொருள்,
தலைவிதி என்றால் தலையாய விதி அப்படின்னும் வெச்சுக்கலாம், என் தலைவிதி எனவும் வெச்சுக்கலாம் :))

கடவுள் என்று எவரும் (மனிதனைப்போல்) தனியாக இல்லை,

விதியும் கடவுளும் ஒன்றே

தங்களின் கேள்விக்கான பதில் சற்று நீளமாக வரும் எனவே டவுட் தனபாலின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டு பின்னர் தனி இடுகையாக இட்டுவிடுகிறேன்.

தங்களின் கேள்வி சிந்தனையைத் தூண்டக்கூடிய
கேள்வியாக அமைந்ததில் மகிழ்ச்சி :))

வெற்றி said...

என்னங்க அறிவே தெய்வம்னு சொல்லிட்டு பாவம்,புண்ணியம்,பொங்கல்,பூரினு சொல்லிட்டு இருக்கீங்க.....
அப்புறம் கோவி.கண்ணன் கருத்துக்கு ரிப்பீட்டு......

நிகழ்காலத்தில்... said...

\\வெற்றி said...

என்னங்க அறிவே தெய்வம்னு சொல்லிட்டு பாவம்,புண்ணியம்,பொங்கல்,பூரினு சொல்லிட்டு இருக்கீங்க.....\\

பசில பின்னூட்டம் இட்டீங்களா :)

பாவம், புண்ணியம் அப்படின்னு யார் எது சொன்னாலும் கேட்காமல் தனக்கோ பிறர்க்கோ உடலுக்கோ, உயிருக்கோ,மனதிற்கோ ஊறு விளைவிக்காத செயல்கள் புண்ணியம், நல்வினை,

ஊறு விளைவிப்பது பாவம், தீயவினை எனப் பொருள் கொள்ளுங்கள், எளிதாக விளங்கும்

\\ அப்புறம் கோவி.கண்ணன் கருத்துக்கு ரிப்பீட்டு......\\

:))) தாங்கள் இன்னும் மகிழ்ச்சி அடையும் வகையில் விளக்கங்கள் வரும் பொறுமை..

வாழ்த்துகள்..

கிருஷ்ணமூர்த்தி said...

வெற்றி said...

என்னங்க அறிவே தெய்வம்னு சொல்லிட்டு பாவம்,புண்ணியம்,பொங்கல்,பூரினு சொல்லிட்டு இருக்கீங்க.....

ஆசை, தோசை, அப்பளம், வடை, பாயசம், பருப்பு இதை எல்லாம் விட்டு விட்டீர்களே?!
அறிவு தெய்வம் தான்! எப்படிப்பட்ட அறிவு தெய்வம் என்பதில் தான் வித்தியாசமே இருக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

நிச்சியமாக இறைவனின் //இயற்கைச் சட்டத்தில் என்றுமே தவறு இருக்க முடியாது//..

மிகவும் நல்லவரிகள்..

வெற்றி said...

கிருஷ்ணமூர்த்தி said...
//ஆசை, தோசை, அப்பளம், வடை, பாயசம், பருப்பு இதை எல்லாம் விட்டு விட்டீர்களே?!//

அன்புக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி...அன்றைய காலை உணவு பொங்கல்,பூரி மட்டும்தான்...
என்ன கேக்காம order பண்ணா bill நீங்கதான் கட்டணும்..சொல்லிட்டேன். :-)

arul said...

arumayana karuthu