"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 23, 2009

நடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்

சிதம்பரம், நவ.23-
சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். தி.மு.க. நகர செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.


நன்றி தினமலர்-23-11-2009 கடைசிப்பக்க செய்தி

5 comments:

 1. "நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி....................

  ReplyDelete
 2. \\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

  "நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி....................\\

  பதிவின் தலைப்புச் செய்தியாக இருந்தாலும் ...புள்ளிகளில் நிறைய செய்தியை உள்ளடக்கி விட்டீர்கள் ஜோதிஜி..

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. அன்பின் சிவசு

  எல்லாம் நன்மைக்கே - அவ்ளோதான்

  பகிர்விற்கு நன்றி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 4. கோவிலுக்குப்போவது என்ன ஆச்சரியமான செய்தியா?
  அது அவர்களது சொந்த விஷயம். இதில் மூக்கைவிட்டுச் செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளுக்குத் தொழில். பதிவர்களுக்கு இது தேவையில்லாத வேலை.

  ReplyDelete
 5. \\S. Krishnamoorthy said...

  கோவிலுக்குப்போவது என்ன ஆச்சரியமான செய்தியா?
  அது அவர்களது சொந்த விஷயம். இதில் மூக்கைவிட்டுச் செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளுக்குத் தொழில். பதிவர்களுக்கு இது தேவையில்லாத வேலை.\\

  :)) நாத்திகம் பேசும் அனுபவம் மிக்க கட்சியின் தலைவரின் குடும்ப நிகழ்வு சொந்த விசயம்,

  ஆனால் தொண்டர்கள் போனால் அது பொது விசயமாகி,தலைவரால் விமர்சனத்திற்கு உள்ளாகிவிடுகிறது. :))

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)