"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, November 5, 2009

மருத்துவ முறைகள் மூன்று

ஒரு குடும்பத்தை மருவி வாழும் மகளுக்கு மருமகள் என்று பெயர், அதுபோல் நம் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் உயிர் ஆற்றலோடு மருவி, உந்தும் ஆற்றலுக்கு மருந்து என்று பெயர். மரு+உந்து வழியில் நோய் தீர்க்கும் கலைக்கு மருத்துவம் என்றே பெயர் வந்தது.
மூன்றுவகை மருத்துவம்

1)இரத்தத்தையும் சதைகளையும் இரசாயன முறையில் குறைபாட்டை நீக்கி, சீரமைக்கும் முறை ஒன்று. இம்முறையில் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம்,யுனானி,உணவு மாற்றம், உடற்பயிற்சி இவைகள் அடங்கும்.

2)உயிர்துகள்களைப் பெருக்கி அதன்மூலம் ஜீவகாந்த ஆற்றலுக்கு திணிவு ஏற்படுத்தி, அதன் மூலம் நோயை போக்கும் முறை இரண்டாவது. இதில் இதில் இரசம்,கந்தகம்,பாஷாண வகைகளைக் கொண்டு செய்யப்படும். சித்த மருத்துவமும் இதுபோன்ற முறைகளும் இதில் அடங்கும்.

3)சீவகாந்தக்களத்தின் தன்மைகளை மாற்றும் காந்த அலைகளை ஊட்டி, அதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறை ஒன்று. ஓமியோபதி, உளப்பயிற்சி, பிரார்த்தனை இவையும் இவை ஒத்த பிற முறைகளும் இதில் அடங்கும்.

மேற்கண்ட மூன்று வகைகளுமே இன்றுவரை மனித இனத்தில் பழக்கத்தில் இருந்து வரும் முறைகள் ஆகும். அதே சமயம் ஒவ்வொரு மருத்துவத்திலும், மற்ற மருத்துவ வகைகளின் பயன் மறைமுகமாக ஓரளவிற்கேனும் செயல்படும்.

--வேதாத்திரி மகரிஷி

3 comments:

 1. மகரிஷியின் கருத்துககளை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 2. ஐயா கொல்லாதீங்க. ஏதும் பக்கத்து வீட்ல இருந்து வந்து பார்க்குறீங்களா?
  இன்று மருத்துவரிடம் கேட்ட நான் வேண்டுமானால் கசாயம் சாப்பிட்டு பார்க்கட்டுமா? என்று அவர் முறைப்பை மீறி நீங்கள் சொன்னதை நான் மனதிற்குள் வைத்துக் கொண்டதை எப்படி சிவா போட்டு? ஆறு மாதம் தான் இந்த மருத்துவ வீர்யம் இருக்கிறது. குழந்தை மருத்துவர் எளிதாக சொல்கிறார். அடுத்து வேறு வழியில்லை. ஹெவி டோஸ்- ஸ் ஸ்ப்பாடா......

  ReplyDelete
 3. நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)