"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, April 27, 2009

கடவுளும்..நல்ஒழுக்க உறவும்..அன்பான உறவும்

‘கடவுளை இவர்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் கடவுளோ இவர்களைக் கண்டு கொள்வார்!’

என்னும் மூன்றாம் வகை உறவே நல்ஒழுக்க உறவு.

பகவான் புத்தர், மகாவீரர், கபிலதேவர் போன்ற மகான்களே இந்தப் பட்டியலில் உள்ளவர்கள்.

இவர்கள் கடவுளைப் பற்றிப் பேசவில்லை; புகழவில்லை; கடவுள் நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. ஆனால் கடவுளுக்கு உகந்த உண்மை, அன்பு, தியாகம், ஜீவகாருண்யம், தொண்டுள்ளம், பொறுமை, ஆணவமின்மை உள்ளிட்ட சகல நல் ஒழுக்கங்களையும் கடுமையாய்ப் பின்பற்றி நோன்பிருந்தார்கள்.

இவர்கள் கடவுளைக் கண்டு கொள்ளாவிட்டாலும், கடவுள் இவர்களைக் கண்டுகொண்டார். அதனால்தான் அவர்களுக்கு ஞானமும் வாய்த்தது.சமாதியும் வாய்த்தது. இந்த வழி போற்றுதலுக்குரிய வழி. தாரளமாய் இந்த வழியில் நாம் பயணிக்கலாம்.

நான்காம் வகை ; அன்பான உறவு

‘கடவுளை இவர்கள் நேசிக்கின்றனர், கடவுளும் இவர்களை நேசிக்கின்றார் !’

என்னும் நான்காம் வகை உறவே அன்புவழி உறவு. இருப்பதில் உயர்ந்த உறவு. உத்தமான உறவு.

வள்ளல் பெருமான், பட்டினத்தடிகள், சைவ நாயன்மார்கள், சித்தர்கள் எனப் பலரும் பின்பற்றிய உறவு இது.கடவுள் விரும்பும் அனைத்து நல் ஒழுக்கங்களையும் வைத்திருந்து தவம் செய்து உயர்வடைந்தவர்கள். அதே வேளையில் கடவுளைப் புகழ்ந்து போற்றிப் பாடுவார்கள்.

தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.

’திருநீறு வர வைக்கிறேன். எலுமிச்சம்பழம் வர வைக்கிறேன்’ என்பதுபோல் அல்ப சித்துக்களைக் காட்டிப் பாமரர்களை ஏமாற்ற மாட்டார்கள்.

’என்னிடம் பணம் கட்டிப் பாதபூஜை செய்தால் வினைகள் தீர்ந்துவிடும்’ என்பதுபோல் பொய் பிரகடனம் செய்ய மாட்டார்கள்

’தான் மட்டுமே குரு. நீ எந்நாளும் சீடன்தான் !’ என்பது போல் அடிமை வம்சத்தை உருவாக்க மாட்டார்கள்.

‘நின் கடன் அடியேனையும் தாங்குதல். என் கடன் பணி செய்து கிடப்பதே!’ என்ற அப்பர் சுவாமிகளின் திருவாக்குப்போல் அடக்கமாய், எளிமையாய், மறைவாய், தனியாய் வாழ்வார்கள்.

இருப்பதில் உயர்ந்த நிலையை எய்தும் வல்லமை இவர்களுக்கே உண்டு. இவர்களை பின்பற்றுவோர் தாரளமாய் கடைத்தேறலாம்

இந்த நால்வரில் நீங்கள் யார் ?

நீங்கள் யார் என்பதையும், எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உணருங்கள். யாராக வேண்டுமானாலும் மாற உங்களுக்கு உரிமையும் தகுதியும் சுதந்திரமும் உண்டு முடிவு செய்யுங்கள் செயல்படுங்கள்.

நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களின் நூலில் இருந்து

19 comments:

 1. நல்ல தெளிவான ஆன்மீகக் கருத்துக்கள்.இது பரவட்டும்.நன்றி.

  ReplyDelete
 2. //தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.
  //

  அப்படி யாருங்க இருக்கிறார்கள் ?

  ReplyDelete
 3. அருமையான விளக்கம்.

  ReplyDelete
 4. //யாராக வேண்டுமானாலும் மாற உங்களுக்கு உரிமையும் தகுதியும் சுதந்திரமும் உண்டு முடிவு செய்யுங்கள் செயல்படுங்கள்.
  //

  யாரும் யாராகவும் மாற முடியாது, அவரவர் உண்மை நிலையை அடைந்தால், தெளிந்தால் அதுவே பெரிய விசயம் தான். 'உள்ளே' தொலைந்து போய் 'வெளியே' தேடுகிறான் மனிதன்

  ReplyDelete
 5. நல்ல தொகுப்பு, தெளிவாக எடுத்துக் கூறியிருக்கீங்க.
  தற்காலத்தில் ஆன்மீகத்தை மக்களிடம் தவறான முறையில் திரித்துக் கூறி விச விதைகளை விதைத்து லாபம் சம்பாதிக்கும் 'போ(தை)த'கர்கள் நிரைந்துள்ளனர்.

  ReplyDelete
 6. \\//தன்னை கடவுள் என்றும், அவதாரம் என்றும் பிரகடனம் செய்ய மாட்டார்கள். தன்னைச் சுற்றி புகழ்வதற்கென்று கூட்டம் கூட்ட மாட்டார்கள். மக்களோடு மக்களாய் எளிமையாய் வாழ்வார்கள்.
  //

  அப்படி யாருங்க இருக்கிறார்கள் ?\\

  இருக்கிறார்கள். பல்வேறு இடங்களில் எந்த பிரபலமும் இல்லாமல். அதை உறுதி செய்ய, சரி பார்க்கும் தகுதியை நமக்குள் வளர்த்துக்கொண்டு தேடவேண்டும். கோவியாரே

  \\யாரும் யாராகவும் மாற முடியாது,\\
  யாரக என்பதை எந்தவகையினராகவும் என பொருள் கொள்ளவும்.

  நன்றி வாழ்த்துக்கள்..,

  ReplyDelete
 7. \\ஷண்முகப்ரியன் said...

  நல்ல தெளிவான ஆன்மீகக் கருத்துக்கள்.இது பரவட்டும்.நன்றி.\\

  நமக்கு சரி எனப்பட்டதை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் முயற்சிதான். கூடவே நானும் தெளிவாகத்தான் இது.

  நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

  ReplyDelete
 8. குடுகுடுப்பையின் பணியாகவே நாம் இதை மேற்கொண்டிருக்கிறோம்.

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 9. \\ ஆ.முத்துராமலிங்கம் - நல்ல தொகுப்பு, தெளிவாக எடுத்துக் கூறியிருக்கீங்க.
  தற்காலத்தில் ஆன்மீகத்தை மக்களிடம் தவறான முறையில் திரித்துக் கூறி விச விதைகளை விதைத்து லாபம் சம்பாதிக்கும் 'போ(தை)த'கர்கள் நிரைந்துள்ளனர்.\\

  அவர்களையும் நாம் வெறுப்பின்றியே அணுகுகிறோம். அவர்கள் செயலுக்கு உரிய விளைவை இறைநியதி வழங்கும். நாம் கவலைப்படவேண்டியதில்லை.
  முடிந்தால் அவர்களிடம் நாம் கற்கவேண்டியது என்ன என்று பார்க்கிறோம்.

  நன்றியும் வாழ்த்துக்களும்...

  ReplyDelete
 10. இப்போ தெரியல. போகப் போகத் தெரியும்.
  //இந்த நால்வரில் நீங்கள் யார் ?

  ReplyDelete
 11. நல்ல பதிவு, இதை படித்தவுடன் இந்த மூன்று கேள்விகள் மனதில் தோன்றியது, வாழ்கையில் மிகவும் சாதாரனமான அந்த கேள்விகள், ...நீ எங்கிருந்து வந்தாய், ?என்ன செய்து கொண்டிருக்கிறாய்,? எங்கே போகிறாய். ? ...

  வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு விடைகளை தரும் கேள்விகள்

  ReplyDelete
 12. தெளிவாக புரியவச்சிடீங்க சிவா சார். என்னை பொறுத்தவரை நான்காம் வகை என்பது ஒரு உன்னதமான நிலை.

  ReplyDelete
 13. எங்கிருந்து வந்தாய் ?
  என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
  எங்கே போகிறாய் ?

  மேற்கண்ட கேள்விகளை மக்களிடம் கேட்டு அதற்கு பரமாத்மா, ஜீவாத்மா என்று பதிலும் சொல்லும் ஆன்மீக வியாபாரிகள் மக்களைக் குழப்பும் செயல்தான் இது.

  எங்கிருந்து வந்தாய் என்று உங்களுக்கு நன்கு தெரியும். என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதும் தெரியும். எங்கே போகிறாய் என்பதும் தெரியும்.

  கடவுள் இருக்கிறாரா காட்டு பார்க்கலாம் என்றால் காற்று இருப்பதை உணாருகிறாய் அல்லவா ? அதைக் காட்டு என்று எதிர்க் கேள்வி கேட்டு மடக்குவார்கள் வியாபாரிகள்.

  கடவுள் யார் தெரியுமா ? அது நீங்கள் தான். மனிதனே கடவுள் !!!! அவனின் அன்பே கடவுள்
  !!!!

  வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு பதில்களை தரும் கேள்வி ஒன்று இருக்குமென்றால் அக் கேள்வி நல்ல கேள்வியாக இருக்க முடியாது

  ReplyDelete
 14. தமிழ்நெஞ்சம்
  \\இப்போ தெரியல. போகப் போகத் தெரியும்.
  //இந்த நால்வரில் நீங்கள் யார் ?\\

  என்னை வைத்து காமெடி, கீமடி பண்ணலையே (தமாசுக்கு)
  கொஞ்சம் பயமாத்தான் இருக்கு..!!! :))

  ReplyDelete
 15. அது ஒரு கனாக் காலம்
  \\...நீ எங்கிருந்து வந்தாய், ?என்ன செய்து கொண்டிருக்கிறாய்,? எங்கே போகிறாய். ? ...

  வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு விடைகளை தரும் கேள்விகள்\\
  தத்துவமே இந்த கேள்விகளில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

  ReplyDelete
 16. விஷ்ணு.
  தெளிவாக புரியவச்சிடீங்க சிவா சார். என்னை பொறுத்தவரை நான்காம் வகை என்பது ஒரு உன்னதமான நிலை

  நன்றி; கடவுளைக் கண்டோம்! காட்டவும் வல்லோம்! ஞானதேவபாரதி சுவாமிகள் அவர்களுக்கே உரித்தாகட்டும் விஷ்ணு

  ReplyDelete
 17. \\எங்கிருந்து வந்தாய் என்று உங்களுக்கு நன்கு தெரியும். என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதும் தெரியும். எங்கே போகிறாய் என்பதும் தெரியும்.\\

  தாங்கள் சொல்வது உலகியல் வாழ்வைப்பற்றி, உடலைப் பற்றி என நினைக்கிறேன். சரியா!!

  \\மனிதனே கடவுள் !!!அவனின் அன்பே கடவுள் \\
  அன்பே சிவம் என்கிறீர்கள் சரிதான்!!!


  \\வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறு பதில்களை தரும் கேள்வி ஒன்று இருக்குமென்றால் அக் கேள்வி நல்ல கேள்வியாக இருக்க முடியாது\\

  என்றுமே கேள்வியில் நல்லது கெட்டது கிடையாது.!
  பதிலில் வேண்டுமானால் தவறு இருக்கலாம். நண்பர்
  தங்கவேல் மாணிக்கம் அவர்களே!

  தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
  முதல் followerக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. 1)உலகியல் வாழ்வினைப் பற்றிதான் எழுதி இருக்கிறேன்.

  2)அன்பே கடவுள்

  3) புரிந்து கொண்டேன்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)