"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, April 3, 2009

ஊட்டி போலாம் வர்றீங்களா?

நண்பர்களின் அனுபவங்கள், கருத்துகள், எண்ணங்களை பதிவுலகம் மூலமாக பகிர்ந்து கொள்கிறோம்.

அந்த வகையில் வாழ்க்கைப் பாதையில் முன்னேற்றமடைய கற்றது கை மண்ணளவு என்கிற உணர்வில் எங்கு, என்ன கிடைக்கும் அது சரியானதா? என்ற தேடுதலோடு இருக்கிறோம்.

அதில் ஒன்றுதான் கவனகர் திருக்குறள் இராம கனகசுப்புரத்தினம் அவர்களின் குன்னூர் மூன்று நாள் பயிற்சிப் பட்டறை.

இவருடைய நிகழ்ச்சிகளில் ஏற்கனவே சில முறை பங்கெடுத்துள்ளேன். இதில் நான் பங்கேற்பாளன் மட்டுமே.

உடல்நலம், மனநலம், பொருள்வளம் இவற்றில் நாம் முன்னேற வேண்டிய வழிகளும், அதில் உள்ள தடைகளை நீக்குவது பற்றியும் பயிற்சி (சிறப்பாக) இருக்கும்.

அழைப்பை இணைத்துள்ளேன். வாய்ப்பு உள்ளவர்கள் வரலாம்.

இது உங்கள் தகவலுக்காக மட்டுமே.

முதல் பக்கம் :இரண்டாவது பக்கம் :

10 comments:

கோவி.கண்ணன் said...

நண்பர்கள் குடும்பத்தினருடன் குடும்பமாக இணைந்து சென்று வாருங்கள், வாழ்த்துகள்

அறிவே தெய்வம் said...

அப்படியே ஆகட்டும்..

நன்றி

பழமைபேசி said...

நல்லபடியா போய்ட்டு வாங்க...அப்படியே எங்க ஊரை(கோவை)யும் சுத்திப் பாருங்க...

விஷ்ணு. said...

தவகல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி.

அறிவே தெய்வம் said...

பழமைபேசி said...

மருதமலை, பேரூர், வெள்ளியங்கிரி நாம் அவ்வப்போது போய் வருவது உண்டு. திருப்பூரில் இருந்து பக்கம்தானே...

வாழ்த்துக்கள்..

கடைக்குட்டி said...

கவனகரை நான் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் என் பள்ளியில் பார்த்து இருக்கிறேன்... யப்பப்பா!!! என்ன ஒரு நினைவாற்றல்.. முதுகில் எத்தனை முறை தட்டுகிறார்கள்.. கரும் பலகையில் எத்துனை முறை எழுதுகிறார்கள்.. இதற்கு நடுவில் எந்த திருக்குறள் கேட்டாலும் சொல்லும் லாவகம்.. (அவர் செய்த பிற விஷயங்கள் மறந்து விட்டன.. அவ்ளோ தாங்க நம்ம நியாபக சக்தி..)

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால்.. வாய்ப்பு கிடைத்த அனைவரும் கண்டிப்பாக செல்லவும்..

அறிவே தெய்வம் said...

கடைக்குட்டி --நீங்கள் பார்த்தது வெறும் நினைவாற்றல் திறன் மட்டுமே..

வாழ்வியல் உண்மைகள், பிரச்சினைகளை சந்தித்து
வெற்றி பெறும் வழிகளை அறியலாம். நிறைய தெளிவுகள் கிடைக்கும்..

thevanmayam said...

கவனகர் பட்டறை பயனுற வாழ்த்துக்கள்!!

thevanmayam said...

16 கவனகரா?
நம்பமுடியவில்லை!!

அறிவே தெய்வம் said...

பதினாறு கவனகம் அவரது திறமைகளில் ஒரு சதவிகிதம் மட்டுமே,

பயிற்சி பட்டறையில் பதின்கவனகம் இருக்காது.
ஆன்மீகம் என்பது என்ன, வாழ்வில் நடைமுறைப்
படுத்துவது எப்படி என்ற அடிப்படைகளை முழுமையாக
உணர்த்துவதாக இருக்கும்.