"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, April 18, 2009

ஸ்வாமி ஓம்காரும்.... எலி ஆராய்ச்சியும்.....

ஒரு விஞ்ஞானி, எலிகளை ஆராய்ச்சி செய்பவர். தன் ஆராய்ச்சிக்காக பல எலிகளை வைத்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

எலிகளை மனிதன் தன் கட்டளைப்படி கேட்கச் செய்யமுடியும் என தீவீரமாக நம்பினார். அது சம்பந்தமாக அவருடைய ஆய்வின் போக்கு அமைந்திருந்தது.

முதலில் அதை உணவு விசயத்தில் பழக்க முடிவு செய்தார். அதற்கு பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பி, எலியை, அந்த கட்டளைக்கு கீழ்படியப் பழக்கினார். ஒன்றும் பலன் இல்லை. அது தன் இஷ்டப்படி, அவ்வப்போது கூண்டை விட்டு வெளியே வருவதும் உள்ளே போவதுமாக இருந்தது.

சரி இது ஆகாது என முடிவு செய்து, உணவு கொடுக்கும் நேரங்களை மாற்றி அமைத்துப் பார்த்தார்.சில சமயங்களில் எலி வந்து உணவை எடுத்துக் கொண்டது. சில சமயங்களில் உணவு சாப்பிடவில்லை.

சரி இதுவும் ஆகாது, என முடிவு செய்து தானியங்கி ஒலி எழுப்பும் மணி ஒன்றை நிறுவினார்.உணவுநேரத்திற்கு முன் மணியை ஒலிக்க செய்தார். மணி சப்தம் கேட்டவுடன் எலிக்கு தவறாமல் உணவு வைத்தார். ஓரிரு நாட்களில் எலி கொஞ்சம் கொஞ்சமாக உணவு எடுத்துக்கொண்டது. பின்னர் தொடர்ந்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

கிட்டதட்ட ஒரு மாத காலம் இதற்கு ஆனது. இறுதியாக தனது ஆராய்ச்சி குறிப்பில் விஞ்ஞானி இவ்வாறு எழுதினார்.

எலி எந்த சப்தத்திற்கும் கீழ்படியாது. மணி சப்தத்திற்கு மட்டுமே கீழ்படியும். இதுவே நான் கண்ட உண்மை என நிறைவு செய்தார்









அன்று இரவு புதிதாக வந்த எலி ஒன்று நமது எலியிடம், என்ன அண்ணே! எப்படி இருக்குது இந்த வாழ்க்கை, விஞ்ஞானி நல்லவரா? எனக் கேட்டது.

அட அத ஏன் கேட்கிற? ஒரு மாசமா இந்த ஆள்கிட்ட நா பட்டபாடு, ! பசிக்கிற நேரத்துக்கு ஒழுங்கா சாப்பாடு வைக்கத்தெரியல. ஒரு வழியா மணி அடித்தவுடன் சாப்பாடு வைக்கிற மாதிரி பழக்கறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்து போச்சு போ! என்றது.

நண்பர்களே பலசமயங்களிலும் நாம் எலியாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ இருக்கிறோம்.

உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புரிந்து கொள்வதிலும் இந்த நிலைதான் இருக்கிறது.

சரி இதற்கும் ஓம்காருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இப்போதைக்கு நான் எலி, ஓம்கார் விஞ்ஞானி

மீண்டும் அவசியம் சந்திப்போம்.

அடுத்த இடுகையின் தலைப்பு

உலகின் ”மோச”மான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)


10 comments:

  1. //உலகத்தை நாம் புரிந்து கொள்வதும், உலகம் நம்மை புரிந்து கொள்வதிலும் இந்த நிலைதான் இருக்கிறது. //

    அதுக்குதானே எந்த வழியிலாவது புருஞ்சிக்கலாமுன்னு பாத்தா எந்த வழியில போகனுமுன்னு கூட புரிஞ்சிக்க முடியல.

    ReplyDelete
  2. கொட்டும் மழை, கும்மிருட்டில் நடப்பவருக்கு எது துணை? மின்னல் தான். அதுபோல் போகும் பாதை
    உரிய சமயத்தில் இறையருளால் காட்டப்படும். அதுவரை காத்திருங்கள்...

    ReplyDelete
  3. //உலகின் மோசமான வியாபாரம் (ஜோதிடம் அல்ல)//


    ஜோதிடத்தைப் பற்றி புத்தகம் எழுதுவதுதான் இப்போது மோசமான வியாபாரம்.அதுவும் பழைய புத்தகங்களிருந்து காப்பி செய்து ஏதோ தானே சொந்தமாக கண்டுபிடித்தது மாதிரி சிலர் எழுதுவதைத்தானே கூறுகிறீர்கள்.

    ReplyDelete
  4. ராவணன் ..,

    ஜோதிடத்தை பற்றிய அல்ல, யோகத்தைப்
    பற்றி நண்பர் ஓம்கார் அவர்களின் இடுகைக்கு மாற்றுக்
    கருத்து.

    (உங்கள் பெயர் கூட ஒரு இடத்தில் வரலாம்..)

    வாழ்த்துக்கள்...,

    ReplyDelete
  5. நல்ல பதிவு அறிவேதெய்வம் அவர்களே.....
    இங்கே ஜோதிடம் பற்றி நான் கொஞ்சம் எழுதியது....
    http://blogintamil.blogspot.com/2009/03/blog-post_20.html

    ReplyDelete
  6. ஏற்கனவே படித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறேன்.

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. எனக்குத் தெரிந்து ஓம்கார் சோதிடத்திற்கு எதிராகவோ, கண்மூடித்தனமான ஜோதிட நம்பிக்கை ஆதரவாகவோ எழுதியது இல்லை, யோகத்தின் பெயரில் நடக்கும் கார்ப்ரேட் வணிகத்தைத் தான் குறை கூறினார்.

    உங்கள் கருத்தை நீங்கள் துணிந்து எழுதுகிறீர்கள் என்ற வகையில் எடுத்துக் கொள்கிறேன்.

    மற்றபடி சோதிடம் உண்மையா பொய்யா என்ற வாதங்களில் நான் எப்போதும் சோதிடம் தேவையற்றது என்பதாக மட்டுமே சொல்லுகிறேன். ஏனெனில் உண்மையா பொய்யா என்ற ஆராயும் போது அது பற்றி ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான நேரம் இருந்தாலும் ஆர்வம் இல்லை. ஆனால் சோதிடம் பார்பது தேவையற்றது என்பது என்கருத்து.

    இரயில் தாமதமாக வந்தாலும் பயணம் செய்பவர்கள் காத்திருந்து தானே சொல்ல வேண்டும் :)

    ReplyDelete
  8. \\யோகத்தின் பெயரில் நடக்கும் கார்ப்ரேட் வணிகத்தைத் தான் குறை கூறினார்.\\

    வணிகம் என்பதை ஓரளவு ஏற்றுக்கொள்கிறேன்.
    வணிகத்தை எதற்கு குறை சொல்லவேண்டும்?

    யார் ஒருவரும், தான் செய்யும் செயல் தனக்கு சரி
    எனப்படுவதால் மட்டுமே செய்கின்றனர். அதை நாம்
    மாற்றுக்கருத்தோடு அணுகலாமே தவிர குறை கூறுதல் கூடாது. அதற்குமுன் நாம் சரியா என்று
    சரிபார்த்துக்கொள்ளவேண்டும். ஓம்கார் இதிலிருந்து
    சற்று விலகிவிட்டார் என்பதே என் நிலைப்பாடு.
    நாளை சந்திப்போம்..

    \\ஆனால் சோதிடம் பார்பது தேவையற்றது என்பது என்கருத்து.\\

    என் கருத்தும் கிட்டதட்ட அதேதான்..!

    ReplyDelete
  9. உண்மையா பொய்யா என்ற ஆராயும் போது அது பற்றி ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும்//

    Mmmmm ஆனால் சொல்பவர்களைப் பற்றி நன்றாகவே உணர முடியும்???????????

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)