"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 14, 2009

மனநல காப்பகமும் ...அரசியல்வாதியும்...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் அருகே ஊத்துக்குளி ரோடில் உள்ள S.பெரியபாளையம் ஊரில் அமைந்துள்ள ’கருணை இல்லம்’அமைப்பிற்கு சென்றிருந்தோம்.

அங்கே உடல் ஊனமுற்றவர்,மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் என மொத்தம் 72 நபர்கள் தங்கவைத்து பராமரிக்கப் படுகின்றனர். அதன் நிறுவனரே நிர்வாகியாக இருக்கிறார். குடும்பமே அந்த சேவையில் ஈடுபட்டு உள்ளது.

காப்பகத்தில் இருக்கும் சூழ்நிலைகள் ரம்யாவின் ஐம்பதாவது பதிவை படித்து புரிந்து கொள்ளுங்கள்.

நான் சில காப்பகங்களுக்கு குழந்தைகளின் பிறந்தநாட்களை முன்னிட்டு ஒருநாள் செலவினை அன்போடு வழங்கிவருவது வழக்கம். நான் பார்த்தவரை ஓரளவிற்கு எல்லா இல்லங்களுமே அருள்கொடையாளர்களின் நன்கொடைகளால் நன்கு பராமரிக்கப்பெற்று இருந்தன.

விசயமே இனிமேல்தான்...

ஆனால் இந்த கருணைஇல்லமோ தகுந்த விளம்பரம் இல்லாததாலோ என்னவோ எளிமையாகத்தான் இருந்தது. இடப் பரப்பளவு சுமார் இரண்டரை ஏக்கர். நிறுவனர் வேலுச்சாமியின் பூர்வீக நிலம். முழுமையாக இதற்கென ஒதுக்கிவிட்டார். அதனுடைய இன்றைய மதிப்பு சுமாராக 2 கோடி இருக்கலாம்.

உள்ளூர் பஞ்சாயத்து முக்கிய பொறுப்பில் உள்ள நபரின் உடமையாக்கப்பட்ட நிலம், இந்த காப்பகத்திற்கு எதிரே உள்ளது. அதை வாங்க வருபவர்கள், எதிரே காப்பகத்தை பார்த்தவுடன் வாங்க மறுத்து சென்றுவிடுகிறார்களாம். இது ஒரு காரணம்.

நிறுவனருக்கு வாரிசு இல்லாததால் பிற்காலத்தில் இந்த நிலத்தையும் அபகரிக்க எண்ணி தன்னை அந்த காப்பகத்திற்கு தலைவராக நியமிக்க அதிகாரத்தை பயன்படுத்தி வற்புறுத்துகிறாராம். இது மற்றொரு காரணம்.

ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் போட்டிருக்கிறார்.

இந்த விசயம் CM தாத்தா வரை விசயம் போயும்(!?!!) இன்னும் காப்பகத்திற்கு விடிவு பிறக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக குடிதண்ணீர் சப்ளை தரப்படவில்லை. விளைவு தினமும் (ரூபாய் 200 க்கு) விலைக்கு குடிதண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஒரு வார கால தண்ணீர் செலவைக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத்துணைவி வாங்கிவந்த அரிசி மூட்டையையும் கொடுத்துவிட்டு, அவரோடு பேசிக் கொண்டு இருக்கும்போது

”தண்ணீருக்கு இந்த கஷ்டப்படவேண்டியுள்ளதே என்ன செய்யலாம். மீடியா-வின் கவனத்திற்கு கொண்டு போய்விடலாமா?” என்றேன்.

அதற்கு அவர் ”வேண்டாம். இப்பொழுதே மிகுந்த எதிர்ப்பை
சமாளித்து கொண்டு இருக்கிறேன். அது இன்னும் அதிகமாகிவிடும்.
காப்பக பராமரிப்புக்கு பொருளோ, பணமோ நண்பர்களிடம் சொல்லி
உதவுங்கள். அதுவே போதுமானது”.என்றார்.

பாருங்களேன்.. நம் அரசியல்வாதிகளின் லட்சணத்தை

உதவ மனமில்லாவிட்டாலும், உபத்திரவம் பண்ணாமல் இருக்கலாம் அல்லவா!!

சரி இந்த விஷயத்தில் நாம் முடிந்தால் உதவி செய்யலாமே..பொதுவாக காப்பகங்களுக்கு உதவுவது சிறப்பு என்றாலும், அதோடு சேவை மனப்பான்மையோடு சொத்து முழுவதையும் அர்ப்பணித்து, அதிலேயே சேவையும் ஆற்றுகிற ஒரு அன்புள்ளம் கொண்ட நபருக்கு அரசியல் எதிர்ப்பையும் சந்திக்கவேண்டிய அவலம்,கொடுமை நேர்ந்திருக்கிறது.

அவர் தேவையான மனவலிமை பெற பிரார்த்திப்பதோடு பொருளோ, பணமோ முடிந்தவரை உதவி செய்வோமே...பதிவர்களால் ஒரு நன்மை நடக்கட்டுமே...

தொடர்புக்கு..

கருணை இல்லம்
பதிவு எண் 18..2003
Dr.K.வேலுச்சாமி M.com.,M.A.,M.Lit.,
S.பெரியபாளையம்,
ஊத்துக்குளி ரோடு
திருப்பூர்-641607

தொலைபேசி:0421-291887. 0421-6541998

நன்றி

4 comments:

 1. //நான் சில காப்பகங்களுக்கு குழந்தைகளின் பிறந்தநாட்களை முன்னிட்டு ஒருநாள் செலவினை அன்போடு வழங்கிவருவது வழக்கம். நான் பார்த்தவரை ஓரளவிற்கு எல்லா இல்லங்களுமே அருள்கொடையாளர்களின் நன்கொடைகளால் நன்கு பராமரிக்கப்பெற்று இருந்தன//

  நீங்களும் அரசியல் பற்றிப் பேசுவிங்களோன்னு வியப்போடு வந்தேன். நல்ல பகிர்வை தத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் !

  ReplyDelete
 2. \\நீங்களும் அரசியல் பற்றிப் பேசுவிங்களோன்னு வியப்போடு வந்தேன். நல்ல பகிர்வை தத்திருக்கிறீர்கள்\\

  கட்சிகளின் அரசியல் எனக்கு புரியாத ஒன்று.
  இன்றைய அரசியலை ஒரு தொழிலாகத்தான்
  பார்க்கிறேன்.

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. இவங்க எப்பவுமே இப்படித்தான்.

  //அரசியல் எதிர்ப்பையும் சந்திக்கவேண்டிய அவலம்

  ReplyDelete
 4. கருத்துக்கு நன்றி தமிழ்நெஞ்சம்

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)