"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, April 1, 2009

அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.

அடுத்த வாரம் கடைசித் தேதி --பணம் கட்ட வேண்டும்.

நாளை கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்.

இன்று கடைசித் தேதி -- பணம் கட்ட வேண்டும்

இது நம் வாழ்வில் பொதுவாக நடைபெறும் சாதரண நிகழ்ச்சியே..

டெலிபோன் பில், கரண்ட் பில், பள்ளிக் கட்டணம் இது போல பல கட்டணங்கள், கையில் பணம் இருந்தும், சரியான நேரத்திற்க்கு முன் கட்ட முடியாமல் போயிருக்கும்.

இவ்விதமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்,நாம் ஒவ்வொரு விதமாக நடக்கிறோம்.

அவசரமில்லாத முக்கிய வேலைகளை தள்ளிப் போட்டால்..
பின்னர் அதுவே அவசரமான முக்கிய வேலையாகிறது.


அதை மிகுந்த மன உளைச்சலோடு, அதிக பொருட்செலவில், அதிக நேரம் செலவு செய்து சமாளிக்க வேண்டியிருக்கிறது.


அதுமட்டுமல்ல.. சூழ்நிலைகளால் நாம் பலவீனம் அடைய அடைய....

கோபம், பயம், ஆத்திரம், கவலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படுகிறோம். இதனால் நாம் செயல்படும் திறன் மங்கிவிடுகிறது. இன்னும் சிக்கல் அதிகமாகிறது.

உடல்நலம், பெற்றோர்நலம், குழந்தைகள் நலம்,கல்வி, நடத்தை, வாகனப் பராமரிப்பு, கடன், கட்டணங்கள் போன்ற விசயங்களுக்கு அவ்வப்போது உரிய முக்கியத்துவம் கொடுத்தால் அவை இயல்பான, இனிமையான வேலையாகிவிடும்.

நான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன்....

குறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்றை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே?

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)

12 comments:

  1. உண்மை உண்மை முற்றிலும் உண்மை.

    //குறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்றை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே? //

    நிச்சயம் அவசியம்.

    //அவசரமில்லாத முக்கிய வேலைகளை தள்ளிப் போட்டால்..
    பின்னர் அதுவே அவசரமான முக்கிய வேலையாகிறது.

    அதை மிகுந்த மன உளைச்சலோடு, அதிக பொருட்செலவில், அதிக நேரம் செலவு செய்து சமாளிக்க வேண்டியிருக்கிறது //

    அது என்னவோ உண்மை தான். ஒவ்வொறு இந்த மாதமும் சரியாக அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் வரத்தான் செய்கிறது.ஆனால் வர வர மாமியார் கழுத போல தேஞ்சாலாம் போல இரண்டு நாள் ஒழுங்க இருந்தாலும் மூணாவது நாளு காற்று போன பாலுன் மாதிரி போய் விடுகிறது என் எண்னங்கள். எதாவது பயிற்சி இருந்தா சொல்லுங்கள். நானும் பூஜ்யமா மாறனும்ல.

    ReplyDelete
  2. ரொம்ப சரியாச் சொன்னீங்க நண்பா.. என்கிட்ட எனக்கே பிடிக்காத ஒரு குணம்.. எல்லாத்தையும் கடைசி நேரம் வரைக்கும் தள்ளிப் போடுறது.. மாத்த முயற்சிக்கணும்..

    ReplyDelete
  3. புதுவை சிவா... கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  4. \\வர வர மாமியார் கழுத போல தேஞ்சாலாம் போல இரண்டு நாள் ஒழுங்க இருந்தாலும் மூணாவது நாளு காற்று போன பாலுன் மாதிரி போய் விடுகிறது என் எண்னங்கள்.\\

    இதுதான் மனித இயல்பு, இதிலிருந்து வெளிவரும்
    தொடர் முயற்சிதான் இதுபோன்ற சிந்தனைகள்..


    \\எதாவது பயிற்சி இருந்தா சொல்லுங்கள். நானும் பூஜ்யமா மாறனும்ல.\\

    contact me... arivhedeivam@gmail.com

    ReplyDelete
  5. \\எல்லாத்தையும் கடைசி நேரம் வரைக்கும் தள்ளிப் போடுறது.. மாத்த முயற்சிக்கணும்.\\

    இந்த சிந்தனை வந்துவிட்டாலே படிப்படியாக
    மாறிவிடலாம் கார்த்திகைப் பாண்டியரே..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சூப்பர் கருத்து நண்பா...

    நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சு
    நானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,
    படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)
    http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_8206.html
    http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_3452.html

    ReplyDelete
  7. suresh--ஏற்கனவே போட்டாச்சு...

    rithani

    ReplyDelete
  8. //குறிக்கோளை அடைய .. செய்ய வேண்டியவற்றை, உடனுக்குடன் செய்யும் வாழ்க்கை முறையும் அவசியந்தானே?//

    நல்ல பதிவு நண்பா.
    என்னைப் பொறுத்தவரையில் உடனுக்குடன் செய்ய வேண்டும் என்பதை விட சரியான திட்டமிடல் அவசியம் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  9. \\உடனுக்குடன் செய்ய வேண்டும் என்பதை விட சரியான திட்டமிடல் அவசியம் என்று கருதுகிறேன்.\\


    திட்டமிடல் அடிப்படையான விசயம், அதன் பின் இலக்கை நோக்கி செயல்படுகையில் எங்கெங்கு நாம் இடற வாய்ப்பு உள்ளது என்ற நோக்கில் கட்டுரையை அமைத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. நல்ல தகவல்.

    பணம் கிடைப்பதாக உடனேயே செய்துவிடுவோம், பணத்தை செலுத்துவதாக இருந்தால் வேற வழியே இல்லை என்றாலும் யோசித்து யோசித்து காலம் கடத்திவிடுவோம்.

    இங்கே சிங்கையில் நம் வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தேதிகளில் மாதாந்திர கட்டணங்களை (நம் அனுமதித்திருந்தால்) அதுவாகவே செலுத்திவிடும்.

    ReplyDelete
  11. நல்ல தகவல்.

    பணம் கிடைப்பதாக *என்றால்* (மேலே பின்னூட்டத்தில் கவனக் குறைவால் விடுபட்டது) உடனேயே செய்துவிடுவோம், பணத்தை செலுத்துவதாக இருந்தால் வேற வழியே இல்லை என்றாலும் யோசித்து யோசித்து காலம் கடத்திவிடுவோம்.

    இங்கே சிங்கையில் நம் வங்கிக் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தேதிகளில் மாதாந்திர கட்டணங்களை (நம் அனுமதித்திருந்தால்) அதுவாகவே செலுத்திவிடும்.

    ReplyDelete
  12. \\பணம் கிடைப்பதாக உடனேயே செய்துவிடுவோம், பணத்தை செலுத்துவதாக இருந்தால் வேற வழியே இல்லை என்றாலும் யோசித்து யோசித்து காலம் கடத்திவிடுவோம்.\\

    :)
    மனிதனின் இயல்பே அதுதானே..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)