"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, October 6, 2011

திருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்

திருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில் சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங்.
அதற்கடுத்த நாள் 7ந்தேதி ஜீன் 2011, காலை
பக்தாபூர்
  இங்கு புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். இந்த நகரத்தை சுற்றி வர நேரம் போதவில்லை. எல்லா இடங்களிலும் மரங்களினால் ஆன சிற்பங்கள் வேலைப்பாடுகள் என பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படவில்லை. புகைப்படங்களில் சிறந்தவை என தேர்ந்தெடுப்பதில் மலைபே ஏற்பட்டது. அதனால் இந்த புகைப்படம் ஹிஹி...இதன்பின் பெளத்தர் கோவில் சென்று வந்தோம்..எந்நேரமும் தனியறையில் தீபங்கள் எரிந்து கொண்டே இருந்தன. அதை இரு வெளிநாட்டவர் தொடர்ந்து பராமரித்துக்கொண்டே இருந்தனர். கோவிலைச் சுற்றி வந்தபின் வெளியே நிறைய புறாக்கள் இருந்தன. அவற்றையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.மதிய உணவிற்குப்பின் சயனகோலத்தில்  விஷ்ணு இருந்த தலத்திற்கு சென்றோம்.
அடுத்ததாக சற்று உயரமான மலை ஒன்றில் இருந்த சுயம்பு புத்தா கோவில் தரிசனம் செய்தோம். இங்கு கற்களால் ஆன நிறைய வடிவங்கள் இருந்தன. இந்த கோவிலும் கண்டிப்பாக பார்த்து தரிசனம் செய்ய வேண்டியதே. இதன்பின் ஓட்டலுக்கு திரும்பி வந்தோம்.மேற்கண்டவிதமாக திருக்கைலை யாத்திரையில் ஒருபகுதியாக நேபாள் திருத்தலங்களுக்கும் சென்று வரவேண்டி இருந்தது.

இதுவரை இந்தத் திருக்கைலையாத்திரை தொடரை எழுத வாய்ப்பு அளித்த கையிலைநாதரை வணங்கியும், நீண்ட தொடராக இருப்பினும் கூடவே வந்து படித்தும், பாராட்டியும், ஊக்க்ப்படுத்திய என் நெருங்கிய நட்புகளுக்கு நன்றியறிதலையும் அன்பையும் தெரிவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவசிவசிவ ஓம்

நிகழ்காலத்தில் சிவா
Post a Comment