"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, October 25, 2011

திருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு

திருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.

நான் தற்போதுதான் திருக்கைலை யாத்திரை 2011 தொடர் எழுதியிருந்தேன். அப்போது பலரும் என்னிடம் தகுந்த பயண ஏற்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தக் கேட்டிருந்தார்கள்.

நான் சென்ற ஏஜன்சியில் எனக்கு சில அதிருப்திகள் இருந்ததால், அதை அறிமுகப்படுத்தாமல் விட்டுவிட்டேன். ஏற்கனவே 2010 ல் இமயமலை கேதார்நாத்,கங்கோத்ரி பயணம் செய்தபோது,  பயண ஏற்பாடுகளைச் செய்த ஏற்பாட்டாளார்கள் தற்போது திருக்கைலை யாத்திரை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இந்த திருக்கைலை யாத்திரையில் தமிழ்நாட்டு உணவு முறைகள் உத்தரவாதம் உண்டு. திருக்கைலை வலம் விருப்பப்படி நடந்தோ, குதிரையிலோ (செலவு தனி) என்கிற வகையில் சிரமம் இன்றி அமையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. யாத்திரை செல்லும் எண்ணம் உள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.,

தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதாவது ஜுன்15 முதல் ஜீலை 15 க்குள் வரும். சரியான தேதி பின்னர் உறுதி செய்யப்படும். 13 அல்லது 14 நாட்கள் பயணம், சென்னை முதல் காட்மண்ட் வரை விமானம். பின்னர் தரைவழிப்பயணம்.

இதற்கான கட்டணம் ஒரு இலட்சம் வரும். எனக்குத் தெரிந்தவரை நிச்சயம் இந்த தொகை குறைவானதே., 

அங்கு தொடர்பு கொள்பவர்கள் எனக்கு ஒரு மின்னஞ்சல் நகல் அனுப்பி விடுங்கள். தொடர்பு எண்கள் கவனகர் சார்பாக சென்னை,கோவை,ஈரோடு மாநகரங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆவர். இவர்களிடம் தொடர்பு கொள்வதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்படின் கவனகர் அய்யாவுடன் நேரடித் தொடர்பில் சரி செய்ய வசதியாக இருக்கும்.

உங்கள் பயண ஏற்பாடுகளில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் தீர்க்கவும், என் சார்பாக அனுப்பப்பட்டவர்கள் என உறுதிசெய்யவும் வசதியாக இருக்கும்.
அடியேன் 2012 க்கு வருவேனா இல்லையா என்பது என் கையில் இல்லை. திருக்கைலையின் கையில் இருக்கிறது:)

ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்காக இதை தகவலாக பகிர்கிறேன். யாத்திரைக்கான இறையருளும், இறைவிருப்பமும்  உங்களுக்கு கூடிவருமாக என பிரார்த்திக்கிறேன்.,நிகழ்காலத்தில் சிவா

7 comments:

 1. திருக்கைலை யாத்திரை செல்ல விரும்பும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  தங்கள் சேவைக்கு மிக்க நன்றி..

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. நல்ல பதிவு, பலருக்கும் உபயோகமாக இருக்கும், நானும் வர முர்ச்சிக்கிறேன்,,, தீபாவளி வாழ்த்துக்கள்.......

  ReplyDelete
 3. பயனுள்ள தகவல்.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. குடும்பத்தினருக்கு தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. நன்றி. பயனுள்ள தகவல். கவனகர் இமெயில் இருந்தால் தெரிவிக்க முடியுமா?

  ReplyDelete
 6. அருமையான சேவை. நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 7. உங்கள் இமெயில் msuzhi@ymail.comக்கு அனுப்புறீங்களா? நன்றி.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)