"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, July 15, 2010

தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..

தியானம் செய்தால் என்னென்னமோ நடக்கும் என்கிறார்கள். நமக்கோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. , புரியாத மாதிரியும் இருக்கு. தியானம் செய்தா நம் உடலுக்கும், மனசுக்கும் என்ன நன்மை அப்படின்னு கேள்வி வரும்போது இந்த மனசு இருக்கிறதே அது எதையும் நம்ப மாட்டீங்குது :))



அறிவியல்பூர்வமா ஏதேனும் ஆதாரம் சொல்லு, நம்புறேன் அப்படிங்கிது..

கண்ணுக்குத்தெரியும் உடல், கண்ணுக்குத் தெரியாத மனம், அறிவு இவற்றை எது இணைக்கிறது அப்படின்னு பார்த்தோம்னா எந்த சந்தேகம் வேண்டியதில்லை மூளைதான் அது.:))

மனதில் ஏற்படும் மாற்றங்கள் தியானத்தாலும் வந்திருக்கலாம், வேறு காரணங்களினாலும் வந்திருக்கலாம். சாட்சி இல்லை. நிரூபிக்க முடியாது. வேண்டுமானால் நீயும் அனுபவித்துப்பார் என்றுதான் சொல்ல முடியும்.

முறையாக தியானம் செய்தால் மூளையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா, அப்படி ஏற்பட்டால் அறிவியல் மூலம் நிரூபிக்க முடியும் அல்லவா..இது குறித்த அலசல் இது..

மூளையைப்பற்றி பொதுவாக ஆராய்ச்சிகள் பல நடந்திருந்தாலும் குறிப்பாக 1932 ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்கர் ஆல்ட்ரின் மூளையின மின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதை அளந்து காட்டியதற்காக நோபல்பரிசு பெற்றார்.

மூளையினின்று வெளிப்படும் மின்சக்தி அலைகளின் சுழற்சியை அளக்க இயலும்.. (Electroen - cephalograph). இதனை மூளையின் செயல்மின் சுழற்சி அலைகள்’ என சொல்கிறோம். தனது செயல்களின் தன்மை அல்லது தீவிரத்திற்கேற்ப நான்குவிதமான மின் சுழற்சி அலைகள் மூளையினின்று வெளிப்படுத்துகின்றன.

ஆழ்ந்த தூக்கத்தில் மூளை ஒரு நொடிக்கு ஒன்றிலிருந்து நான்குவரை மின் ஆற்றல் அலைகளை வெளிப்படுத்துகிறது. இது டெல்டா அலைகள் (Delta waves) அலைகள் என அழைக்கப்படுகின்றது.

ஆழ்ந்து தூங்க ஆரம்பிக்கும்போது நான்கு முதல் ஏழுவரை மின்சக்தி அலைகள் வெளிப்படுகின்றன. இது தீட்டா (Theta waves) என அழைக்கப்படுகின்றன.

உடலையும், மனதையும் தளரச் செய்யும்போது மூளையின் மின் அலை அளவுகள் ஏழு முதல் பதினாலு வரை இருக்கும். இதை ஆல்ஃபா அலைகள் (Alpha waves ) என அழைக்கிறோம் எழுமுதல் பதினாலு வரையிலான அலை அளவில் இடது மூளையும் வலது மூளையும் சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றுகின்றன. அருளியலும், பொருளியலும் நன்கு இணைந்து சம அளவில் இருக்கும். எண்பதுகோடி எண்ணங்களை நினைந்து எண்ணும் மனம் அமைதியுறும். பிரபஞ்ச ஆற்றல் எனும் கணினியுடன் நமது மூளையும் மனமும் தொடர்பு கொள்ள இயலும். தியான வாழ்க்கை அமையும். வாடும் பயிரைக்கண்டபோதெல்லாம் வாடும் மனநிலையை உணரமுடியும். வசையிலாது, இசைபாடும் வாழ்வு மிளிரும். படைப்பாக்கம் ஆல்ஃபா நிலையிலேயே சிறப்பாக நடைபெறும். ஆழ்மனத்தொடர்வு கிடைக்கும்.

விழித்திருக்கும் நேரமெல்லாம், நாம் உலகியல் நடப்புகளை மேற்கொள்ளும்போது நமது மூளையின் மின் அலைகள் ஒரு நொடிக்கு பதினாலிலிருந்து இருபத்தி ஒன்று வரை இருக்கும். இதனை பீட்டா அலைகள் (Beta waves) என அழைக்கிறோம். பதினாலிலிருந்து இருபத்திஒன்றுவரை இயல்பாக மனிதர் வாழும் வாழ்க்கை

அதேசமயம் இருபத்திஒன்றுக்கு மேல் மூளையின் அலைகள் போனால் அவ்ர்கள் வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக இருக்கும். மன அமைதி இன்றி புலன்வழி சென்று, ஆசையினால் தன்னிலை அழிந்து, உடல், மன நோய்கள் மிகும். அன்பின்றி, பண்பின்றி, சுயநலம் மிகுந்து, அறவழி நாட்டமில்லாது மறவழி சென்று, தனக்காகவே உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்கிற சீழ்பிடித்த எண்னம் தோன்றி, ஈயினும் இழிந்து, நாயினும் கடையனாகி வாழும் வாழ்க்கையாக இருக்கும்.

எனவேதான் மூலையின் அலைகளை நாம் ஏழு முதல் பதினாறு வரை எல்லா நேரமும் இருத்தி வைத்து தவ வாழ்க்கை வாழ முற்படவேண்டும். தவ வாழ்க்கை எனில் வீடுவிட்டு காடுபோய், காய்கனி, இலை புசித்து வாழும் வாழ்க்கை அல்ல. இல்லறத்தை நல்லறமாக வாழும் வாழ்க்கை. புலன்வழி செல்லா வாழ்க்கை. நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டிய வாழ்க்கை. தன்னைத்தான் உணர்ந்து வாழ்தலும், உள்ளுணர்வின் வழி வாழ்தலும் எளிதாகும்.

பீட்டா(14-21), ஆல்பா(7-14),தீட்டா(4-7), டெல்டா (1-4) மூளையில் இந்த அலைச்சுழல் இருக்கும் போது என்னென்ன மனதிலும், வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா !!

இப்போது தீர்மானம் செய்து செயல்படுத்துங்கள். எந்த மனோநிலை தேவை, அதை எப்படிப்பெறுவது என ....இது உங்கள் உரிமை :))

வாழ்த்துகளுடன் நிகழ்காலத்தில் சிவா

8 comments:

  1. எதை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது உபநிஷதங்கள் சொல்லும் உண்மை.

    மனம் எனும் கருவி ஒரு கத்தியைப் போல, நல்லதாக, அல்லதாக இரண்டு வழியிலும் செயல்படக் கூடியது.அதை ஆக்கபூர்வமாகக் கையாள்வது எப்படி என்பது தியானம் ஒன்றினால் தான் முடியும்.

    பரிசோதனைக் கூடங்களில் ஆல்பா பீட்டா காமா என்று எண்ண அலைகளைப் பகுத்தறிந்த விவரங்கள் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்குமே தவிர, அந்த முடிவுகளை வைத்துக் கொண்டு மட்டுமே செய்யக் கூடியது எதுவுமில்லை.

    ReplyDelete
  2. //அந்த முடிவுகளை வைத்துக் கொண்டு மட்டுமே செய்யக் கூடியது எதுவுமில்லை.//

    அந்த நிலைகளில் மனம் எப்படி இருக்கும் என்பது பலபேருக்கும் அறிந்திராத விசயமாகத்தான் இருக்கும்.

    எந்த விளைவு வேண்டுமோ அந்த நிலைக்கு வர என்ன செய்யவேண்டும் என்ற புரிதல் வாசிப்பவருக்கு வரவேண்டும் என்ற சிறு முயற்சிதான் இது நண்பரே

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல

    ReplyDelete
  3. சிவா இது குறித்து கணேசன் என்பவரும் எழுதி உள்ளார். தியானம் என்பதை விட அந்த தியானத்தை நமக்கு கைகூட வைக்க, உண்டாகும் தளர்ச்சி சோர்வுகளை கண்டு கொள்ளாமல் எப்படி மேலேறி வர வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளார்.

    படிப்பதை நடைமுறைப்படுத்தும் தான் நாம் யார் என்பதே நமக்குத் புரியத் தொடங்குகிறது?

    கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளதைப் பாருங்கள். எழுத்தை தவமாக நினைத்து எழுதுகிறார். ஒவ்வொருமுறையும் உங்கள் இடுகையின் வாயிலாகத்தான் எனக்கு வந்து சேர்கிறது.

    ReplyDelete
  4. திரு என்.கணேசன் அவர்களின் எழுத்துகள் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். அதில் விரிவாக அலைச்சுழலைப்பற்றி எழுதி இருக்கிறார்

    http://enganeshan.blogspot.com/2010/04/28.html

    நான் சுருக்கமாக எழுதி இருக்கிறேன்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிஜி

    ReplyDelete
  5. Try many method...breath counting..focusing.. Cannot do meditation... Don't know this stuff....Fed up... This may be a technique to lie people and stay without doing anything... May be good for Jeyendiran and Nithya...

    ReplyDelete
  6. மேற்கண்ட மனோநிலை பற்றி முதலில் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். :))

    இதற்கு தியானம் மட்டுமே தீர்வு என நான் சொல்லவில்லை,
    தியானம் இல்வாழ்க்கையில் இல்லாதவருக்கே என தாங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது ssk

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ssk

    ReplyDelete
  7. நல்ல பதிவு..........வாழ்த்துகள்

    ReplyDelete
  8. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி குரு..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)