"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, August 12, 2009

திருந்திய கலைஞரும், நானும்


சென்னை:""இந்திய அரசியலின் ஜாதகத்தை கணிக்கக் கூடிய அளவில் தி.மு.க., வெகு விரைவில் இடம்பெறும்,'' என முதல்வர் கருணாநிதி கூறினார். தினமலர்-12/08/09

ஜாதகம் பார்க்கும் சோதிடக் கலை நிபுணர்கள் இனி மனமகிழ்வு கொள்ளலாம். சோதிடம் இல்லை, மூடநம்பிக்கை என சொல்லும் 'பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள்' என தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர், சோதிடக்கலையில் ’இந்திய அரசியலின் ஜாதகத்தை’ கணிக்கும் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த போகிறார். அவரை உலகில் அளவில் பாராட்டிய முதல் நபர் என்ற பெருமையும், முடிந்தால் பட்டமும் எனக்கே சேர வேண்டும் என்பதை பின்னாளில் வேறு யாரும் பிரச்சினையாக்காமல் இருக்க இங்கே பதிவு செய்கிறேன்.

இலங்கை தமிழர்களின் ஜாதகத்தை மாற்றி எழுதியபோதே நான் சந்தேகப்பட்டேன். இவர் ஒரு தேர்ந்த சாமர்த்தியமான சோதிடக் கலை நிபுணர் ஆவார் என்று. சரி இனி எதிர்காலத்தில் கழக கண்மணிகள் எல்லாம் சோதிடக்கலையில் தேர்ந்து விடப்போவதால், எதற்கும் தற்சமயம் இத்தொழிலில் உள்ள அனைவரும் ஒன்று கழகத்தில் சேர்ந்து விடுங்கள், அல்லது வேறு தொழில் பார்ப்பது உத்தமம்.

இது குறித்து மேலும் நுட்பங்களை அறிய உள்ளூர் கழக, அல்லது வலையுலக கழக நண்பர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பெரியார் வழி வந்த தொண்டர்களுக்கு என் அனுதாபங்கள். என்ன கலைஞர் இருந்தால் அவ்வப்போது, நெற்றியில் திருநீறு இடுவது மூடப்பழக்கம் என ஒரே நாளில் உலகத்தமிழர்களை எல்லாம் சென்று சேரும்படி கொள்கைகளை பரப்புவார். இனி ….


--அங்கலாய்ப்புடன்

புரியாத பொன்னுச்சாமி

12 comments:

  1. //இலங்கை தமிழர்களின் ஜாதகத்தை மாற்றி எழுதியபோதே நான் சந்தேகப்பட்டேன். இவர் ஒரு தேர்ந்த சாமர்த்தியமான சோதிடக் கலை நிபுணர் ஆவார் என்று. சரி இனி எதிர்காலத்தில் கழக கண்மணிகள் எல்லாம் சோதிடக்கலையில் தேர்ந்து விடப்போவதால், எதற்கும் தற்சமயம் இத்தொழிலில் உள்ள அனைவரும் ஒன்று கழகத்தில் சேர்ந்து விடுங்கள், அல்லது வேறு தொழில் பார்ப்பது உத்தமம்.//

    சூப்பர் !

    ReplyDelete
  2. தலைப்பு திருந்திய நிகழ்காலமும், பதிவர்களும்னு வைச்சா நல்லா இருக்கும்..

    எனக்கு அரசியல் அறிவு கம்மி அதனால் பதிவை பற்றி சொல்ல முடியவில்லை. எதிர்காலத்தில் எனக்கு ஜோதிடத்தில் போட்டி அதிகம் என தெரிகிறது.

    புரியாத பொன்னுச்சாமி இது போல் நிறைய எழுத என் வாழ்த்துக்களும் ஆசியும்.

    ReplyDelete
  3. ஸ்வாமி ஓம்கார்

    \\தலைப்பு திருந்திய நிகழ்காலமும், பதிவர்களும்னு வைச்சா நல்லா இருக்கும்..\\

    சரிதான் ! என்னோட நோக்கத்துக்கே ஆப்பு வைக்கறீங்களே சாமீ, பட்டம் எனக்குத்தான், எனக்குத்தான்


    ”அவரை உலகில் அளவில் பாராட்டிய முதல் நபர் என்ற பெருமையும், முடிந்தால் பட்டமும் எனக்கே சேர வேண்டும்”

    வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் நன்றி
    - புரியாத பொன்னுச்சாமி

    ReplyDelete
  4. \\கோவி.கண்ணன்

    சூப்பர் !\\

    இனம் இனத்தோடு சேரும் (இரு பொருள் கொள்க)
    - புரியாத பொன்னுச்சாமி

    ReplyDelete
  5. சிவாண்ணே!

    செளக்கியமா? நான் நல்லாருக்கேன்.

    - உங்க பதிவு புரியாத பொன்னுசாமி

    ReplyDelete
  6. //புரியாத பொன்னுச்சாமி இது போல் நிறைய எழுத என் வாழ்த்துக்களும் ஆசியும்.//

    அடேங்கப்பா!

    ReplyDelete
  7. //புரியாத பொன்னுச்சாமி//
    சரி தான் ..புரியுறது நெம்ப கஷ்டம் :)

    ReplyDelete
  8. \\☼ வெயிலான் said...

    சிவாண்ணே!

    செளக்கியமா? நான் நல்லாருக்கேன்.

    - உங்க பதிவு புரியாத பொன்னுசாமி\\

    தலைவா, வருக, புரியாம எழுதின பதிவு புரிஞ்சுக்க சிரமமாத்தான் இருக்கும். அப்படியும் வச்சுக்கலாம்.
    எங்க கஷ்டம் ’தலைவர்களுக்கு’ எங்க புரியப் போகுதுன்னும் வச்சுக்கலாம் :))

    ReplyDelete
  9. ஜோ/Joe

    புரிந்து கொள்ள எளிதாகத்தான் இருக்கும்.
    அந்த நிகழ்வு ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பதுதான் புரிந்து கொள்ள ரொம்ப கஷ்டமா இருக்கும்:))

    ReplyDelete
  10. புரியாத பொன்னுசாமி அளவுக்கு மக்கள் உலகத்தைப் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்,சிவா.

    ReplyDelete
  11. உண்மையிலேயே இப்படியெல்லாம் நீங்க சிறப்பா செதுக்கக்கூடிய திறமை இருந்து வீணாக்கி உள்ளே வைத்துக்கொண்டுருக்கிறீர்கள் என்று இன்று ஆச்சரியமாய் இருந்தது.

    ReplyDelete
  12. \\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

    உண்மையிலேயே இப்படியெல்லாம் நீங்க சிறப்பா செதுக்கக்கூடிய திறமை இருந்து வீணாக்கி உள்ளே வைத்துக்கொண்டுருக்கிறீர்கள் என்று இன்று ஆச்சரியமாய் இருந்தது.\\

    அரசியலை நான் எப்போதும் தொழில்துறைப் பார்வையிலேதான் பார்க்கின்றேன்

    அரசியல்வாதிகள் மக்களுக்கு எதுவும் செய்யாதபோதும் பெரிதாக விமர்சனம் பண்ணுவதில்லை,

    நம் பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் நிகழ்வு நடந்ததால் எழுத வேண்டியதாயிற்று

    என்னைப் பொறுத்த வரை தனிமனித முன்னேற்றம் எல்லாவற்றிலும் தேவை, அதற்கு என்ன செய்யலாம் என்பதே என் சிந்தனை:))

    தங்களின் ஆழ்ந்த பொறுமையான விமர்சனத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும்..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)