"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, August 29, 2009

மனித உயிரின் மதிப்பு இவ்வளவுதானா..!!!

மிருகம் ஐந்தறிவு உள்ளது, மனிதனோ ஆறறிவு படைத்தவன், மிருகங்கள் உணவுக்காக
உணவை உற்பத்தி செய்ய தெரியாததால் பிற உயிரை கொன்று தின்கின்றன.

மனிதன் ருசிக்காக மிருகங்களை கொன்று தின்று வாழ்கிறான்.

அதே சமயம் சீவகாருண்யத்துடன் உயிர்களைப் பார்ப்பவர்களும் உண்டு.

இந்த காணொளியை என் முந்தய இடுகையில் க. தங்கமணி பிரபு பின்னூட்டத்தில் தெரிவித்த இணைப்பில் முதன்முதலாக பார்த்தேன். மனிதம் இவ்வளவு தாழ்ந்துவிட்டதா ? அதிர்ச்சியாக இருந்தது.

இங்கு ஒருபுறம் முகம் தெரியாத நண்பர்கள் ஒன்று சேர்ந்து செந்தில்நாதனை இயல்புக்கு கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம்.

கைக்கெட்டும் தூரத்தில் மனிதனை மனிதன் சத்தமிடக்கூட வாய்ப்பின்றி, காக்கை குருவியை சுடுவதுபோல் சுடுவது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சுடப்பட்டவன் நிலையில் இருந்து பார்க்கிறேன்.

அவன் மனம் அந்த கணத்தில் என்ன பாடுபட்டிருக்கும் ?

வார்த்தைகள் எழும்ப மறுக்கின்றன…

எதைக் குற்றஞ் சொல்வது, மனிதன் இப்புவியில் வாழும் உரிமை பறிக்கப்பட்டதற்க்கு
அறிவியலையா, மதத்தையா, இனத்தையா, இது நமக்கு தேவைதானா?

கதிரின் இடுகை

நர்சிம்


இலங்கை இராணுவத்தின் கோரம் : மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்
பார்த்தால் மனம் பதைபதைக்கும் இந்த நிகழ்வுக்கு என்ன பதில் ? இதை அந்த நாடே அனுபவிக்கும், இயற்கைச் சட்டம் என்ன செய்கிறது என்று பார்க்கலாம் !

6 comments:

 1. நானும் இந்தக் கொடூரத்தைப் பற்றி எனது பதிவில் எழுதியுள்ளேன்,சிவா.

  ReplyDelete
 2. \\கதிர் - ஈரோடு said...

  நன்றி நண்பரே\\


  வாழ்த்துக்கள் கதிர்

  ReplyDelete
 3. \\ஷண்முகப்ரியன் said...

  நானும் இந்தக் கொடூரத்தைப் பற்றி எனது பதிவில் எழுதியுள்ளேன்,சிவா.\\

  தங்களின் பதிவில் பார்த்தேன்..
  மனம் குமுறுகிறது...

  ReplyDelete
 4. தங்கள் பதிவு தமிழினத்தின் குரலாக ஒலித்தமைக்கு நன்றியும் வணக்கங்களும்!
  வலியும் ஆற்றாமையும் மிகுந்த இந்த சூழலில் சிலநூறு ஆண்டுகள் நிகழ்ந்த நம் இந்திய சுதந்திர போரையும், நம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் இடம் பெறாத பெயரறியாத எண்ணற்ற நம் இந்திய விடுதலை வீரர்களையும், அவற்றால் நாம் இன்று பெற்றுள்ள பயனையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்! இலங்கையில் நாம் கண்ட, காணாத பல கொடும் மரணங்கள் மிகவிரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ கொடியினை ஏற்றப்போகும் அஸ்திவார செங்கற்களாகவே கொள்வோம் எனும் என் நம்பிக்கைதனை பகிர்ந்துகொள்கிறேன்! தமிழ் இலக்கியத்தில் புறநானூறுடன் இரண்டாயிரத்தின் ஈழப்போரும் தமிழர் வீரத்துக்கு சாண்றாக பதிவுபெறும் என திட்பமாக நம்புகிறேன்! நன்றி!

  ReplyDelete
 5. என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

  http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

  என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)