\\கீதை கர்மயோக பிரிவில் வருவது, செயல் தொடர்பான ஆலோசனை வழங்குவதே அந்த செய்யுளின் பொருள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் உனது செயலை ஆற்று என்பதே இதன் பொருள். மாறாக எதையும் செய்யாது இரு என்று சொல்லவில்லை. இந்த செய்யுள் ஊக்க மருந்து தான். எதிர்மறை பொருளில் புரிந்து கொள்வது பிழையே.\\
கீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்
\\பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை மட்டுமே, அதை எதிர்பார்பாக மாற்றி கிடைக்கும் என்று உறுதியாக இருந்து கொண்டு, இறுதி செயலில் எற்படும் தடை போன்ற புறகாரணிகள் உங்களால் முன்கூட்டியே தீர்மாணித்து தவர்க்க முடியும் என்றால் உங்கள் எதிர்ப்பார்ப்பு தகுந்த பலனைத் தரலாம். இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன, அவற்றை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனம் நம்மிடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?\\
இலக்கின் கடைநிலை சிதைவதற்க்கு ஒரு போதும் புறக்காரணிகள் காரணமாக அமைவதில்லை. எந்த ஒரு புறக்காரணமும் தானாக த்குந்த காரணமின்றி வருவதில்லை. நம் பரம்பரையாகவோ, நம் செயல்களால் சேர்த்துவைத்தவைகளே புறக்காரணமாக வரும்.
இதை அறிய எந்த தீர்க்கதரிசனமும் தேவையில்லை. அமைதியாகவும், ஆழமாகவும் சிந்திக்கும் ஆற்றல் மனதிற்கு வாய்த்தால் போதும்.
உதாரணமாக ஓட்டப் பந்தய வீரன் தான் பங்கேற்க்கும் பந்தயத்தில் முதலிடத்தில் வர வேண்டும் என்ற திடமான முடிவோடு தன் கடமையைச் செய்தால் கண்டிப்பாக முதலிடம் பெறுவான்.பலனை எதிர்பார்த்தபடி அடைவான்.
ஆனால் அவனே ஓட்டப்பந்தய நுணுக்கங்களை மிகச் சரியாக கற்றுத் தேர்ந்து,மிகத் துல்லியமாக ஓடிப்பழகி,பந்தயத்தில் பங்கேற்கும்பொழுது,நான் முதலாவதாக ஓடுகிறேனா? என்று சைடில் பார்க்காமல்,அல்லது பலனை எதிர்பார்க்காமல் ஓடினால் நிச்சயம் அவன் அந்த போட்டியில் முந்தய உலக சாதனையை முறியடிப்பான். முதலிடமும் கிடைக்கும், போனசாக உலக சாதனையும் கிடைக்கும்.
இதுதான் பலனை எதிர்பார்க்காது கடைமையை மட்டும் செய்தல். இதனால் அதிகபலன் உறுதியாக கிடைக்கும்.
ஒருவேளை புறக்காரணங்களினால் அவன் காலில் சுளுக்கு ஏற்படலாம். அடுத்தவன் குறுக்கே வந்து விழலாம். இது அவனைப் பொருத்தவரை தோல்வியில் முடியும். புறக்காரணங்களுக்கும் நம் செயல்களுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. எந்த தகுதி வாய்ந்த வீரனையாவது குறுக்குவழியில் ஒதுக்கி வந்திருப்பான். அதன் தாக்கம்தான் புறக்காரணமாக அமைகிறது.-----—இதன் மறுபக்கமாக இரண்டாவதாக வரவேண்டியவன் முதலாக வந்திருப்பான். அவனைப் பொறுத்தவரை புறக்காரணம் ஒன்றினால் அவனுடய போட்டியாளன் விலக்கப்பட்டது நன்மைதானே. இதற்கும் அவன் முன் செய்த செயல் ஒன்று காரணமாக இருக்கலாம். ஏதேனும் ஒரு ஜூனியருக்கு சில டிப்ஸ், உடைகள் கொடுத்திருக்கலாம். அதனால்கூட முதலில் வந்திருக்கலாம். இங்கு அவன் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ததாகவே நான் உணர்கிறேன்.
\\’இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன’\\ என்று ஏன் ஒரு தலைப் பட்சமாக சொல்கிறீர்கள்.? இரண்டாவது நபருக்கு முழுக்க நன்மைதானே விளைந்திருக்கிறது. ஆக செயல்திருத்தம் வந்தால் புறக்காரணங்கள் நன்மையே தர வைக்கமுடியும். இதை உணர்ந்து செயல்படுவதே கடமை.
\\kannabiran, RAVI SHANKAR (KRS) 9 \\உண்மையான பொருள் என்னான்னா
கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது, பலனை எதிர்பாராதே! எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான்! ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம்! ஆனா அந்தச் செயலைச் செய்யும் போது...செய்து கொண்டிருக்கும் போதே, பலன் வந்துருமா, வந்துருமா-ன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தா காரியம் தான் சிதறும்!
அதான் முடிவு எப்படி இருக்குமோன்னு யோசிக்காது, செயலை மட்டும் செய்-ன்னு சொல்லப்பட்டது!\\
KRS பாதியளவு சரியாகவே சொல்லி இருக்கிறார். நன்றி
கோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.
மீண்டும் சந்திப்போம்,சிந்திப்போம்
"கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்
ReplyDeleteஇந்த வாக்கியமானது பார்ப்பனர்களால் தங்களுக்கு சேவை செய்யும் மற்றவர்களுக்காக எழுதப்பட்டது அன்பரே. நான் சொல்வதையும், கேட்பதையும், எழுதியதையும் முகம் சுழிக்காமல் ஒரு அடிமையைப்போல் செய். பிரதி பலன் எதையும் எதிர்பார்க்காதே என்பதுதான் இதன் உண்மையான பொருள். கடவுள் என்கிற பெயரில் மக்கள் மனங்களில் பயத்தை உருவாக்கி, அவர் பெயரில் பலபல கட்டளைகளை போட்டு சாதா மனிதனை ஒரு நடமாடும் செத்த பிணமாக ஆக்குவதுதான் கீதை போன்ற புத்தகங்களை உருவாக்கியவர்களின் ஒரே உள் நோக்கம்.
//கீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்//
ReplyDeleteஇது நீங்களாகாவே சொல்லும் விளக்கம். நான் எழுதிய அதே பொருளில் தான் பலரும் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், எதிர்பார்பின்றி உலகம் இயங்குவதில்லை என்ற ஆழ்ந்த கருத்து கொண்டு இருப்போருக்கு, செயலின் (கடமை) நோக்கம் பலன் மட்டும்தான் என்று புரிந்து (மற்றொரு பலனான அனுபவமும் பலன் தான் என்பதும் புரியாமல்) கீதை தப்பாக சொல்லிவிட்டதோ என்ற நினைத்தால் கீதை என்ன செய்யும்.
//கோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.//
திசை திருப்ப எனக்கு எந்த தேவையும் இல்லை. எனது கருத்தை மட்டும் தான் சொன்னேன். திசை திருப்பினேன் என்று சொல்வதற்கான எனது நோக்கமாக எதைக் கண்டீர்கள் என்றே தெரியவில்லை.
ஆன்மிகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைக்கு சப்பைக் கட்டுபவர்கள் பெரும்பாலோனர் தங்களை ஆன்மிகவாதிகள் என்று கூறிக் கொள்வதால், அவர்களுக்கிடையே நல்ல ஆன்மிகம் எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நான் செய்ய துணிவது இல்லை. காரணம் விழலுக்கு நீர் இரைத்தால் நீரும், நேரமும் விரையம் தான்
என் வாழ்க்கை முன்னேற, அந்த வார்த்தைகளை நான் இவ்விதமாக
ReplyDeleteபார்க்கிறேன்.
இதே நோக்கத்துடன் தான் பைபிள்,
குர்ஆன் ஆகியவற்றையும் பார்க்கிறேன்.
யாரோ ஒருவர் உங்கள் பதிவால் சினந்து எழுதி இருக்கிறார்
ReplyDelete:)
சும்மா கிடந்த சங்கை.......பாரத போரின் போது ஊதினானாம் கிருஷ்ணன்
:)
\\அவர்களுக்கிடையே நல்ல ஆன்மிகம் எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நான் செய்ய துணிவது இல்லை\\
ReplyDeleteஅதுபோன்ற சிலஆன்மீகவாதிகளுக்காக
எழுத வேண்டாம். என்னைப் போன்ற சாதாரணமான பலபேருக்காக எழுதுங்களேன்.
எறும்பு ஊற கல்லும் தேயும். மூடத்தனத்தை நீக்க, ராமர் பாலத்தில்
அணிலாய் உழைப்போமே.
\\ கோவி.கண்ணன்
ReplyDelete--யாரோ ஒருவர் உங்கள் பதிவால் சினந்து எழுதி இருக்கிறார்\\
தகவலுக்கு நன்றி. பதில் விரைவில்...
விவாதத்திற்கு உரியது ......நன்றாக எழுதியுள்ளீர்கள்.....
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே!
ReplyDeleteசில நாட்களுக்கு முன்பு நான் இது தொடர்பாக ஒரு இடுகை இட்டுருந்தேன்.
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா ?
இவ்விடுகையில் குறிப்பிட்டுள்ள படி பல ஆயிரக்கணக்கான தன்னலம் கருதாத நல் ஆத்மாக்களை பாரத பூமி தந்துள்ளது குறிப்பிட தக்கது.
வாழ்த்துக்கள்
ஊக்கத்திற்க்கு நன்றி திரு coolzkarthi
ReplyDeleteஉண்மையில் நீங்கள் பலன்கள் எதையும் எதிர்பார்ப்பாதவர் எனின், எதற்காக உங்கள் பின்னூட்ட கருத்து பெட்டியினை திறந்து வைத்து மற்றவர்களின் (நல்ல)கருத்துகளுக்காக காத்துக் கிடக்கிறீர்கள். இதில்வேறு, உங்கள் எண்ணப்படி கருத்திடுபவர்களுக்கு நன்றியை வேறு கூறிகிறீர்கள். பலே பலே, நல்ல பாடமய்யா!
ReplyDeleteமாசிலா.. உங்களைப் போன்ற மாற்றுக்கருத்து
ReplyDeleteஉடையோரின் நட்பை வேண்டித்தான். நல்வரவாகுக.
நன்றி ..கூறுவது நான் கற்றுக் கொண்ட நல்ல
பழக்கங்களில் ஒன்று.
விவாதம் சூடு பிடித்து வெவ்வேறு திசைகளில் சென்றிருக்கிறது.
ReplyDeleteம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் சிவசு
கீதாச்சாரம் கீதையில் இல்லேவே இல்லை.
ReplyDeleteகடமையை செய், பயனை எதிர்பார்க்கதே
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
இது கீதையில் இல்லேவே இல்லை. கீதை முழுவதும் தேடித் பார்த்து விட்டோம். உங்களது கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பொய் சொல்லி, இந்து மதத்தை நாம் வளர்க்க வேண்டாம்.
பார்க்க : http://subavee-blog.blogspot.in/2014/03/1.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/FGESw+%28%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%29
காப்பி, பேஸ்ட் செய்து பார்க்கவும். நன்றி. உங்கள் சகோதரி
எதிரும் புதிரும் (பொழிவு-1)
ஆன்மிகம் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை