"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, March 25, 2009

இடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா?

இன்றிலிருந்து இடது, வலது என்றெல்லாம் பிரித்து பார்க்கக் கூடாது. இதில் எந்த அரசியல் உள்குத்தும் கிடையாது.

இனிமேல் சாலையில் செல்லும் பொழுது இடப்பக்கம், வலப்பக்கம் எப்படி வேண்டுமானாலும் போகும்படி விதிகளை மாற்றவேண்டும்.

இடப்பக்கம் என்ன தாழ்ந்துவிட்டது. ஏன் எங்களை இடப்பக்கமாகவே போகச் சொல்கிறீர்கள்?
இரண்டு பக்கமும் ஒரே திசை நோக்கி போக அனுமதிக்க வேண்டும்.

பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.

நீங்கள் பாராட்டுதலுக்காக கை கொடுத்தாலோ, கும்பிட்டாலோ ப்திலுக்கு நான் காலை பயன்படுத்தினால் கோபம் கொள்ளக்கூடாது. கையைவிட கால் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது.

உணர்ச்சி வசப்படாதீர்கள். கோவி அண்ணாரின் கட்டுரையை படித்தவுடன் எழுதியது.

இனி என் கருத்துகள்

//வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// மூட நம்பிக்கைதான். கூடவே எது நம்பிக்கை, இதில் உள்ள உண்மைத்தத்துவம் என்ன? காலப்போக்கில் எப்படி மூடநம்பிக்கையாய் மாறியது என்று விளக்கினால் பொறுப்பான எழுத்தாக
அமையும்.

//அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// //வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை//.

வெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரியான வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

அடிப்படை நோக்கம் ஆரோக்கியம். எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது. கவனக்குறைவாக கையை சுத்தப்படுத்துதலில் குறைநிகழும்போது, ஆரோக்கிய குறைபாடு நிகழாவண்ணம் த்டுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒருகையை குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்துவது. மாற்றிமாற்றி பயன்படுத்தினால்
என்ன விளைவு என்பதைப் பாருங்கள்?.

கால் பட்டவிதம் தற்செயலா, அல்லது தெரிந்தே, வேண்டுமென்றே பட்டதா என்பதை உணர்த்தும் செயற்குறிப்புதான், தெரியாமல் பட்டுவிட்டது எனக்காட்ட தொட்டு கண்ணில் ஒற்றுதல். இதில் என்ன மூடநம்பிக்கையை இருக்கிறது. குற்றமா இல்லையா என்பதல்ல, தெரிந்தா, தெரியாமலா என்பதே இங்கே முக்கியம்.

//இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.// எந்தப் பொருளுக்கும் பழக்கம் காரணமாக ம்ரியாதை கொடுப்பது பொருளற்ற செயல்தான். உணர்ந்து கொடுப்பதே சிறப்பு.

//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.

//மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார்.// இவர் யார் காலிலாவது விழுந்தால் அவர் காலை உயர்வாக மதிக்க விழுவார். நம்மைப் போன்றோர் அவர்களிடம் நாம் காட்டும் பணிவையும், உள்ளத்தில் உள்ள உயர்வை வெளிக்காட்ட வார்த்தைகள் இன்றி, சுருக்கமாக உணர்த்தும் செயற்குறிப்பாகவே விழுகிறோம்.

//கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.//

மாட்டுசாணியை வரட்டி தட்டியும், சாணிக்குழியில் சேர்த்து உரமாக்கியும்,வீட்டிற்க்கு பாதுகாப்பாக சுத்தம் கருதி வழித்தும் தான் மட்டமாக பயன்படுத்த தெரியும். சாணியை பிள்ளையாராக வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைப்பது சரிதானே? இதில் என்ன முரண்.?
முரணாகவே இருக்கட்டும் இதில் யாருக்கு என்ன நட்டம்?


//ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//
//ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது ?//

பிராமணர் வீட்டு ஒருவயது குழந்தை சரஸ்வதி படத்தின் மீது ஒன்னுக்கு போய்ட்டா அது ச்மூக ஒற்றுமைக்கு எதிரானாதா?

அவன் எதை அச்சிட்டான் என்று பார்ப்பதோடு, எந்த நோக்கத்துடன் அச்சிட்டான் என்று அறிந்துகொள்வது நல்லது. வெறுமனே படம் நன்றாக உள்ளது என அச்சிட்டு இருந்தால், அந்த படத்தின் சிறப்பை, உயர்வை தகுந்த முறையில் எடுத்துச் சொன்னால் தானாக எடுத்து விட்டுப் போகிறான்.

ஒருவேளை தெரிந்தே செய்திருந்தால், நம் எதிர்கருத்தை தெரிவிக்கலாம். மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம்.

எதை எப்படி பார்க்கவேண்டும் என்று தெரிந்தவரை சொல்லித்தராமல், சும்மா புறங் கூறுவது கோவியாருக்கு அழகல்ல.

15 comments:

 1. வழிமொழிகின்றேன்...

  ReplyDelete
 2. ஆ.ஞானசேகரன் தங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. நான் கூட கம்யூனிஸ்ட் பிரச்சனையோன்னு நினைச்சேன்.

  மற்றபடி நல்ல பதிவு.

  //எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது//

  இந்த வரியை நானும் பயன்படுத்தியதுண்டு.

  ReplyDelete
 4. அப்பாவி முரு முதல் வருகைக்கு நன்றி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.///

  நல்லா இருக்கே சிந்தனை!

  ReplyDelete
 6. //இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.// எந்தப் பொருளுக்கும் பழக்கம் காரணமாக ம்ரியாதை கொடுப்பது பொருளற்ற செயல்தான். உணர்ந்து கொடுப்பதே சிறப்பு.////

  சிறப்பான வாதம்!!

  ReplyDelete
 7. thevanmayam--வருகைக்கு நன்றி. உண்மையைச்
  சொன்னேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. //விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.

  :)-

  ReplyDelete
 9. நண்பரிடம் உரிமையோடு...........
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. எப்படிங்க.. இந்தப் போடு போடுறீங்க.. அடி பின்னி எடுத்திருக்கீங்க. கலக்குங்க..வேறென்ன நான் சொல்ல..

  ReplyDelete
 11. //
  பொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.
  //

  அருமையான சிந்தனை, சிறந்த பதிவு!!

  ReplyDelete
 12. //தமிழ்நெஞ்சம் said...

  எப்படிங்க.. இந்தப் போடு போடுறீங்க.. அடி பின்னி எடுத்திருக்கீங்க. கலக்குங்க..வேறென்ன நான் சொல்ல..//

  என் பார்வையில் தவறு எனப்பட்டபோது,சுட்டிக்
  காட்டியிருக்கிறேன். நண்பர்களுக்குள் ஏற்படும்
  கருத்து மோதல்கள்தான்.தொடரும்...
  நன்றி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. RAMYA said..
  அருமையான சிந்தனை, சிறந்த பதிவு!!

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 14. //வெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரியான வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

  அடிப்படை நோக்கம் ஆரோக்கியம். எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது. கவனக்குறைவாக கையை சுத்தப்படுத்துதலில் குறைநிகழும்போது, ஆரோக்கிய குறைபாடு நிகழாவண்ணம் த்டுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒருகையை குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்துவது. மாற்றிமாற்றி பயன்படுத்தினால்
  என்ன விளைவு என்பதைப் பாருங்கள்?.//

  இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அதை மேலே நீங்கள் படித்ததாக குறிப்பிட்டிருக்கும் அந்த பதிவிலும் இணைத்துள்ளேன்

  ReplyDelete
 15. \\ஏனென்றால் கடைக்கார பையன் 'இடது கையால்' மீதம் பணத்தைக் கொடுத்துவிட்டானாம்.\\

  கோவியாரே, பணம் வாங்கியவர், சுத்தம் செய்ய பயன்படுத்தும் கையில் பணம் கொடுத்ததற்காக
  அறிவார்த்தமாக கோபப்பட்டதாக நான் நினைக்கவில்லை.

  எப்படி வளர்க்கப்பட்டாரோ, அதன் அடிப்படையில்
  செண்டிமெண்ட் ஆக ’இடதுகை ஆகாது’ என்றுதான்
  கோபப்பட்டு இருக்கிறார். அவ்வளவுதான்.

  ஆக சுகாதார அடிப்படையில் விளக்கம் இந்த இடத்திற்கு பொருந்தாது.

  செண்டிமெண்ட் அடிப்படையில் அறிவியலோடு இணைந்த ஆன்மீகரீதியாக முன்னோர்கள் சொன்னது என்ன?,அதை காலப்போக்கில் எப்படி மூட நம்பிக்கையாக மாற்றிவிட்டனர்? என தாங்கள் விளக்கியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

  இரு கட்டுரைகளிலும் அப்படி இல்லை.ஆகவே சுட்டிக்காட்ட வேண்டியதாயிற்று.

  என்னுடைய கணிப்பில் தாங்கள் ஆன்மீகத்தில் உள்ள
  அறிவியலை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.
  அதை பதிவுலக முன்னேற்றத்திற்கு,ஆக்கபூர்வமாக
  எழுத வேண்டும்.

  அடிப்படை தெரியாமல் மற்றவர்கள் நாத்திகம் பேசுவது தவறில்லை. தங்களுக்கு தெரிந்தவற்றை
  உங்கள் நோக்கில் சொல்வதைவிட, எப்படி சொன்னால் பிறருக்கு உபயோகமாயிருக்கும் என்று சொன்னால் அதுவே சமுதாயப்பணி.

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)