"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, March 15, 2009

கோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்கள்

கோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகளில்

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்

என்ற பதிவைப் படிக்க நேர்ந்தது. சில கருத்து இடைவெளிகள் இருப்பதாக மனதிற்கு தோன்றியது அதாவது பலவிஷயங்களில் அவர் சரியாக இருந்தாலும், சில இடங்களில் மட்டும் எடுத்துச் சொல்லியவிதம், கோணம் பொருந்தவில்லை. இதை நான் மேலோட்டமாகவே அணுகி இருக்கிறேன்.

//எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட வாய்புகள் உண்டு பலனை எதிர்பாராமல் செய்யும் இலக்கு நோகிய பயணத்தில் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி, இல்லை என்றாலும் முயற்சித்தோம் என்ற மன நிறைவு கிடைக்கும்" - என்பதை மேற்கண்ட கீதை வரிகளினால் புரிந்து கொண்டேன்.//----இது கோவியாரின் புரிதல்.

கடமையை செய், பலனை எதிர்பாராதே.. என்ற வரிக்கு நேரடியாக அர்த்தம் சொல்வதை விட்டுவிட்டு எதிர்பார்க்காமல் இருந்த பின்னர் ஏமாற்றம் வந்தால் நடப்பவற்றை, அப்போது மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லிஇருக்கிறார்.

SP.VR. SUBBIAH--//‘கடமையைச் செய் !உன் விருப்பப்படி பலனை எதிர்பாராதே' என்பது சரியாக இருக்கும் என்று சிற்றறிவு சொல்கிறது.//

--’உன்’ என்ற வார்த்தைக்குப் பதில் வேறு எந்த வார்த்தையை போடுவது என நம்மை குழப்பிவிட்டார்.

TBCD--//திட்டமிட்ட செயல் என்பது பலன் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதே ஆகும். வருவது வரட்டும் என்று வியாபாரம் செய்ய முடியாது..//.

-----அறிந்தே செயல்படுங்கள்..இவரை ’கடமையை செய்,பலனை எதிர்பாராதே’ என்கிற வாக்கியத்தில். அறியாமல் செயல்படுங்கள் என்ற பொருள் கொள்ளச் செய்தது எந்த வார்த்தை..?

கோவி அண்ணன் பின்னூட்ட விளக்கங்களில் இருந்து.....
//’கோவி……//முதலில் எதெல்லாம் கடமை? அதுக்கு என்ன வரையறை? //

கடமை என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட செயலில் / இலக்கில் நாம் ஆற்றவேண்டிய பங்கு. நம்மீது உள்ள பொறுப்புகள், நாம் செய்யவேண்டியவை என்று தீர்மானித்துக் கொள்பவை ஆகியவற்றில் நாம் செயாலற்றுவதற்கு முனைவதே கடமை’.//

(கோவி கருத்தில் உணர்த்தப்படாதது----செயலாற்றுமுன் முழுமையாக உணர்வது,புரிந்து கொள்வதும் கடமையின் முக்கியமான பகுதி இதை விட்டுவிட்டதால்தான் குழப்பமே.)

’//எதைச் செய்தாலும் வெற்றியை மட்டுமே இலக்காக்கக் கொண்டு செய்யாமல் இலக்குக்கு தேவையான கடமையை சரியாக செய்யுங்கள் என்று சொல்வதாகத்தான் புரிந்து கொள்கிறேன்.’// --கோவி

மேலோட்டமாகவோ, தவறாகவோ புரிந்துகொண்டு அதை உணராமல், என்ன புரிந்ததோ அதை சரியாக செய்யவேண்டும் என கொள்வதா?...

’//எந்த ஒரு செயல் வெற்றி அடைவதற்கும் அது சரியாக செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்பது முதன்மையான விசயங்கள் மட்டுமே, அதில் வெற்றி என்பது புறகாரணிகளையும் உள்ளடக்கியது.

நீங்கள் நாளை செய்ய வேண்டியதை இன்றே கூட தொடங்கிவிட்டீர்கள், விடியும் போது அதன் தேவையே கூட இல்லாமல் போக வாய்ப்புண்டு, அது போன்ற நேரங்களில் செய்ததெல்லாம் வீன் ? என்று அலுத்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வீர்கள் ? எல்லாம் விதி என்று தானே சமாதனமடைவீர்கள் அல்லது முதிர்ச்சியுடன் செய்யவேண்டியதை சரியான நேரத்தில் தான் செய்தேன், ஏனோ அதன் தேவை இல்லாமல் போய்விட்டது என்று சமாதனம் அடைவீர்கள்.//.--கோவி

திரும்பவும் வேதாளம் முருங்கைமரத்தில்...

உதாரணத்த்ற்க்கு தயிர் புரைஊற்றுவது ஒரு நிகழ்வு கோவி அவர்களின் பாணியில் நம் கடமை, நம் பங்கு நன்கு காயவைத்து சிறிது தயிர்சேர்த்து புரை ஊற்றுவது. அதன்பின் பூனை வந்து குடித்துவிடுவது, காரணம் தெரியாமல் கெட்டுப்போவது என்ற புறக்காரணிகளால் இந்நிகழ்வு நடக்காமல் போகலாம்.இதற்கு மனதை தயார்படுத்தி, சமாதானம் அடையுங்கள் என்கிறார்.

இவர் தன் பங்கையே முதலில் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்கிறேன்.

பாலைவாங்கியவுடன் அதன் தரத்தை சரியாக பரிசோதித்து நல்லபால் என்பதை உறுதி செய்து, நன்கு சுண்டக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டுக்கு வரும்வரை பொறுத்திருந்து, அளவாக தயிர்கலந்து புரைஊற்றி, அதன்பின் அடுக்களையின் இதமான சூட்டில் வைத்து, பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்ற தன் கடமையை முழுமையாக இவர் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தரமான தயிர் கிடைக்கும்.

இந்த தன்மைதான் கடமையை உணர்வது.முதலில் உணர்ந்து, பின் அதன் வழிமுழுமையாக கடமை செய்வது அவசியம். அதாவது செயலைக்கு முன்னதாக சரியாக எதையும் விட்டுவிடாது புரிதலே முக்கியம்.

இதில் விதி எங்கிருந்து வந்தது.....? எதற்காக மனதை சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டும்..? நம் இயலாமைக்காகவா..?

சரியாக கடமையைச் செய்தால் சரியான பலன் மிக நிச்சயமாக கிடைத்தே தீரும்.இதுதான் விதி என்பது. இந்த பலனை எதிர்பார்க்கவேண்டியதே இல்லை. கிடைத்தே தீரும். இதுதான் கடமையை செய், பலனை எதிர்பாராதே என்பது.


பதிவு தொடரும்.......

5 comments:

 1. //பாலைவாங்கியவுடன் அதன் தரத்தை சரியாக பரிசோதித்து நல்லபால் என்பதை உறுதி செய்து, நன்கு சுண்டக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டுக்கு வரும்வரை பொறுத்திருந்து, அளவாக தயிர்கலந்து புரைஊற்றி, அதன்பின் அடுக்களையின் இதமான சூட்டில் வைத்து, பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்ற தன் கடமையை முழுமையாக இவர் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தரமான தயிர் கிடைக்கும்.//

  அதிகாலையில் நன்றாக தயிராக தயாராகி இருக்கும் போது குறுக்கால் ஓடிய எலி பானையோடு தட்டிவிட்டது என்றால் தயிரின் பலன் உங்களுக்கு கிடைக்காமலேயே போகும், அப்போது யாரையும் நொந்து கொள்ள முடியாது. அதைத்தான் புறக்காரணிகள் என்றேன். செயலுக்கான பலனை சரியான செயல் மட்டுமே முடிவு செய்துவிடாது. புறக்காரணிகளின் செயல்பாடு, குறுக்கீடு இவை கூட காரணமாக அமைந்துவிடும்.

  ReplyDelete
 2. என்னை பொறுத்துக் கொள்ளுங்கள்..,
  ’பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும்’
  என தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன்.

  உங்கள் வீட்டில் எலி இருப்பது தெரிந்த
  விசயம் தானே.நெஞ்சைத் தொட்டுச்
  சொல்லுங்கள். பாதுகாப்பாக வைத்துக்
  கொள்ளும் கடமையைசெய்யாமல், எலிமீது பழியை போட்டு ஏன் நிச்சயமான பலனை இழக்கவேண்டும்
  மீண்டும் புறக்காரணிகளை காரணமாக்காதீர்கள்.

  ஒருவேளை புறக்காரணம் சரியென்றால், அதன் மூலத்தை ஆராய்ந்து, ’சரி, இது தானாக வரவில்லை. நம் என்றோ செய்ததின் எதிர் நிகழ்வு இது. இந்த நிகழ்வு ஏன் நிகழ்ந்தது? இதற்கு முன் யாருக்கு, நாம் சிறுதீங்கு இழைத்திருப்போமோ
  அதன் பலன் நாம் இன்று தயிரை இழக்கவேண்டியதாயிற்று. இனிமேல்
  இதை ஒத்த தவறுகளை தவிர்க்க
  வேண்டும் என்ற உணர்வோடு கடமையாற்றி பலனடையலாமே..

  ReplyDelete
 3. //உங்கள் வீட்டில் எலி இருப்பது தெரிந்த
  விசயம் தானே.நெஞ்சைத் தொட்டுச்
  சொல்லுங்கள். பாதுகாப்பாக வைத்துக்
  கொள்ளும் கடமையைசெய்யாமல், எலிமீது பழியை போட்டு ஏன் நிச்சயமான பலனை இழக்கவேண்டும்
  மீண்டும் புறக்காரணிகளை காரணமாக்காதீர்கள்.
  //

  விதண்டாவாதங்களுக்கு பதில் சொல்லவே முடியாது, அந்த காலத்தில் பத்தாயம் என்று உணவு பொருள் குறிப்பாக நெல் பாதுகாத்து தேவையான போது எடுப்பார்கள், நன்றாகத்தான் காற்றுப் புக முடியாத அளவில் இருக்கும், எப்படியோ எலி தன் கூறிய பற்களால் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்துவிடும்.

  பாதுகாப்பு மிக்க பயணம் என்று ஹெல்மெட் அணிகிறோம், காரில் பயணிக்கும் போது பெல்ட் கூட போட்டுக் கொள்கிறோம், இதெல்லாம் ப்ரேக் செயலிழந்து தறிகட்டு எதிரே வரும் லாரிக்கு தெரியாது.

  பாதுகாப்புகள் எதையுமே ஓரளவு தடுக்கும். முழுதான பாதுகாப்பு உத்திரவாதம் கொடுக்காது. பணத்தை சூட்கேசில் வைத்து பூட்டி வைப்பிங்க, எளிதில் திறக்க முடியாத அளவுக்கு பெரிய பூட்டு, அல்லது உறுதியான பூட்டு. ஆனால் பெட்டியுடன் காணவில்லை என்றால் பூட்டு பூட்டகேசுதான்.

  ReplyDelete
 4. ம்ம்....விதண்டாவாதம் என்கிற வார்த்தை சற்றே மனதை நெருடுகிறது.

  சரி. நேற்றே வெளியான கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!" - கீதாச்சாரம்---தொடர்ச்சி என்ற என் பதிவை படித்துப் பார்த்தீர்களா?

  உங்கள் எண்ணஓட்டம் புரிந்துதான் முன்னரே எழுதி இருக்கிறேன்.

  ReplyDelete
 5. நல்ல விவாதம் - பல சிந்தனைகள் - பல முடிவுகள் - ஆனாலும் அவரவரும் அவரவர் கொள்கையில் தீவிரமாக இருக்கீறார்கள் - கடமையைச் செய்கிறார்கள் - பலனை எதிரபாராமல். கீதையைப் பின்பற்றுகிறார்கள்

  நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)