"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, July 13, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 6

மலைமீது ஏறினால் அங்கே இதுவரை காணாத பனிபடர்ந்த மலையின் காட்சி என்னைக் கட்டிப்போட்டது. இந்த யாத்திரையில் முதன்முதலாக பனிபடர்ந்த மலைகள், கயிலைநாதனைக் காணச் செல்லும் நமக்கு கட்டியம் கூறுவது போல் காட்சியளித்தன.இங்கே நடைபயிற்சியின்போது காலில் போடும் ஷூ, ஏங்கிள் ஷீ (டிரெக்கிங் ஷூ)எனப்படும் உள்பகுதியில் கால்மணிக்கட்டு,பாதம் இவற்றிற்கு  ஆதரவாக  உள்பகுதியில் உலோகப்பகுதிகள் வைத்து தயார் செய்யப்பட்டிருக்கும், இது நாம் நடக்கும்போது  கால் பிறழ்ந்து விடாமல் இருக்க மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து தெரியாத நண்பர்கள் சாதரண ஷூக்களை வாங்கி வந்திருக்க, பரிக்கிரமாவின்போது நடக்க முடியாமல் மிகவும் தடுமாறினர்.

பாதைகளில் பெரும்பாலான இடங்கள் கற்களின்மீதுதான் நடக்க வேண்டியதாக இருக்கும். ஆக இந்த காலணியினை வாங்கத் தவறாதீர்கள். ஒருமாதம் முன்னதாகவே வாங்கி அதனோடு நடைபயிற்சி மேற் கொள்ளுங்கள். காலுக்கு பழகிவிடும். அதிலும் முக்கியம்,  வாங்கும்போது காலில் மாட்டி, ஒரு விரலை பின் குதிகாலுக்கும் ஷூவுக்கும் இடையில் செலுத்திப்பார்த்து வாங்குங்கள். அப்போதுதான் அசைவின்போது கடிக்காமல், இருக்கும். . கால்விரல்கள் இருக்குமிடம் சற்று அகலமாக (கிடைக்கும்) வாங்கிக் கொள்ளுங்கள்.,

மேலே ஏறிய களைப்பு தீர ஓய்வெடுத்துவிட்டு கீழிறங்கினோம். மலையேற்றம் வேறொரு வகையில் நமக்கு நன்மை செய்கிறது. அதாவது புவிஉயர்மட்ட நோய்க்குறிகளாக வாந்தி,தலைசுற்றல், மயக்கம் வந்தால் அந்த உயரத்தில் இருந்து கீழிறங்கினால் சரியாகிவிடும். தங்குமிடமான நியாலத்தில் இருந்து மேலே இன்னும் உயர்மட்டத்திற்கு ஏறி, பின் இறங்குகையில் உடல் சமநிலை அடைந்து நோய்க்குறிகள் சரியாகிவிடும். ஆகவே முடிந்தவரை மலையேறுவதை தவிர்க்க வேண்டாம். இதையெல்லாம் கவனத்தில் வைத்துப்பார்த்தால் மலையேறாத சில அன்பர்கள்மீது எனக்கு அனுதாபமே ஏற்பட்டது.

அடுத்தநாள் ஜூன் 10 ம் தேதி நியாலத்திலிருந்து சாகா நோக்கி பயணம்.
யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

6 comments:

Rathnavel said...

அருமையான பதிவு.
நல்ல புகைப்படத்தொகுப்புக்கள்.
நல்ல பயணக் குறிப்புக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

Sankar Gurusamy said...

அருமையான டிப்ஸ் தருகிறீர்கள்.. தொடருங்கள்.

பகிர்வுக்கு நன்றி...

http://anubhudhi.blogspot.com/

compaq said...

திருகைலாயயாதிரை தொடர்,நாமே கைலாயம் சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
நன்றி தொடர்ந்து எழுத்துகள் .
முருகவேல்(சென்னை-17 )

murugavel7@gmail .com

சாகம்பரி said...

காலணி பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. பரிக்ரமா சிலரால் மட்டுமே செய்ய முடிந்தது என்பதன் விளக்கம் இப்போது புரிகிறது.

ஸ்பார்க் கார்த்தி said...

சீக்கிரம் கைலை நாதனை பார்க்க வேண்டுமேன்டற ஆர்வம் இபோதே தோன்றுகிறது, கைலையை தரிசிக்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

Shyamala.J said...

Hi Anna,
Arrumi Nanriii,
Thanks, Thanks, Thanks.

Fan.......