"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, July 28, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி-12

இரவு தூங்குமுன்னர் ஒரு சில அன்பர்கள் பச்சைக்கற்பூரத்தை பொடித்து தன் படுக்கையைச் சுற்றிலும் தூவிக்கொண்டனர். இது காற்றில் ஆக்சிஜனை இழுத்துக்கொடுக்கும். மூச்சித் திணறலை சமாளிக்கும். எனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே தவிர அவர்கள் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள்.

இன்னும் தங்குமிடங்களில் LED டார்ச்லைட்டுகள் உபயோகப்படுத்துவது நல்லது, பேட்டரியும் தீராது. சூடும் வராது. டார்சன் மற்றும் பரிக்கிரமாவின்போது தங்குமிடங்களில் எக்காரணம் கொண்டும் அறைக்குள் மெழுகுவர்த்தி/சி.லைட்டர் ஏற்றி வைத்துவிட்டு தூங்குவதை தவிர்க்கவேண்டும். காரணம் காற்றில் ஏற்கனவே இருக்கும் குறைந்த பட்ச அளவு ஆக்சிஜனையும் மெழுகுவர்த்தி காலி செய்துவிடும் என்றும் சொன்னார்கள். யாரேனும் ஒருவருக்கும் பாதிப்பு இருந்தாலும் தூக்கத்திலேயே உயிர் பிரிய நேரிடும்.

ஏதேனும் மூச்சுத் தொந்தரவு/திணறல் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இது போன்றவற்றை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அரைத்தூக்கமே தூங்கி எழுந்தோம்.

14/06/2011 அன்று காலை எழுந்தவுடன் எங்களது பொருட்களை எல்லாம் டிராவல்ஸ் லாரியில் ஒப்படைத்து விட்டோம். எங்களுக்கு முதுகில் சுமக்கும் பையில் மிக அத்தியாவசியமான ஒரு செட் ஆடைகள், இதுவும் எப்படியோ நாம் போட்டிருக்கிற உடைகள் நனைந்து விட்டால் போட மட்டுமே, இல்லையென்றால் அப்படியே திருப்பிக்கொண்டு வர வேண்டியதுதான்:)
கொஞ்சம் உலர்பழங்கள் எடுத்துக்கொண்டோம்.

தண்ணீர் பாட்டில், மதிய உணவாக ஒரு ஆப்பிள்,ஒரு ரொட்டி,ஜீஸ் பெட்டியில் அடைத்து கொடுத்துவிட்டார்கள். காலையில் கிளம்பி பரிக்ரமா தொடங்குமிடமான டோராபுக் வந்தடைந்தோம். அங்கும் அரசு நடைமுறைகள் இருந்தன.ஆனாலும் கெடுபிடி இல்லை. அருகில் இருந்த(நுழைவாயில்கள் மட்டும்) யமதுவாரைக் கடந்து எங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

பரிக்ரமா செல்லாத நண்பர்களும் எங்களை வழி அனுப்ப வந்தனர். இங்கே எங்களைப்போல் பல குழுக்கள் இருந்தனர். இதில் குதிரைகளில் செல்வோரும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மூன்று நாள் பரிக்ராமா குறித்து இன்று சொல்ல முடியாது. நாளைதான் தெரியும் என்று பதில் கிடைக்க, பரிக்ரமா வராத நண்பர்கள் வழிகாட்டிகள் சொன்னதில் உண்மை இருக்கிறது போல என தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

பரிக்ராமா என்பது அனைவருக்கும் எளிதானதல்ல., சிரமம் தரக்கூடியதே., அதிலும் உடல்நிலை பாதிப்பு இருப்பின் திடீர் தட்பவெப்ப நிலை மாற்றம், மழை ஆகியவற்றை சமாளிக்க முடியாமல் ஓரிருவர் இறந்துபோவதும் உண்டு. இந்த தகவலை அனைவரும் கேள்விப்பட்டே இருந்தால் சகநண்பர்கள் குறிப்பாக வராதவர்கள், கிளம்பிய எங்களை மிகுந்த உணர்ச்சிக்குவியாலாக கட்டிப்பிடித்து கண்கள் கலங்க, பார்த்து எச்சரிக்கையாக சென்று வரும்படியும். அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என  வேண்டுகோளுடன் வழி அனுப்பி வைத்தனர்.

சூரிய பகவானின் கடைக்கண் பார்வை எங்கள் மீது படர, நாங்கள் நடந்து செல்ல ஆரம்பித்தோம். சுமார் பத்துபேர் தங்கள் சுமைகளை தாங்களே தூக்கிக்கொண்டு நடக்க.,இன்னும் பத்துப்பேருக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட சுமைதூக்கிகள் வந்து சேர்ந்தனர். மீதி பேருக்கு எங்கள் டிராவல்ஸ் உடன் வந்த ஷெர்பாக்கள் எனப்படும் உதவியாளர்கள் வந்தார்கள். நாம் கட்டிய பணம் இவர்களுக்குச் சேரும்.

நடக்க ஆரம்பித்ததும் மற்ற எண்ண ஓட்டங்களெல்லாம் குறைந்துவிட்டன. கீழே இருக்கிற படங்களை பாருங்களேன். நாந்தான் பெரிய ஆளு என்கிற எண்ணமெல்லாம் எவ்வளவு நகைப்புக்குரிய விசயம்., இயற்கையின் படைப்பில் நாம் ஒரு அற்ப புழுதான். இந்த மலையை பார்க்க, பார்க்க இதன் விஸ்தீரணம், விசுவரூபம் மனதில் அழுத்தமாக ஏறி உட்கார்ந்து கொண்டது.

பயணம் தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

8 comments:

Sankar Gurusamy said...

அற்புதமான பதிவு... படங்கள் மேலும் மெருகு கூட்டுகின்றன.

தொடருங்கள்...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

வெட்டிப்பேச்சு said...

//நாந்தான் பெரிய ஆளு என்கிற எண்ணமெல்லாம் எவ்வளவு நகைப்புக்குரிய விசயம்., இயற்கையின் படைப்பில் நாம் ஒரு அற்ப புழுதான். இந்த மலையை பார்க்க, பார்க்க இதன் விஸ்தீரணம், விசுவரூபம் மனதில் அழுத்தமாக ஏறி உட்கார்ந்து கொண்டது.

//


அற்புதமான பயணக் கட்டுரைகள். காண்பவற்றுடன் இயற்கையின் ஆளுமையை உண்மையிலேயே நன்கு எடுத்துரைக்கிறீர்..

நன்றிகள்.

God Bless You

தங்கவேல் மாணிக்கம் said...

கண் முன்னே கைலாச யாத்திரை. எழுத்துள்ளே இழுத்துக் கொள்கிறது.

Muna Dave said...

ரஜினி எப்போதும் சாகச தனது மனநிலையோடு அறியப்பட்டு வருகிறது. ராணா தனது படப்பிடிப்பு பிறகு அவரது சாகச திட்டங்கள் எனக்கு தெரியும் இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

DrPKandaswamyPhD said...

ஆஜர்

! ஸ்பார்க் கார்த்தி @ said...

நாந்தான் பெரிய ஆளு என்கிற எண்ணமெல்லாம் எவ்வளவு நகைப்புக்குரிய விசயம்., இயற்கையின் படைப்பில் நாம் ஒரு அற்ப புழுதான்.

ஆயிரத்தில் ஒரு வார்த்தை ,

பிரமிப்புடன் தொடர்கிறேன், !!!!!!!!!!!!!!!!!!!!!

VENKAT said...

படங்களுடன் உணர்வும் கலந்து அருமையாக சொல்லி வருகிறீர்கள்.பயனுள்ள சிறந்த பதிவு.

சாகம்பரி said...

நானும் கைலாய மலையின் அருகில் நிற்கிறேன். அத்தனை அருமையான பதிவு. திபெத்தியர்கள் இன்னும் கடினமாக பரிக்ரமா செய்வார்கள் என்று என் பெரியப்பா சொல்லியிருந்தார். இன்றும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.