"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, March 23, 2011

மண்ணின் வாசம் - பருப்பாம் பருப்பாம்

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் வீட்டுவாசலில்......


சின்னவள்:ஏய்., பருப்பாம் பருப்பாம் விளையாடலாம் வாடி..

பெரியவள்: சரி வா விளையாடலாம்..

பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்

சுக்கத்தட்டி சோத்துல போட்டு

குள்ளீம்மா குழலூத

ராக்காத்தா வெளக்கெடுக்கங்

கொப்பம் பேரென்ன?


சின்னவள்: ம்ம்.........கொழுத்தபன்னி

பெரியவள்: ஏய் அப்படி இல்லைடி ’முருங்கப்பூ’ அப்படின்னு சொல்லனும்

சின்னவள்: சொல்லமுடியாது. நீ ஏண்டி எங்கப்பாவை ’உங்கொப்பன்’னு சொன்ன....  போடி நா வரல விளையாட்டுக்கு....



3 comments:

  1. கொங்கு பேச்சு வழக்கில் உங்கொப்பன் என்பது மரியாதைக்குறைவான சொல்..

    குழந்தைகள் விளையாட்டுக்கூட அப்பாவை விட்டுத்தருவதில்லை:)

    ReplyDelete
  2. anbu nanbare idugai tamilil ida enkku theriavillai
    enakku udhavavum

    ReplyDelete
  3. ஹா ஹா ஹா ஹா சூப்பரு....

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)