"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 31, 2011

திமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(

எல்லா அரசியல் கட்சிகளுமே சம்பாதிக்க மட்டுமே ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை ஆற்ற அல்ல என்பதை நன்கு நாம் தெரிந்து வைத்திருந்தாலும் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என அடையாளம் காண வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.இவர்களுக்கு ஒத்து ஊதி தானும் சம்பாதித்து வளமாக இருக்கும் அரசு அதிகாரிகள் கூட்டம் இவர்களுக்கு அடிக்கும் ஜால்ரா சத்தம் காது கொடுத்து கேட்கமுடிவதில்லை.

இவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய மனிதர்கள் மட்டுமே எந்த ஆட்சி வந்தாலும் ஏற்றுக்கொண்ட கடமையை சரிவர, எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளித்து இன்னும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.


இதில் குறிப்பிடத்தக்கவர் கலெக்டர் சகாயம் அவர்கள். இவரைப்பற்றி மாப்பு ஈரோடு கதிர் மற்றும் பெருமாள் முருகன் எழுதியதை சற்றே வாசித்து விட்டு வந்துவிடுங்கள்.

ஈரோடு கதிர்

பெருமாள்முருகன் 1

பெருமாள்முருகன் 2

பெருமாள்முருகன் 3

திரு சகாயம் அவர்கள் தனது பணியை எந்த பாராபட்சமின்றி செய்யக்கூடியவர் என்பது மேல்கண்ட இணைப்புகளை படித்தாலே எளிதில் விளங்கும்.

மதுரை கலெக்டராக இருந்த காமராஜ் ஈரோடு மாவட்ட கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த சகாயம் தற்போது மதுரை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து சகாயம் மார்ச் 22 ந்தேதி காலை 11:30 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். இவரது நடுநிலையான நடவடிக்கைகள் தவறு செய்பவர்களுக்கு இடையூறாக அமைந்திருக்கிறது.

ஆளுங்கட்சியின் கட்டளைக்கு கீழ்படியாததால்     இன்று வழக்கை சந்திக்க வேண்டிய சோதனை:(

இதை மறுத்து திரு.சகாயம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இது..

இந்த திமுகவின் நடவடிக்கைக்கு என் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்வது எனது கடமை என நினைக்கிறேன். திரு சகாயம் அவர்களுக்கு இச்சமயத்தில் ஆதரவு குரல் கொடுப்பது அவசியம் எனவும் கருதுகிறேன்.ஈரோடு கதிர் அவர்களின் இடுகை

உங்கள் கருத்துகளை தெரிவியுங்களேன்
Post a Comment