"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 29, 2011

தேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.

தேர்தல் வந்தாலும் வந்தது. வழியில் செக்போஸ்ட் நடவடிக்கைகள் வேடிக்கையாகவே இருக்கின்றன. சரி அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!! தேர்தல் கமிசன் என்ன சொல்லி இருக்கு. வாகனங்களை சோதனையிட்டு ஒரு லட்சத்திற்கு மேல் பணமாகவோ, அல்லது சந்தேகப்படும்படியான இலவசத்திற்கான பொருள்களோ இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்.



என்னைப்போன்ற திருப்பூரில் வேலை சம்பந்தமாக இரு சக்கரவாகனத்தில் ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 5 அல்லது 6 முறை இந்த செக்போஸ்ட் ஐ தாண்ட வேண்டியதாக இருக்கிறது. இதில் மூன்று அல்லது நான்கு முறை எந்த சோதனையும் இருக்காது. காலை 8.30 முதல் வேலைக்கு வரும் நபர்களை சோதனை இட வேண்டியது. அதில் எந்த இலவசத்திற்கான பணமும் இருக்காது என்று தெரிந்தே இருந்தாலும் லைசென்ஸ் இல்லை, வாகன உரிமை நகல் இல்லை என வண்டியை ஓரங்கட்டச் சொல்லிவிடுவார்கள்.

ஒரு ரிஜிஸ்டரில் வண்டி நெம்பர். நம் பெயர், லைசென்ஸ் நெ. என்ன விசயத்திற்காக போகிறோம், எங்கே, செல்பேசிஎண் என முழு விவரங்களையும் பதிந்துவிடுவார்கள். இதில் என்ன பயன் என்று எனக்கு தெரியவில்லை. இது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாகவே எனக்கு படுகிறது. நானும் வேலை செய்றேன் என்று காண்பிக்க மட்டுமே பயன்படும் அல்லது புதிய குற்றவாளிகளை அடையாளம் காண ஒரு வேளை உதவலாம்.

நானே தினமும் இரண்டு முறை முகவரி கொடுத்துவிட்டுதான் வருகிறேன். ரிஜிஸ்டர் நிரம்புவதும மட்டுமே பலன்:)

இவர்கள் கடமையாற்றுவது காலை ஒருமணிநேரம், மற்றும் மாலை இரண்டு மணிநேரம் மட்டுமே. மற்ற நேரங்களில் நிற்பார்களே தவிர எந்த சோதனையும் இருக்காது. ஒருவேளை சந்தேகப்படும் வாகனங்களை மட்டும் பரிசோதிப்பார்களோ என நான் நினைப்பதுண்டு.இந்த செக்போஸ்ட் வழியாக தாராளமாக எவ்வளவு பணம், பொருள் பகலிலேயே போனாலும் தெரியாது. காலை மாலை அந்த குறிப்பிட்ட நேரத்தில் யாரவது கொண்டுவந்தால் மட்டுமே மாட்டிக்கொள்வார்கள்.

காவல்துறையினர் 12 மணிநேரத்தில் 3 மணிநேரம் மட்டுமே சோதனை செய்தால் எப்படி தேர்தல் கமிசனின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். நான்கு அல்லது ஐந்து காவலர்கள் மட்டுமே இருக்கின்றனர். சுமார் 20 பேராவது இருந்தால்தான் அனைத்து வாகனங்களையும்
தொடர்ந்து சோதனை இட முடியும். இதை தேர்தல்கமிசன் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதில் முக்கியமான வித்தியாசம காவல்துறையினருக்கே உரித்தான அதிகாரக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. காரணம் எந்த சிபாரிசும் இனி தேர்தல் முடியும் வரை எடுபடாது, எனவே மாட்டிக்கொள்பவர் எவ்வளவு பெரிய ஆளானாலும் காவல்துறையினர் அடிபணிய வேண்டியதில்லை. வரவேற்க வேண்டியதுதான்.:)ஆனால் கடந்த காலங்களில் மாட்டிக்கொள்பவரை முழுமையாக பொறுமையாக விசாரித்து எந்த சிபாரிசும் இல்லை எனத் தெரிந்தால்தான் கேசு போடவோ, காசு வாங்கவோ செய்தனர்.

தேர்தல் கமிசன் உத்தரவு பணப்பரிமாற்றத்தில் சிரமத்தை மட்டுமே ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தடுக்கவில்லை. .இன்னும் அரசியல் கட்சியினரோ பணம் பட்டுவாடா விசயத்தில் ’முன்னர் இருந்த இடத்திற்கு பணம் வந்து சேரும்.இப்போ கெடுபிடி அதிகமானதால் போய் வாங்கிக்கிறோம் அவ்வளவுதான்’ என்றே சொல்கின்றனர்.

இதில் மாட்டிக்கொள்வது அனைவருமே சாதரண வியாபாரிகள்தான் இதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ஆக தேர்தல் கமிசன் நோக்கம் நல்லதுதான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் நிறைய ஓட்டைகள். சரி செய்தால் நன்றாக இருக்கும்.


3 comments:

  1. நீங்கள் சொல்வது சரி தான். அரசியல் கட்சிகளின் முந்தைய கால தவறுகளினால் பாதிப்பு மக்களுக்கு தான்.

    ReplyDelete
  2. அன்பு நண்பருக்கு உங்கள் மூலம் ப்ளாக் பற்றி தெரிந்துகொண்டேன்

    ப்ளாக் வடிவமைப்பு பற்றி எனக்கு சொல்லவும் எனது ப்லோகை பார்க்கவும் எனக்கு ப்ளாக் வடிவமைப்பு தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யவும் எனது ஈமெயில் sonofcoimbatore@ஜிமெயில்;.com

    ReplyDelete
  3. அன்பு நண்பருக்கு வணக்கம், தங்கள் குறிப்பிட்ட சந்த்ரசேகர் அவர்களை தொர்புகொண்டேன், இன்னும் இரண்டு வாரத்தில் சுற்றுலா சம்பந்தமான் தகவல்களை தெரிவிக்கிறேன் என அவர் சொல்லியுள்ளார், இந்த வருடம் தங்களை சந்திப்பேன் எனநினைக்கிறேன்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)