"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 1, 2010

மனித உருவில்...மனதின் கோரம்

ரஞ்சித்குமார் ஜெயின்(40); துணிக்கடை வைத்துள்ள இவர் நூல் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது மகள் முஸ்கின்(11), மகன் ரித்திக்(8). இருவரும் தனியார் பள்ளியில் 5 மற்றும் 3ம் வகுப்பில் படித்து வந்தனர். கடந்த வெள்ளியன்று, குழந்தைகள் இருவரும் பள்ளி செல்வதற்காக வீட்டருகே, ஆம்னி வேனுக்காக காத்திருந்தனர். அப்போது வந்த ஆம்னி வேனில் ஏறிய இருவரும் கடத்தப்பட்டனர்......


..... பொள்ளாச்சிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மற்றொரு கால் டாக்சி டிரைவர் மனோகரை தன்னுடன் அழைத்துக் கொண்டு திருமூர்த்தி மலை நோக்கி சென்றுள்ளான்.  மலைப்பகுதிக்கு வேன் செல்லும் போதே, சிறுவன் ரித்திக்கின் கை, கால்களை கட்டி, பின் சீட்டுக்கு அடியில் கிடத்தி உள்ளனர்.

இதன் பின் முன்சீட்டில் அமர்ந்திருந்த மோகன்ராஜ், கதறிய சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளான். இதற்கு, உடன் வந்த டிரைவர் மனோகரனும் உதவி செய்துள்ளான்.

 இதன்பின், இருவரையும் மிரட்டி, கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட வைத்துள்ளனர். இதன் பின் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். பாதிதூரம் சென்றதும் அதற்கு மேல் நடக்க முடியாது எனக்கூறி குழந்தைகள் அங்கேயே உட்கார்ந்து விட்டனர். வேறு வழியில்லாமல் மீண்டும் மலை அடிவாரத்துக்கு வந்தனர்.

தயாராக கொண்டு வந்திருந்த பாலில் சாணிப்பவுடரை கலக்கி குடிக்க கொடுத்துள்ளனர். சாணிப்பவுடர் கலந்த பாலை வாயில் ஊற்றியதும் கசப்பதாகக்கூறி குழந்தைகள் அழுததோடு,அதை கீழே துப்பி விட்டனர்.

ரகசியமாக பேசிக் கொண்ட டிரைவர்கள் இருவரும், வேனில் இருந்து பிளாஸ்டிக் பேக்கை கொண்டு எடுத்து வந்து கழுத்தை இறுக்கி உள்ளனர். மூச்சுத் திணறிய இருவரும் சத்தமாக கத்தியுள்ளனர். இதில் பயந்து போன டிரைவர்கள் இத்திட் டத்தையும் கைவிட்டு விட்டனர்.

 தொடர்ந்து, இருவரையும் சாப்பிடச் சொல்லி மீதமிருந்த டிபன்பாக்சையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். அழுது கொண்டே சாப்பிட்டு முடித்த குழந்தைகளை, அருகில் உள்ள கால்வாயில் கை கழுவும்படி மோகன்ராஜ் கூறியுள்ளான். பயந்து போன சிறுமி, வாட்டர் கேனில் உள்ள நீரில் கையை கழுவிக் கொள்வதாக தெரிவித்து உள்ளாள்.  உடனே, சிறுவன் ரித்திக்கை கால்வாயில் கைகழுவ அனுப்பினான். சிறுவனும் வாய்க்காலில் ஓடும் நீரில் கை கழுவிக் கொண்டு திரும்பினான். அப்போது டிரைவர் மோகன்ராஜ், "யாரையும் தண்ணீரில் தள்ளி விடமாட்டேன். தம்பியை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்று கை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் எடுத்து வா' என, அன்பாக பேசியுள்ளான். உண்மை என நம்பிய முஸ்கின், தனது தம்பியுடன் சென்று, கால்வாயில் கை கழுவிக் கொண்டிருந்தாள். சிறுவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்த டிரைவர்கள், கீழே குனிந்து இருவரையும் ஓடும் நீரில் தள்ளினர். கதறியபடியே மூழ்கிய குழந்தைகளை நீர் அடித்துச் சென்றது.  இரக்கமற்ற இக்கொலையில் ஈடுபட்ட டிரைவர்களில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு ,சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான மற்றொரு டிரைவர் மனோகரனை போலீசார் தேடி வருகின்றனர்


நன்றி தினமலர்

http://www.dinamalar.com/district_detail.asp?id=118006


உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை..:((

நிகழ்காலத்தில் சிவா

4 comments:

  1. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை..:((

    ... :-(

    ReplyDelete
  2. இந்த தகவலை அரசல் புரசலாக தலைப்பைப் படிக்கவே பதைத்தது......!
    :((((((((((

    ReplyDelete
  3. கொடூரம்! கொடுரம்! வாசிக்கும் போதே நடுங்குகின்றது. மக்களும் மகேசனுகளும் கேடு கெட்ட தமிழகம்!!!

    ReplyDelete
  4. இவங்களை விசாரணையே இல்லாம கொன்னுரலாம்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)