"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, July 13, 2010

எளிதில் நலம் தரும் இனிமா.

மலச்சிக்கல் நீங்க  வேண்டும், நமது உணவுப் பழக்கத்தை எளிதில் மாற்றவும் முடியாது. அதேசமயம் வயிறு பிரச்சினை பண்ணக்கூடாது. இதன் தொடர்ச்சியாக வேறு நோய்களும் அதிகப்படக்கூடாது என எண்ணுகிறீர்களா..

கீழ்கண்ட விவரங்களை, சில நிமிடங்கள் ஒதுக்கி படியுங்கள். கருத்துகளை கூறுங்கள்..










நான் கடந்த ஒன்றரை வருடங்களாக பயன்படுத்தி, உடல்நலம் பராமரிப்பு என்கிற வகையில் பலன் அடைந்துள்ளேன்.  நீங்களும் நலம் பெற முயற்சித்துப் பாருங்களேன். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள்..

கூரியரில் அனுப்புவார்கள்..படங்களை ’கிளிக்’ செய்து முழுமையாக பாருங்கள்

வாழ்த்துகளுடன்..
நிகழ்காலத்தில் சிவா

5 comments:

  1. இயற்கை நலவாழ்வியலை கடைப் பிடிப்பவன் என்ற வகையில் தங்கள் பதிவு கண்டு பாராட்டி மகிழ்கிறேன். நான் முழு பாவகை உணவுகளை கடைப்பிடிப்பவன். எனது வலைப்பூ வாழி நலம் சூழ..வை தாங்கள் படித்து வருவது கண்டு நன்றியுடன் வணங்குகிறேன்.
    வாழி நலம் சூழ..

    --
    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
    ---------------------------------------------------
    பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
    ----------------------------------------------------
    வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
    வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

    ReplyDelete
  2. அன்புள்ள நண்பருக்கு நன்றிகள். நீங்கள் விரும்பி படிக்கும் தளங்களில் எனது தளத்தையும் இணைத்ததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. Enimaa thanneerai ulle seluththum pipe eppadi kettu vaanguvathu?

    ReplyDelete
  4. ஒரு விசயத்தை இங்கு அனைவருமே கவனத்தில் கொள்ளவும்

    இயற்கை எனிமா என்ற நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் எனிமாவில் நீரின் அளவு முக்கியம்
    எனிமா குவளை அநேகமாக ஒன்றரை டம்ளர் நீர் கொள்ளளவு பிடிக்கும். சுமார் 400 மிலி லிட்டர்

    இந்த அளவு மட்டும் தண்ணீர் பயன்படுத்தி தினமும் அல்லது வாரத்தில் சிலநாட்கள் அல்லது மாதத்தில் சிலநாட்கள் என
    எனிமா எடுப்பதில் எள்அளவும் கெடுதல் கிடையாது என்பதை அறிக.

    சரி எப்போது கெடுதல்? நீரின் அளவை ஆர்வக்கோளாறால் அல்லது இன்னும் எனக்கு முழுமையாக கழிவுகள்
    வெளியேற வில்லை என்ற எண்ணத்தில் அதிகப்படுத்துவது..அதாவது இரண்டு டம்ளர் தண்ணீர் ஏற்றுவது தவறு.
    மலக்குடல் இந்த அளவு நீரை ஏற்றுக்கொள்ளும் என்பது வேறுவிசயம்

    மலக்குடலில் மலம் சேர்ந்தாலும் அது முழுமையான மலம் என்ற தகுதி அடையாத நிலையில் உடலுக்குத் தேவையான
    சத்துகளை உள்ளடக்கியே இருக்கும்..சற்று நீர்த்தே இருக்கும்..அங்கிருந்து தேவையானவற்றை உடல் உறிஞ்சி எடுத்தபின்
    மேலும் இறுகி மலம் என்ற நிலையில் வெளியேறத் தயாராக இருக்கும்..

    அளவான தண்ணீர் பயன்படுத்தி எடுக்கும் இயற்கை எனிமா இந்த தகுதியான மலத்தை மட்டும் வெளியேற்றும்..நீரின் அளவு
    அதிகப்படுத்தினால் அது சற்று சத்துகள் அடங்கிய மலத்தையும் வெளியே கொண்டுவந்துவிடும்..அதனால் களைப்பு
    உடல் அதிகமாக இளைத்தல் போன்றவை ஏற்படலாம்.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாவதுபோல்தான் எனிமாவும்..

    ஆக உங்களுக்கு மனதில் தயக்கம் இருந்தால் எனிமா வேண்டாம்..நம்பிக்கை இருப்பின்
    தயங்காது தேவைப்படும்போது பயன்படுத்துங்கள். எந்த பின்விளைவுகளும் ஏற்படாது..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)