"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, July 21, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 8

மானசரோவர் ஏரி  கண்களில் பட்டதுமே சிறு குழந்தை போல் உள்ளம் துள்ளியது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். கடலைப் போல் பரந்து விரிந்து கிடந்தது ஏரி. வாகனத்தை விட்டு இறங்கியதுதான் தாமதம். எப்போது மானசரோவரில் நீராடலாம் என்கிற ஆர்வம் அடக்க முடியாததாக இருந்தது.

வழிகாட்டியிடம் இங்கிருந்து திருக்கைலாய தரிசனம்  காண முடியுமா எனக்கேட்டோம். எங்கும் மேக மூட்டமாக இருக்க வலதுபுறம் கவனிக்கச் சொன்னார். திரும்பிப் பார்த்தால் அங்கும் மேகமூட்டம், சற்று ஏமாற்றமாக கவனிக்கத் துவங்கினோம்.

வாங்க வாங்க உங்களுக்கு இல்லாத தரிசனமா. , ஆசை தீர பாருங்க என்று சொல்லும் விதமாக சுமார் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக கைலையங்கிரி நாதர் தன்னைச் சுற்றிலும் இருந்த மேகத்தை மட்டும் விலக்கி காட்சியளித்தார்.


தீவிரமான சைவ வழிமுறைகளிலோ,வழிபாடுகளிலோ ஈடுபடாத எனக்கு இறைசக்தி சிறப்பான வரவேற்பையும், அங்கீகாரத்தையும் கொடுத்ததாக உணர்ந்தேன்:)

இதை நான் இங்கே தொடர்புபடுத்திக் காட்டுவதன் உள்ளர்த்தம், நன்கு படிக்கும் மாணவனுக்கு எப்படி கூடுதலான கவனிப்பு ஆசிரியரிடத்தில் இருந்து கிடைக்குமோ, அதுபோல் எல்லோருக்கும் இறை எல்லாவற்றையும் வழங்கினாலும் எனக்கென இன்னும் சிறப்பு வாய்ந்த தருணங்களை வழங்கப்போகிறது என்பது  குறிப்பால் உணர்த்தப்பட்டதாக உணர்ந்தேன்.

தற்செயலாக நடந்ததுக்கு இவ்வளவு பில்டப்பா என யாரேனும் கேட்கலாம்:) தற்செயல் என்பது  எதுவுமில்லை. நடந்த நிகழ்வுக்கு காரணிகளை அறியும் திறன்/இணைத்துப் பார்க்கும் திறன்  நமக்கு இல்லையே தவிர நடப்பது எதுவும் தனித்தனியானது அல்ல என்பது என் கருத்து:)

போதும் என்கிற அளவு தரிசனம் செய்துவிட்டு குளிக்கச் சென்றேன்.  நாங்கள் சென்றபோது இறைகருணையால் நல்ல வெயில் அடித்தது. வழக்கமாக இப்படி இருக்காதாம். (அங்கீகாரம்?)  குளிர் அல்லது கடுங்குளிரே நிலவும். மானசரோவரில் நீராடுவது என்பது சவாலான விசயம். அதுமட்டுமல்ல காட்மண்டுவில் நாங்கள் சந்தித்த சென்னை அன்னபூரணி டிராவல்ஸ் செந்தில் அவர்கள் சொன்னது எக்காரணம் கொண்டு மானசரோவரில் ஐந்து நிமிடத்திற்கு மேல் நீராடாதீர்கள். காரணம் உடலின் வெப்பநிலை குறைந்துவிட்டால் மீண்டும் பழைய நிலைக்கு வருவது சிரமம்.  இருக்கின்ற வெப்பத்தை இழக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மூன்றுமுறை முழுகி எழுந்து வந்துவிடுங்கள் என்றார்.

எங்கள் குரூப்பில் சென்ற வருடம் வந்த ஒரு நண்பர் டிரெட்மில்லில் பயிற்சி எடுத்து மிகவும் துடிப்பாக இருந்தவர், என்னால் பரிக்கிராமா செய்ய முடியும் என அறுதியிட்டு சென்னவர் மானோசரவர் நீரில் குளித்துவிட்டு காய்ச்சலில் விழுந்தவர் திரும்ப வரும் வரை படுக்கையை விட்டு எழவே இல்லை. ஆக உஙகள் மனம் நினைப்பது வேறு. உடல் ஒத்துழைப்பது என்பது வேறு. புரிந்து கொண்டு மானோசரவரில் நீராடுவதில் ஆர்வத்தைவிட நிதானமே முக்கியம் எனப்தை கவனித்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீராடவில்லை எனில் எந்த தவறுமேஇல்லை. சற்று தீர்த்தத்தை அள்ளி தலையில் தெளித்துவிட்டு வந்துவிடுங்கள்:)


உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேளுங்கள்:)  இதெல்லாம் உங்களின் பாதுகாப்பு கருதியும், குழுவிற்கு நம்மால் சிரமம் ஏற்படாமல் இருக்கவும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி இன்னொருவிதமாகவும் பார்ப்போம். அப்படி நீராட முடியாத நிலையில் உங்கள் உடல்நிலை இருக்குமானால், உங்களுக்கு எதுக்கு இந்த யாத்திரை? இதை நினைவில் கொண்டு இன்றிலிருந்தே உடல்நலம் பேணுவதில் அக்கறை காட்டுங்கள். இதை உங்கள் இயல்பாக்குங்கள்:)

யாத்திரை தொடரும்
நிகழகாலத்தில் சிவா

4 comments:

  1. அற்புதமான விளக்கங்கள். அருமையான கைலை நாதன் புகைப்படம். தொடருங்கள்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. மானோசரவரில் நீராடுவதில் ஆர்வத்தைவிட நிதானமே முக்கியம் எனப்தை கவனித்தில் வைத்துக்கொள்ளுங்கள்.//

    அற்புதமான படங்களும், அருமையான கருத்துக்கள் ,பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. கைலைநாதரை தரிசிக்க ஐந்து நாட்கள் காக்க வைத்து விட்டீரே நண்பரே! தினமும் உங்கள் பிளாக்கை பத்து தடவைக்கு மேல் பார்ப்பேன். ம்ஹூம் .... இப்போதாவது தரிசன் கொடுத்தீரே நன்றி!.......
    ///தற்செயலாக நடந்ததுக்கு இவ்வளவு பில்டப்பா என யாரேனும் கேட்கலாம்/// தற்செயலாக நடப்பதில்லை என்பதுதான் எனது கருத்து.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)