"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, October 10, 2009

உருவ வழிபாடு ஏன்?

உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.

இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies

இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்


முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.

அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்


ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

---வேதாத்திரி மகரிஷி,

தொடரும்



டிஸ்கி; வேதாத்திரி மகரிஷி அவர்களின் இந்த கட்டுரை எளிமையாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ளதாக நான் எண்ணுவதால் இன்னும் சில பகுதிகள் தொடரும்.

20 comments:

  1. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

    நீ என்ன நினைக்கிராயோ, அதுவாகவே நீ மாறுகிறாய்.

    ReplyDelete
  2. உருவ வழிபாடு தெய்வீக குணங்களின் குறியீடு. உருவ வழிபாடு தவறுகிடையாது. உருவ வழிபாடு வாழ்க்கைக்கு உதவும், ஆன்ம விடுதலைக்கு உதவாது என்பர், ஆன்மிக இறுதி நிலை அளவில் சென்ற முன்னோர்கள் யாரும் உருவ வழிபாட்டில் கவனம் செலுத்தியது கிடையாது.

    ReplyDelete
  3. அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    தனிபெரும்கருணை..!
    அருட்பெருஞ்சோதி..!

    ReplyDelete
  4. \\சிங்கக்குட்டி said...

    எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
    நீ என்ன நினைக்கிராயோ, அதுவாகவே நீ மாறுகிறாய்.\\

    இதை உணர்ந்தால் போதும் வாழ்க்கை நிம்மதியாக நடக்கும்

    ReplyDelete
  5. \\ஆன்ம விடுதலைக்கு உதவாது என்பர், ஆன்மிக இறுதி நிலை அளவில் சென்ற முன்னோர்கள் யாரும் உருவ வழிபாட்டில் கவனம் செலுத்தியது கிடையாது.\\

    அதையே பிடித்துக்கொண்டிராமல் தாண்டிச் சென்று விட்டார்கள்,

    நம் மக்கள் தாண்டிப்போகும் நுட்பம் தெரியாமல் சிக்கி விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் :-(

    ReplyDelete
  6. \\ ஸ்வாமி ஓம்கார் said...

    அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    தனிபெரும்கருணை..!
    அருட்பெருஞ்சோதி..!\\

    மகா மந்திரம்...

    வேறென்ன சொல்ல..!!!

    உள்ளே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.!

    ReplyDelete
  7. //மகா மந்திரம்...

    வேறென்ன சொல்ல..!!!

    உள்ளே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.!//

    உள்ளே இது ஓட வெளியே உருவம் எதற்கு ...

    ReplyDelete
  8. உருவ வழிபாடு தந்திரா முறைகளில் ஒன்றெனக் கேள்விப் பட்டிருக்கிறேன்,சிவா.
    மனித மனதுக்கு மனித உடலை விட நெருக்கமான பொருள் வேறுதுவுமில்லை.அதனால் பிரபஞ்ச சக்தியை மனித உடலாகவே பாவித்து வழிபடுவது ஒரு டெக்னிக்காகப் பயிலப் படுகிறது என்கிறார்கள்.
    கோவில் விக்கிரகங்களுக்கு உடலுக்குச் செய்யப் படும் அனைத்து சாங்கியங்களும் இதனைக் கருத்தில் கொண்டே செய்யப் படுகின்றன.

    ஸ்வாமி ஓம்கார் சொல்வது,இதனைத் தாண்டி அனைத்தையும் ஜோதி என்ற குறியீடாகப் பார்க்கும் முதிர்ச்சி.

    முதிர்ச்சி என்றாலும் அதுவும் குறியீடே.

    எதுவுமற்ற/எல்லாமுமான ‘அதனை’ மனம் என்ற ஊடகத்தினால் இவ்வளவுதான் காட்ட முடியும்.

    ஆழ்ந்த விஷயத்தைத் தொட்டிருக்கிறீர்கள்.
    மகிழ்ச்சி,சிவா.

    ReplyDelete
  9. //நம் மக்கள் தாண்டிப்போகும் நுட்பம் தெரியாமல் சிக்கி விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் :-(//

    :)

    தொழில் நுட்பங்கள் கார்ப்ரேட் நிறுவனங்களில் விற்கப்படுகின்றன.

    ReplyDelete
  10. //அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.
    //
    பொருள்: கேள்வரகில் நெய் வடிவதாகச் சொன்னார்கள்.

    ReplyDelete
  11. ஷண்முகபிரியன் சொன்னது நம்மிடம் இருந்தால் நடக்க தொடங்கி இருக்கிறோம் என்று அர்த்தம். கோவி கண்ணன் கருத்து நம்மிடம் வந்து இருந்தால் பாதை புலப்பட்டது என்று அர்த்தம். ஸ்வாமி ஓம்கார் சொல்லியிருந்ததை உணர்ந்தது இருந்தால் உங்களை பாதையின் அல்லது முடிவின் இறுதிக்கு அருகே உறுதியாக பயணித்துக்கொண்டுருக்கிறோம் என்று அர்த்தம். வருத்தப்பட்டு பாரம் சுமந்து பயணித்துக்கொண்டுருப்பவர்களுக்கு சிவா நீங்களும் ஒரு மேய்ப்பன் தான்.

    ReplyDelete
  12. //மகா மந்திரம்...

    வேறென்ன சொல்ல..!!!

    உள்ளே ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.!//

    உள்ளே இது ஓட வெளியே உருவம் எதற்கு ...


    அரிசிக்கு உமி எதற்கு...(பாதுகாப்புக்கு)

    ஆனால் இந்த உண்மை பலருக்கும் புரியாததால் மாற்றி உடலை அரிசியாகவும் உயிரை உமியாகவும் நினைத்து வாழ்வதால் இந்த நிலை:)))

    ReplyDelete
  13. \\ஷண்முகப்ரியன் said...

    உருவ வழிபாடு தந்திரா முறைகளில் ஒன்றெனக் கேள்விப் பட்டிருக்கிறேன்,சிவா.
    மனித மனதுக்கு மனித உடலை விட நெருக்கமான பொருள் வேறுதுவுமில்லை.அதனால் பிரபஞ்ச சக்தியை மனித உடலாகவே பாவித்து வழிபடுவது ஒரு டெக்னிக்காகப் பயிலப் படுகிறது என்கிறார்கள்.
    கோவில் விக்கிரகங்களுக்கு உடலுக்குச் செய்யப் படும் அனைத்து சாங்கியங்களும் இதனைக் கருத்தில் கொண்டே செய்யப் படுகின்றன.\\

    மனித மனத்திற்குதான் இவையெல்லாம், சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள்

    \\ஓம்கார் சொல்வது,இதனைத் தாண்டி அனைத்தையும் ஜோதி என்ற குறியீடாகப் பார்க்கும் முதிர்ச்சி.

    முதிர்ச்சி என்றாலும் அதுவும் குறியீடே\\

    ஸ்வாமி சொல்லும் முதிர்ச்சி நமக்கும் வரும், ஆனால் குடும்பவாழ்வில் இருப்பதால் நாம் விருப்பப்பட்டாலும், நமக்குரிய சில கடமைகளை நிறைவேற்ற வேண்டி இருப்பதால் மனம் ஒத்துழைப்பதில்லை, ஆகவே கோழி அடைகாப்பதுபோல் பொறுமை காக்க வேண்டியதாகிறது

    \\எதுவுமற்ற/எல்லாமுமான ‘அதனை’ மனம் என்ற ஊடகத்தினால் இவ்வளவுதான் காட்ட முடியும்.\\

    திரைக்கதையை சில நிமிடங்களில் சொல்லி விடலாம், பின்னர் அதை விரித்து இரண்டு மணி நேரம் சொல்லலாம், இதில் திரைக்கதையை சரியாக புரிய வைத்து விட்டால் எல்லாமே எளிதாகிவிடும்.

    அந்த விதமா கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன், தாங்கள்தான் வழிநடத்த வேண்டும் :))

    ReplyDelete
  14. \\கோவி.கண்ணன் said...

    //நம் மக்கள் தாண்டிப்போகும் நுட்பம் தெரியாமல் சிக்கி விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் :-(//

    :)

    தொழில் நுட்பங்கள் கார்ப்ரேட் நிறுவனங்களில் விற்கப்படுகின்றன.\\

    நம் மீது நம்பிக்கை கொள்வோம்,

    கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்வதையும் கேட்போம்,

    யார் யாருக்கு என்னென்ன தேவையோ எடுத்துக்கொள்வோம். அங்கு எல்லாமுமே கலந்துதான் இருக்கும். :))

    ReplyDelete
  15. \\குலவுசனப்பிரியன் said...

    //அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.
    //
    பொருள்: கேள்வரகில் நெய் வடிவதாகச் சொன்னார்கள்.\\

    தென்பாண்டி நாட்டாரே

    விழித்திரு தனித்திரு பசித்திரு இது சாதரண வார்த்தைகள் அல்ல

    விருப்பம் இருந்தால் காத்திருங்கள்:))

    நிறைகுடம் தழும்பாது அதே சமயம் எதையும் ஏற்றுக்கொள்ளாது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. \\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

    நடக்க தொடங்கி இருக்கிறோம்,

    பாதை புலப்பட்டது என்று அர்த்தம்.

    உங்களை பாதையின் அல்லது முடிவின் இறுதிக்கு அருகே உறுதியாக பயணித்துக் கொண்டுருக்கிறோம் என்று அர்த்தம்.\\

    ஜோதிஜி, நாம் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள் என்று பார்த்துகொள்ளுங்கள் ,

    நல் ஆசிரியர்களாக நமக்கு நண்பர்கள் அமைந்ததுக்கு இறைக்கு நன்றி சொல்வோம்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. நல்லா இருக்குது விளக்கம்...

    ReplyDelete
  18. \\அமுதா கிருஷ்ணா said...

    நல்லா இருக்குது விளக்கம்..\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதா அவர்களே..

    ReplyDelete
  19. Kathir Kathirvelu
    மனம் என்ற கரணங்கள் கண்கள் என்னும் இந்திரியங்கள் மூலமாக செயல்படுகின்றது.ஆதலால் கண்கள் பார்ப்பது மனதில் பதிவாகும்.மனதில் பதிவாவது ஜீவனில் பதிவாகும்.ஜீவனில் பதிவாவது, ஆன்மாவில் பதிவாகும்.ஆதலால் உருவங்களை பார்த்து வழிபாடு செய்பவர்கள்,எக்காலத்திலும் உண்மையை உணரமுடியாது.அதனால் தான வள்ளலார் உருவவழிபாட்டை வேண்டாம் என்று சொன்னார்.உயிரும் ஒளி,கடவுளும் ஒளியாக உள்ளார்.ஒளியை வழிபாடு செய்தால் கண்களின் ஒளிமூலமாக மனம் என்னும் ஓலியில் கலந்து ஜீவன் ஓளிமூலம் ஆன்மாஎன்னும் ஓலியில் பதிவாகும்.அப்பொழுது அருட்பெருஞ்ஜோதியுடன்.இங்திரியங்கள்,கரணம்,ஜீவன் ,ஆன்மா அனைத்தும் தொடபு கொள்ளும்,அப்பொழுது உண்மைகள் தானே விளங்கும்.கூட்டம் சேரவேண்டும் என்பதற்க்காக மக்களை அறியாமையில் தள்ளி விட்டுக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வேளையில் சிலகூட்டங்கள் ஆன்மீகம் என்ற பெயரில் பொய்யான கற்பனைகளை சொல்லி ம்க்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.அதையும் உண்மை என்று நம்பி மக்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆத்லால் தான் வள்ளலார் கலையுறைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண் மூடிபழக்கமெல்லாம் மண்மூடிப்போக என சாடுகிறார்.ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா ஜோதி தன்னையே நினைமின்கள் சகம் பெற விழைவீர்,இது மேலேறும் வீதி, மற்றை வீதிகள் கீழ் செல்லும் வீதி என்றார்,இதுவரை இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள்.புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கிறேன்.என்றும்.வைதாலும் வைதிடுமின் வாழ்த்தென கொண்டுடுவேன் மனம் கோனெண் மானமெல்லாம் போன் வழிடுத்தேன் நீவிரெல்லாம் புனிதம் முறுபொருட்டே.என்று நம்மையெல்லாம் அழைகிறார்.அடுத்து மற்றவர்கள் ஏதாவது ஒன்று சோல்ல கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளியுண்டாகும்.அதனால் பல்லிலித்து இருமாந்து கெட நேரிடும்.ஆதலால் எதையும் நம்பவேண்டாம்.நம்மை இயக்கும் உயிர் ஒளியை தொடர்பு கொள்ளுங்கள்.அது வேரெங்கும் இல்லை நம் சிரநடுவில் இருக்கிறது.அதற்கு சிற்சபை என்று பெயர்.சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தியெல்லாம் சத்தியம் சேர்ந்திடுமே,என்று சத்தியம் வைத்து சொல்கிறார் வள்ளலார்.அவர் எழுதிய அருட்பாவில் அனைத்து உண்மைகளையும் தெரியப்படுத்தியுள்ளார்.படித்து பயன் பெருங்கள்.ஆன்ம நேயன்;-கதிர்வேலு

    ReplyDelete
  20. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
    (First 2 mins audio may not be clear... sorry for that)

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (part 2)

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (part 3)

    Online Books
    http://www.vallalyaar.com/?p=409

    Guru:
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)