"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, October 6, 2009

பணமும் பெரியாரும்... பாரதியும்....

பணம் நமது வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிவிட்டது.,

திறமைகள் இருந்தும், தகுந்த தொழிலோ, வேலையோ செய்தும் போதுமான பணம் வருவதில்லை. ஏன்?

பணம் வரும் வழிதான் என்ன? இதில் நம் பங்கு என்ன?

பணத்தின் மீது பற்றும் அக்கறையும் வைத்துக் கேட்டால்தான் பணம் வரும்.

தந்தை பெரியார் ஒரு மாபெரும் அறிஞர். அவர் இந்த பணவிசயத்தில் மிக சரியாகவும், தெளிவாகவும் சிந்தித்தார். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அவர் முதலில் கேட்கும் கேள்வி. “ புத்தகம் எத்தனை ரூபாய்க்கு விற்றது?” என்பதுதான்.

மக்கள் அவரிடம் நினைவுக்குறிப்பில் கையொப்பம் கேட்டால்கூட. ‘இருபத்தி ஐந்துகாசு’ இன்றைய கணக்குப்படி இருபத்தி ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம், வாங்கிக்கொண்டுதான் கையொப்பம் இடுவார்.

பணத்தின்மீதும் ஒருகண் வைத்திருந்தார். இன்று அவர் தேடி சேர்த்து வைத்த சொத்து நீங்கள் அறிந்ததுதான்.

நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,


பாரதியார் பணம் சேர்ப்பது குறித்து கணப்பொழுதேனும் சிந்தித்திருக்கவில்லை. அவரது துணைவியார் பக்கத்துவீட்டில் கடனாக வாங்கி வைத்திருந்த அரிசியையே, “காக்கை குருவி எங்கள் சாதி..” என்று பாடியபடி முற்றத்தில் சிதறவிட்டுக் குருவிகள் தின்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர். ஆனால் எண்ணத்தை முறைப்படி வானத்தில் அனுப்பாமல் வறுமையில் உழன்றார். இதில் தவறேதும் இல்லை என்றாலும் பணம் சம்பாதிக்கும் நுட்பத்தை அவர் கைக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

பணத்தை உணர்ந்து மதிப்போம், வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.

23 comments:

கலையரசன் said...

நீங்க கவலை படவேண்டாம்! பாதி பேரு பணத்தை உயிரை விட மேலாக மதிக்கறாங்க!!
:-/)

கதிர் - ஈரோடு said...

நம்மாளுங்க பெரியாரை விட நிறைய சம்பாதிக்கிறாங்க சக்தி....

ஆனா.. எல்லாமே கருப்பா இருக்காம்

நிகழ்காலத்தில்... said...

\\ கலையரசன் said...

நீங்க கவலை படவேண்டாம்! பாதி பேரு பணத்தை உயிரை விட மேலாக மதிக்கறாங்க!!
:-/)\\

:))))

நம்மள மாதிரி மீதிப்பேருக்காவது பயன்படும் என்கிற எண்ணத்தில்தான்...

நிகழ்காலத்தில்... said...

\\கதிர் - ஈரோடு said...

நம்மாளுங்க பெரியாரை விட நிறைய சம்பாதிக்கிறாங்க சக்தி....

ஆனா.. எல்லாமே கருப்பா இருக்காம்\\

அதுதான் உலகறிந்த விசயமாச்சே :))

தமிழன் எதையும் ஏற்றுக்கொள்வான் :))

ஈர வெங்காயம் said...

கைக்கு கை மாறும் பணமே உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே....

--

கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் -
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்...

ஷண்முகப்ரியன் said...

பணத்தைச் சம்பாதிக்க இயலாதவன் பணத்தைப் பற்றிப் பேசத் தகுதியை இழந்தவன் என்பதே எனது கருத்து.

எப்போதும் ஒரு இயலாமை ஒரு தகுதியாகி விட முடியாது.
ஏழையாய் இருப்பவன்தான் ஏழைகளின் பிரதிநிதியாக இருக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
யாராலுமே காதலிக்கப் படாதவன் தான் காதலில் தோல்வி உற்றதாகச் சொல்லிக் கொள்வதைப் போல இது!.

குடும்பம் நடத்த முடியாதவன் சாமியாராவதும்,கையாலாகாதவன் அஹிம்சை பேசுவதும்,உண்ண முடியாதவன் விரதம் இருப்பதும்,சாகப் போகிறவன் வாழ்வே மாயம் என்பதும் இங்கே தினசரி நடக்கும் நகைச்சுவைக் காட்சிகள்.

ஆமாம்,பின்னூட்டம் அளவுக்குப் பதிவுகளை எழுதி விட்டுப் பதிவுகள் அளவுக்குப் பின்னூட்டங்கள் வாங்கும் வித்தையை எங்கு கற்றீர்கள்,சிவா!

நிகழ்காலத்தில்... said...

\\ஈர வெங்காயம் said...

கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்..\\

இதிலிருந்தும் வெளிவரப் பழகிக்கொண்டால் பணம் நமக்கு என்றுமே அடக்கம்தான்.,

நன்றி ’ஈரவெங்காயம்’ அவர்களே !!

நிகழ்காலத்தில்... said...

\\ ஷண்முகப்ரியன் said...

பணத்தைச் சம்பாதிக்க இயலாதவன் பணத்தைப் பற்றிப் பேசத் தகுதியை இழந்தவன் என்பதே எனது கருத்து.\\

என் கருத்தும் இதேதான்..

\\ஏழையாய் இருப்பவன்தான் ஏழைகளின் பிரதிநிதியாக இருக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.\\


ஏழையாய் இருந்து பணக்காரர் ஆனவரே பிரதிநிதியாக பொருத்தமானவர் ...

\\யாராலுமே காதலிக்கப் படாதவன் தான் காதலில் தோல்வி உற்றதாகச் சொல்லிக் கொள்வதைப் போல இது!.\\

சரியாகச் சொன்னீர்கள், இதுபோன்ற உதாரணங்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துகிறது, பரந்த விரிந்த இந்த பார்வையே நீங்கள் யாரோடும் முரண்படாமல் செல்வதன் இரகசியம்!!! சரியா :))

\\குடும்பம் நடத்த முடியாதவன் சாமியாராவதும்,\\

வேதாத்திரி மகானுக்கு இரு மனைவியர்கள்... இவரே குடும்ப அமைதியைப் பற்றி எடுத்துச் சொல்ல நான் பொருத்தமானவன் என்றே சொல்லி இருக்கிறார்.


கையாலாகாதவன் அஹிம்சை பேசுவதும்,உண்ண முடியாதவன் விரதம் இருப்பதும்,சாகப் போகிறவன் வாழ்வே மாயம் என்பதும் இங்கே தினசரி நடக்கும் நகைச்சுவைக் காட்சிகள்.

\\ஆமாம்,பின்னூட்டம் அளவுக்குப் பதிவுகளை எழுதி விட்டுப் பதிவுகள் அளவுக்குப் பின்னூட்டங்கள் வாங்கும் வித்தையை எங்கு கற்றீர்கள்,சிவா!\\


ரொம்பக் குளிருதுங்க சகோதரரே :)))

bala said...

//நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,//

அறிவே தெய்வம் அய்யா,

நம்ம பெரிய தாடியார் செய்த "நேர்மையான" தொழில் என்ன?தீவிரவாதமா,அரசியலா,கொள்ளையடிப்பதா?இல்லை எல்லாம் சேர்ந்த கலவையா?
தொழிலில் தாடியாரின் ப்ராதான சிஷ்யன மஞ்ச துண்டு குருவை மிஞ்சி எஙகேயோ போய்விட்டதால் மஞ்ச துண்டை கருப்பு சட்டை தமிழர்கள் தங்கள் "பெரிய தந்தை அண்ணா பெரியார்" என்று பட்டம் கொடுத்து அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

பாலா

ஸ்வாமி ஓம்கார் said...

எனக்கு பணம் என்றாலே வெறுப்பு...
அதை கையில் தொடுவதற்கே அறுவெறுப்பு ஏற்படுவதால் என் வங்கி கணக்கு என்ற குப்பைத்தொட்டியில் வீசி விடுவேன்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சொல்லுங்கள் அதே குப்பைத்தொட்டியை காண்பிக்கிறேன். வீசிவிட்டு போங்கள்.

:)

கோவி.கண்ணன் said...

:)

பணம் சம்பாதிக்க 1000 வழிகள், குணம் ? அதுக்கு ஒரே ஒரு வழி.....நடத்தையால் வருவது.

கோவி.கண்ணன் said...

பைனான்ஸ் கம்பெணிகள் பணத்தின் மீது தான் கண்ணாய் இருக்கின்றன சிவா.
:)

நிகழ்காலத்தில்... said...

Blogger bala said...

//நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,//

அறிவே தெய்வம் அய்யா,

நம்ம பெரிய தாடியார் செய்த "நேர்மையான" தொழில் என்ன?தீவிரவாதமா,அரசியலா,கொள்ளையடிப்பதா?இல்லை எல்லாம் சேர்ந்த கலவையா?\\


பெரியாரை, பணத்தை எப்படி மதித்து
வரவைப்பது என்பதற்கு மட்டுமே இங்கு உதாரணமாக காட்டி உள்ளேன்.

எனக்கு நல்லவை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது எல்லாவற்றிலும்...:)))

\\தொழிலில் தாடியாரின் ப்ராதான சிஷ்யன மஞ்ச துண்டு குருவை மிஞ்சி எஙகேயோ போய்விட்டதால் மஞ்ச துண்டை கருப்பு சட்டை தமிழர்கள் தங்கள் "பெரிய தந்தை அண்ணா பெரியார்" என்று பட்டம் கொடுத்து அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.\\

மஞ்சள் துண்டு இரகசியத்தைப் பற்றி ஏதாவது ஸ்வாமிகளிடம் கேட்டால்தான் தெரியும், கலைஞர் எவ்வளவு தீவிரமான ஆன்மீகவாதி என்பது..:)))

நன்றி பாலா வருகைக்கும் கருத்துக்கும்..

நிகழ்காலத்தில்... said...

\\ ஸ்வாமி ஓம்கார் said...

எனக்கு பணம் என்றாலே வெறுப்பு...
அதை கையில் தொடுவதற்கே அறுவெறுப்பு ஏற்படுவதால் என் வங்கி கணக்கு என்ற குப்பைத்தொட்டியில் வீசி விடுவேன்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சொல்லுங்கள் அதே குப்பைத்தொட்டியை காண்பிக்கிறேன். வீசிவிட்டு போங்கள்.\\

தாங்கள் அல்ட்ரா மாடர்ன் சாமியார் அல்லவா...காலத்துக்கேற்ற மாற்றம்..

குப்பை ரொம்ப சேரக்கூடாது... தொட்டி என்றாவது நிரம்பினால் கூப்பிடுங்கள்..

வந்து வாரிக்கொள்கிறேன்..

வாழ்த்துக்கள் நண்பரே

நிகழ்காலத்தில்... said...

\\கோவி.கண்ணன் said...

:)

பணம் சம்பாதிக்க 1000 வழிகள், குணம் ? அதுக்கு ஒரே ஒரு வழி.....நடத்தையால் வருவது.\\

குணம் இருந்தும் பணம் சம்பாதிக்கவே இந்த வழிமுறைகள்..
பாரதி, பெரியார் இவர்களின் குணத்தையும் உதாரணமாக எடுத்து ஆராய்ந்து பாருங்களேன்...
:)))

நிகழ்காலத்தில்... said...

\\பைனான்ஸ் கம்பெணிகள் பணத்தின் மீது தான் கண்ணாய் இருக்கின்றன சிவா.
:)\\

தொடர்ந்து பாருங்கள் அவற்றின் நிலையை....

வளர்வதாக எடுத்துக்கொண்டால் அதைப்பார்த்து கற்றுக்கொள்வோம்.

அநியாய வட்டி வாங்குவதாக வைத்துக்கொண்டால் அதன் வருங்காலம் என்ன என்பதையும் பாருங்கள்..!!

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

பதிவில் உள்ள விஷயங்களுக்கு வந்தபின்னூட்டங்கள்
அத்தனையும் மிக மிக சிறப்பு.
ஷண்முகப்பிரியன் , ஸ்வாமி சிரிக்க வைத்தார்கள்
சிந்திக்க வைத்தார்கள்.

நிகழ்காலத்தில்... said...

\\ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

பதிவில் உள்ள விஷயங்களுக்கு வந்தபின்னூட்டங்கள்
அத்தனையும் மிக மிக சிறப்பு.
ஷண்முகப்பிரியன் , ஸ்வாமி சிரிக்க வைத்தார்கள்
சிந்திக்க வைத்தார்கள்.\\

ஏன் கண்ணனை விட்டுவிட்டீர்கள் :))

சிவன், முருகன், கண்ணன் என கடவுள்களின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு :)))

அவர்களுக்கு எல்லாம் நான் வைத்த ஐஸ்-ஆல் சளியே பிடித்திருக்கும்:))

நண்பர் ஜோதிஜி வருக, அடிக்கடி வருக, ஏதாவது சொல்லிட்டு போங்க
என்னை செதுக்க உதவியா இருக்கும்

வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

நண்பர் ஜோதிஜிக்காக ஒரு தத்துவம்

எனக்கு ஒபாமவ பத்தி தெரிஞ்சா எனக்கு பலன் அதிகமா ?

ஒபாமாவுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சா எனக்கு பலன் அதிகமா :)))

சிங்கக்குட்டி said...

தலைவர்கள் பணம் சம்பாரிக்க கட்சி (ஸாரி..ஸாரி) காட்சி பொருளாகி வெகு நாளாகி விட்டது,

அது போல இப்போது பணமும், அது இருக்கும் இடத்தில் மட்டுமே வளரும்படி வியாதியக்கப்பட்டு விட்டது.

நிகழ்காலத்தில்... said...

சிங்கக்குட்டி

அரசியல் ஒரு தொழில்,

இருக்கும் இடத்தில்தான் வளரும் என்பது வியாதி அல்ல, விதி

எனவேதான் நம்மிடம் தேவையான பணம் இருக்கவேண்டும் :))

வருகைக்கு நன்றி

BOSS said...

nalla ennam ungaluku

very good
keep it up

puthiyavann.blogspot.com
gurublack.wordpress.com

நிகழ்காலத்தில்... said...

\\BOSS said...

nalla ennam ungaluku\\

அப்படியே நாமும் முன்னேறிக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் :)))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி